குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?
பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?
குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்...வந்து....!
பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து...உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?
குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்... நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்...எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்...தொட்டியில வளராதுன்னு...உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?
பத்ரி: அடேய்...குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா...அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு "வேவு" பாத்தபடியே இருக்கியே...அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!
குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு...உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!
பத்ரி: டேய் என்ன உளர்ற?
குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே.....(Contd..)