Translate this blog to any language

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை NEP ஒரு குலக்கல்வித் திட்டமே!

*📌 5+3+3+4*


*📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியை பறிக்கும் குலக்கல்வி கணக்கு.*


*📍 புதிய கல்விக் கொள்கை 2020.*📍


*Pre kg*
*LKG*
*UKG*
*1st*
*2nd*


*📌 மொத்தம் 5 வருட தொடக்கக் கல்வி.*


*3rd*
*4th*
*5th*


*📌 பிறகு நாடு முழுவதும் 5 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*6th*
*7th*
*8th*


*📌 பிறகு நாடு முழுவதும் 8 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*9th*
*10th*
*11th*
*12th*


*📌 இவற்றில் 10, 11,12 ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு.*


*📌 இத்தனை பொதுத்தேர்வுகளையும் தாண்டினால்தான் கல்லூரிக்குள் நுழைய முடியும்.*


*📌 கல்லூரிக்குள் நுழையவே ஒரு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்..*


*📌 18 வயதுவரை உள்ள அனைவரும் குழந்தைகள்தான்.*


*📌 12-ம் வகுப்பு மாணவன் 17 வயதுக்குள் இத்தனை தேர்வுகளை எழுதிதான் கல்லூரிக்குள் நுழைய முடியுமா?..வேண்டுமா???...*


*📌 நம் நாடு ஏழைகளை மட்டுமே கொண்ட ஒரு நாடு.*


*📌 இங்கே மூன்று வேளையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கும் குடும்பங்கள்தான் அதிகம்.*


*📌 அவர்களின் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புவதே தங்கள் குழந்தைக்கு மதிய உணவு கிடைக்கும் என்றுதான்.*


*📌 அப்படிப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்த இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச செருப்பு,இலவச பஸ்பாஸ் என்று ஏறாலமாக கொடுத்ததுதான் நம் திராவிடம் கடந்த 50 வருடங்களாக கல்விக் கொள்கையில் சாதனைகள் செய்து வருகின்றன.*


*📌 அதைத்தான் தற்போது மாற்ற முயற்சிக்கின்றார்கள்.*


*📌 தங்கள் குழந்தைகள் தங்களை போன்றுஅல்லாமல்...*


*📌 படித்து பெரிய டாக்டராகவோ, கலெக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவு.*


*📌 நிற்க!!.*


*📌 8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடையும் ஒரு ஏழை மாணவன் தன் சக நண்பர்களால் கேலி செய்யப்பட்டால் அவன் மீண்டும் பள்ளிக்கு வராமல் போகலாம்.*


*📌 இருமுறைக்கு மேல் தோல்வியடைந்தால் பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல் தாங்கள் என்ன தொழில் செய்கின்றனரோ அதே வேளையை பார்க்க அழைத்துச் செல்வார்கள்.*


*📌 உதாரணமாக முடி வெட்டுபவரின் மகன் சலூன் கடைக்கு சென்று முடிவெட்ட கற்றுக் கொள்வான். பிறகு அந்த வயதில் கொஞ்சம் காசு பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.*


*📍 அதன் பிறகு அந்த குழந்தை படிப்பதை நிறுத்திவிடும். இதற்கு பெயர்தான் குலக்கல்வி என்று பெயர்.*📍


*📌 நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் சூத்திர பஞ்சமர்களே!!*


*📌 அவர்களின் குழந்தையின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டால்...*


*📌 பிறகு கல்லூரிக்குச் செல்ல ஆள் இருக்க மாட்டார்கள்...*


*📌 அல்லது போட்டியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.*


*📌 இதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் உயர்சாதியினர் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.*




*📌 ஏற்கனவே கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் இனி கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்படும்.*


*📌 தரத்தை கூட்டுகின்றேன் என்று போட்டியாளர்களை குறைப்பதே அவர்களின் நோக்கம்..*


*📌 கற்கை நன்றே!..*
*கற்கை நன்றே!!..*
*பிச்சை புகினும் கற்கை நன்றே!!..*
*என்ற வார்த்தைகள் இனிவரும் காலங்களில் காணாமல் போகலாம்.*


*📌 ஏனெனில் இனிமேல் பிச்சையெடுத்தெல்லாம் கல்வி கட்டணம் நம் நாட்டில் செலுத்த முடியாது..*


*📍 ஏழையா பொறந்த உனக்கெதுக்குடா படிப்பு என்று அரசே கேள்வி கேட்பதுபோல் உள்ளது.!!*📍


*📌 எனக்கு ஐந்தாம் வகுப்புவரை ABCDEF யை தவிர ஆங்கிலத்தில் எதுவும் படிக்க தெரியாது.*


*📌 ஆனால்..*


*📌 பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.*


*📌 இன்று போல் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தால்??....*


*📌 அன்றே என் பள்ளிப்படிப்பு முடிந்திருந்தாலும் முடிந்திருக்கலாம்.*


*📌 இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஒரு குழந்தை 5 ம் வகுப்பில் படிக்காதது 8 ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கும் 8 ம் வகுப்பில் படிக்காத குழந்தை பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும்....*


*📌 எனவே...*


*📌 அவர்களை பிஞ்சிலேயே கல்வி கொள்கை( கொள்ளை ) என்ற பெயரில் கசக்கி பிழிவது சரியல்ல!!..*


*📌 அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ளது போல் 10,12 ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தினால் போதும்.*

எவரோ ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அருமையாக எழுதி இருந்தார்! அது இதுதான்!

YozenBalki

செவ்வாய், 23 ஜூன், 2020

ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்...!!


சென்னை என்றாலே இப்பொழுது பிற மாவட்டத்தை/மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள்; சென்னையை தூற்றி வேறு பேசுகிறார்கள்!

காரணம்... சென்னையில்தான் அதிக தொற்று என்று புள்ளிவிவரங்கள் காட்டப்படுகின்றன!

சென்னையை விட பலவகையிலும் நகர கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, கல்வி வேலைவாய்ப்பு வசதிகள், மற்றும் நாகரீகம் குறைந்த வடநாட்டு நகரங்களை விட சென்னையில் அதிக நோய்த்தொற்று இருக்கிறது என்கிறார்கள், இதை நம்ப முடிகிறதா? 

சரி அது அப்படியே இருப்பதாக நம்புவோம்! 
இங்கு இருப்பவர்கள் நூற்றுக்கு 80%-90% தமிழகத்தின் பிற  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்! அப்புறம் எப்படி சென்னை மக்கள் மீது பழி போடுகிறீர்கள்?
சென்னை மக்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள்?

சரி! அப்படிப்பட்ட சென்னையில் இன்று வசிப்பவர்களில் சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர்கள் எத்தனை சதவீதம்! 
இங்கு பத்தில் எட்டு பேர் முதல் ஒன்பது பேர் வரை பிற மாவட்டங்களிலிருந்து பிற மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; சென்னையை பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள்!
எல்லோரையும் வரவழைத்து வாழ்வு தந்தது, நாளைக்கும் வாழ்வு தர இருப்பது சென்னை எனும் அன்னை தான்! 

நீங்கள் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருக்கலாம்! நீங்கள் மிகப் பெரிய சினிமா நடிகராக இருக்கலாம்! வந்து சேர்ந்த உங்களில் 99% பேருக்கு சோறு போட்டது சென்னை!

அதை மறந்து விடாமல் சென்னை மீது ஒரு நன்றி உணர்ச்சியோடு பேசுங்கள்! 

வள்ளுவர் எழுதிய செய்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை ஒருமுறையாவது படிக்கவும்!

நீங்கள் சென்னைக்கு வராவிட்டால்...
Ha! Ha! Ha!
"ஆற்றோடு கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போனால்..."
யாருக்கு நட்டம் ஆகி விடும்?

உண்மையில், நீங்கள் நகர்ந்து நின்றால் கொஞ்சம் காற்று வரும்!

டாட்!!

YozenBalki
Senior Psychologist
😍😍🙏🙏

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரே காற்றில் மனித மீன்கள்!

சிரிப்பாய் இருக்கிறது
ரொம்பவே சிரிப்பாய்
இருக்கிறது!

தெருவில் வீட்டில் 
வசிக்கும் பூனைகள் 
நாய்கள் பறவைகள் 
நான்கு, மூன்று 
ஈரறி(வு) உயிர்கள் 
முகமூடி அணியாமல் 
நம்முன் வாழ்கையில் 
அவைமுன் னுயர்ந்த
மானுடம் கூனி
முடங்கிக் கிடைக்கையில்
சிரிப்பாய் இருக்குது!

















"ஒரே காற்றில் 
ஒரே கடலில் 
வாழும் மீன்களில் 
மனித மீன்கள்" 
மட்டுமே பாவம் 
இத்தனை மெலிவாய்
பூமியில் கிடந்து 
அல்லல் உறுவதை 
காண்கையில் எனக்கு 
வகை வகையாக 
சிரிப்பே வருகுது!

இராக்கெட் என்ன?
ஏவுகணை எ(ன்)ன?
கப்பல் விமானம் 
அறிவியல் என்ன?
எல்லாம் இருந்தும் 
இல்லா திருக்கும் 
நிம்மதி என்ன?
ஆறறிவு என்ன?

நாமே வளர்க்கும் 
நாய்களும் பழிக்கும் 
மூடிய கவசம்
முடியா முடக்கம் 
நீண்டிடும் பூமியில்
காதுகள் வழியாய்
நுழையா தொற்றை!!
நம்பிடும் பதர்களாய்
அரசர் அறிஞர்கள்
சாமிகள் சாமியார்
அனைவரை மிரட்டும்
ஓரணு உயிரியை
சிந்துபாத் கதையை
பார்க்கையில் எனக்கு
கழுதை சிரிப்பாய் 
சிரிப்பு வருகுது!

-பால்கி

ஞாயிறு, 10 மே, 2020

தமிழ் படிக்க ஒரு பிறவி போதாது!


தமிழ்த் தாயே! 
உன்னைப் படிக்க ஒரு பிறவி போதாது! 
🍀🌸 🌈🌈 🍀🌸
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர்அனுபூதி
10. கந்தபுராணம்
11.பெரியபுராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!


1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

சனி, 28 மார்ச், 2020

Virus: அச்ச நெருப்பை அச்சில் ஏற்றும் பேராசை!

எதை வேண்டுமானாலும் 
விற்று பணமாக்கிவிட 
முடிகிறது அவர்களால்!
அதுபோன்றே
தெளிந்த உண்மைகளைத்
தெளித்து விடவும்
முடிவதில்லை நம்மால்!

ஒருதுளி நெருப்பை 
கோடை காலத்து 
இலையுதிர் காட்டில் 
வைத்தால் போதும்! 
என்ன நடக்கிறது 
என அறியும் முன்னே 
எரிந்து போகிறது காடு! 
நாடும் அங்ஙனமே!

அச்ச நெருப்பை 
அச்சில் ஏற்றி விதவிதமாகப் பரப்பினால் போதாதா,
விற்க முடியாதவை எல்லாம் 
விற்றுப் போய்விடுமே!


இனி விற்பனையில் வரும் 
உலக சந்தைக்கு ஒன்று!

நோயில் நொந்து 
"அவ்விடம்" போனவன், 
சீரிய அறிவினன் 
கொடுத்து வைத்தவன்! 

இருப்பவர் கோடிதான் 
இல்லாமலாகி 
இருந்த மதிப்பும் கெட்ட புழுக்களாய் பூமியின் மீதில் 
அகதிகளாகியே 
அல்லல் படுகிறார்!

உறிஞ்சும் அட்டைக்கு 
செந்நீரோ கண்ணீரோ 
எல்லாம் ஒன்றுதான்!
பணத்தை நோக்கியே ஓடும் முதலைக்கு பற்கள் பெரிதன்றோ?

தேவையோ இல்லையோ 
தேவைக்கு மீறியே ஏழைகளை 
அடித்து உலையில் போடுகிறது உலகப் பேராசை!

பெரிய நாடகம் இறைவன் போட
"அதுகளே" போட்ட நாடகம் என்று கரிய பாம்புகள் கருதுகின்றன பாவம்!


குண்டு போடும் விமானங்களுக்கும் மேலாய் 
விசும்பில் சிரித்தபடி
குறி பார்த்து நிற்கும் கூற்றுவன்
நீ அறிகிலாய்!

நீ போடும் கணக்கெல்லாம் உனக்கே பிணக்காய் உடனே திரும்பும் பார்! 
உன் வரவுப் புத்தகத்தில் செலவின் பக்கத்தில் இதை அழுத்தி எழுதிக் கொள்ளேன்!

"நல்ல நாடகமே எனினும் 
கொள்ளை முடிந்து பங்கு பிரிக்கும் நேரம் நெருங்குகையில் இலாபக் கணக்குகளைச் எழுத முடியாதபடி உங்கள் உட்பிரிவில் உயிர்-மை தீர்ந்திருக்கும்!"

ஆனாலும் எப்பொழுதும் போலவே பசுமை போர்த்திய இந்த பூமியில் அருவிகளின் இசையையும், பறவைகளின் பாடல்களையும் 
கேட்ட வண்ணம் நடக்கும்
அந்தக் கள்ளம் கபடறியா ஏழைகளின் ஓய்வறியாப் பாதங்களை 
இறைவன் தொழுதிருக்க 

நெடும் பயணமது 
நில்லாமல் தொடரும்!

-யோஜென் பால்கி

திங்கள், 23 மார்ச், 2020

பயத்தை விரட்டாமல் நோயை விரட்ட முடியாது!


நண்பர்களே!

அரசும், மருத்துவர்களும் சொல்கிற பாதுகாப்பு முறைகளை தவறாமல் கடை பிடியுங்கள்! 

கீழே மருத்துவர்களால் சொல்லப்பட்ட சில எளிய உணவு முறைகளைப் பின்பற்றுங்கள்!


அதே சமயம் நீங்கள்,

1. எப்பொழுதும் அந்த 'கர்ண-பரம்பரைக்' கதைகளை கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! 

2. அந்தக் கதைகளை கொஞ்சமாவது தொடர்ந்து கேட்பதைப் பார்ப்பதைத் புறந்தள்ளுங்கள்! 

3. மற்றவர்களுக்கு உதவி செய்வது விளையாடுவது, மனம் விட்டு சிரிப்பது இவைதான் உங்கள் உள்ளத்தை உடலை,  ஆரோக்கியமாகவும் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும்! 

4. எதிர்மறை செய்திகளை தொடர்ந்து கேட்டு உங்கள் மன உறுதியைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்! 
அது உங்கள் நனவிலி மனத்தில் (Subconscious Mind) தேவையற்ற, நீண்டகால அடிப்படையிலான தீய தாக்கத்தை ஏற்படுத்தும்!

5. நகைச்சுவை காட்சிகளை அதிகம் பாருங்கள், வாய்விட்டு சிரியுங்கள்!

6. தன்னம்பிக்கை தரும், மகிழ்ச்சி தரும் புத்தகங்களை படியுங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் படித்துக் காட்டுங்கள்!

7. எப்பொழுதும் உங்கள் கவனத்தை மூக்கு மற்றும் தொண்டையின் மீது வைத்துக் கொண்டு, இல்லாத நோயை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு கலங்காதீர்கள்!

8. "பயம் என்ற ஓட்டை வழியாகத்தான் நோய் என்ற ஒன்று வந்து நுழைகிறது"!

9. உங்களுக்கு நம்பிக்கை தருகின்ற அறிவியலோ அல்லது ஆன்மிகமோ, எதையோ ஒன்றை அல்லது இரண்டையுமே கூட கைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்!

10. இயற்கை அல்லது இறைவன் உங்கள் குடும்பத்துக்கு நல்லதே செய்வார் என்று நம்புங்கள்! "நம்பிக்கையை" விட மிகப்பெரிய சக்தி இந்த உலகில் வேறு எதுவும் இல்லை!

🍀🌸😇😇
அன்புடன் 
யோஜென் பால்கி
(உள இயல்)

சனி, 14 மார்ச், 2020

"திரு" என்று தமிழில் துவங்கும் அழகிய ஊர்ப் பெயர்கள்!


திரு அம்பர்மாநகர்
திரு அரத்துறை
திரு ஆப்பாடி
திரு ஆலங்காடு
திரு ஆலவாய் நல்லூர்
திரு ஆவணம்
திரு ஆவிநன்குடி
திரு ஆனைக்கா
திரு எவ்வுள்
திரு எடகம்
திரு ஏரகம்
திரு ஐயாறு
திருக்கச்சூர்
திருக்கடவூர்
திருக்கடையூர்
திருக்கண்டியூர்
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்டீச்சுரம்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணன்குடி

திருக்கண்ணமங்கை
திருக்கயிலாயம்
திருக்கருகாவூர்
திருக்கழிப்பாலை
திருக்கழுக்குன்றம்
திருக்களர்
திருக்காரிகுடி
திருக்காரிக்கரை
திருக்காவலூர்
திருக்காளத்தி மலை
திருக்குவளை
திருக்குறுங்குடி
திருக்கோடிகா
திருக்கோணமலை
திருக்கோலக்கா
திருக்கோவலூர்
திருக்கோழீச்சுரம்
திருக்கோளிலி
திருச்சம்பள்ளி
திருச்சாத்தமங்கை
திருச்சாத்துறை
திருச்சானூர்

திருச்சாய்க்காடு
திருச்சிரபுரம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிற்றம்பல நல்லூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றேமம்
திருச்சீர் அலைவாய்
திருச்சுகனூர்
திருச்சுரம்
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்குன்றம்
திருச்செங்கோடு
திருச்செந்தில்
திருச்செந்துறை
திருச்செந்தூர்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சேலூர்
திருத்தண்கா
திருத்தணிகை
திருத்தவத்துறை
திருத்தளூர்