Saturday, January 9, 2021

தமிழ்: "சும்மா" என்பதில் 15 அர்த்தங்கள்

*சும்மா* இதை படியுங்கள் 
நிச்சயம் நீங்கள் *அசந்து போவீர்கள்* – 
இது தான் தமிழ் மொழியின் சிறப்பு:-

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.*
இவை அனைத்தையும் விட *தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. 
*மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த பீடிகை தொடர்ந்து படியுங்கள் புரியும்,

**சும்மா**... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,

 
அது சரி *சும்மா* என்றால் என்ன? 


அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த *சும்மா*. 


பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள *ஒரு வார்த்தை இது.*


*சும்மா* என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள் உண்டு* வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, 

நாம் அடிக்கடி கூறும் இந்த *சும்மா* எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - *சும்மா* (அமைதியாக) இருங்கள் – *Quiet*

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் *சும்மா* இருக்கின்றேன் - *Leisurely*

3. உண்மையில் - *சும்மா* சொல்லக்கூடாது அருமை - *in fact*

4. *சும்மா* ( இலவசமாக) கிடைக்காது - *Free of cost*

5. பொய் - *சும்மா* கதை அளக்காதே - *Lie*

6. உபயோகமற்று - *சும்மா* தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - *Without use*

7. அடிக்கடி - *சும்மா* *சும்மா* சீண்டுகின்றான் இவன் - *Very often*

8. எப்போதும் - இவன் இப்படித்தான் *சும்மா* சொல்லுவான் - *Always*

9. தற்செயலாக - ஒன்றுமில்லை *சும்மா* சொல்கின்றேன் - *Just*

10. காலி - இந்த பெட்டி *சும்மா* தான் இருக்கின்றது - *Empty*

11. மறுபடியும் - சொன்னதையே *சும்மா* சொல்லாதே - *Repeat*

12. ஒன்றுமில்லாமல் - *சும்மா* ( வெறும்கையோடு) போகக் கூடாது - *Bare*

13. சோம்பேறித்தனமாக - *சும்மா* தான் இருக்கின்றோம் - *Lazily*

14. நான் வெட்டியாக (*சும்மா*) ஏதாவது உளறுவேன் - *idle*

15. விளையாட்டிற்கு - எல்லாமே *சும்மா* தான் சொன்னேன் - *Just for fun*

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *சும்மா* என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது *சும்மா* இல்லை

*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு *சும்மா* பிடித்து இருந்தால் *சும்மா* ஒரு Forward பண்ணுங்கள்..
 
*சும்மா* பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள..

..,*❤🙏❤
Source from
What's up University
With all gratitude to the unknown writer.

Monday, January 4, 2021

என்னைத் தாயாக்கி எனக்கருளி நின்றவளே!சின்னதோர் தேவதையே 
சிறுமுகிலே ஓவியமே!

எனக்கென்றே இறைவனவன்
எடுத்துவைத்த பேரழகே!

வண்ணப் பைங்கிளியே
வாசமிகு ரோசாவே!

உன்னை நினைத்திருக்க
உசிரெல்லாம் இனிக்குதடி!

என்னப் பெருந்தவமோ
எப்படிநீ கிடைத்தாயோ!

எண்ணியெண்ணி மருகுகிறேன் 
உள்ளமெலாம் உருகுகிறேன்!

என்னைத் தாயாக்கி 
எனக்கருளி நின்றவளே!

உன்னைப் பெற்றதனால் 
எல்லாமும் பெற்றேன்யான்!

எப்படி உனை சீராட்ட
ஒருமடிதான் உள்ளதடி! 

பெருமையடி உன்னாலே
கண்படுமோ அதனாலே! 

உன்னை எனக்களித்த 
இறைமை நினைந்திருப்பேன்!  

காலமுள நாள்வரையும்
உன்விழிகள் பார்த்திருப்பேன்! 

-YozenBalki
(ட்விட்டரில் ஒரு போட்டி! அதற்கு நேற்று எழுதி அனுப்பினேன் தோழரே! 🌸🌸🙏🙏)வீட்டுக்கு ஒரு சிறு நூலகம் தேவை!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது. "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி!

பெண்களிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தைக் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்!

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் "இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம்", பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா!

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்!!

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்!

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்!

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்!

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
🌸🌸
(-வாட்ஸ் அப் பல்கலைக் கழகத்தில் இருந்து கிடைத்தது!! MBK 🙏🙏)