கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞரைக் காலம் அழைத்துக் கொண்டது!

இன்று மாலை 6.10 அளவில் கலைஞர் (94) காலமான சேதி காற்றில் பரவியது! மூப்பில் நிகழும் முடிவுதானெனினும், இதயம் ஏற்குமா என்ன? அழுத கண்களும் தொழுத கைகளுமாய் சென்னை காவேரி மருத்துவமனையில் மக்கள் கூட்டம்! இனப் பகைவர்களுக்கோ கொண்டாட்டம்!


ஒன்றைப் புரிந்து கொள்வது பகைக்குலத்துக்கு இயலாது!

'கருணாநிதி ஒழிந்தால் திராவிட இனவெழுச்சி ஒழிந்துவிடும்' எனும் மந்தபுத்தி நகைப்புக்குரியது! கலைஞர் ஒரு தனி மானுடரல்லர்; அவரொரு சமூக நீதிக் கோட்பாடு, சிந்தனைப்புரட்சியின் நீட்சி!

அவரது கொள்கைகளை மேலதிக தீரமூடன் மேற்செலுத்த பல்லாயிரம் களவீரர்கள் உள்ளனர்!

அதன்றியும், அவர் புகழை அணையாது கொண்டு செல்ல எம்ஜியார், ஜேஜே போன்று "பின்தொடர்ச்சி நில்லாத" பெருங்குடும்ப உறுப்பினர்கள், பெயரன் பெயர்த்திகளுமுண்டு!


ஆக, முன்பை விட வீரமாய், எழுச்சியுடன் பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த வழியில் ஒரு பெருங்கூட்டம், திராவிடத்தமிழின மீட்சிக்கான பாதையில் அயராது தொடரும்! அதில் ஒரு அய்யமும் எவருக்கும் இருக்கவியலாது!


வாழ்க கலைஞர்! வாழ்க தமிழ்!

அவரது புகழுடல், தமிழுடன் சேர்ந்தே வாழும்!

யோஜென்பால்கி 
www.yozenmind.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: