Translate this blog to any language

வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழின் சிறப்பு இயல்புகள் !



நண்பர்களே!
நான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது

தமிழ் பற்றி
நிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!




http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

அன்புடன்
மோகன் பாலு.
சென்னை.

திங்கள், 13 ஜூலை, 2009

எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்


எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.

முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!

மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay

வெள்ளி, 12 ஜூன், 2009

நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!


நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!

எனது இளைய மகள் .பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.

அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)

அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.

இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )

(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)

Also click here to visit the URLs:http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11498
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)


என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.

வெள்ளி, 29 மே, 2009

இந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு !



ஜெனீவா, வியாழன், 28 மே 2009( 12:38 IST )





சிறிலங்க படையினர் நடத்திய தமிழினப் படுகொலை உள்ளிட்ட மனித
உரிமை மீறல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்ததால்,
அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
ஆணைக்குழுவில் கடந்த 2
நாட்களாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய
மனித உரிமை மீறுல்கள்
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய
நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து முன்வைத்தது.


இந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது ஈழத் தமிழர்களுக்கு
எதிராகவும் ராஜபக்ஷே-வை
ஆதரித்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
செயல்பட்டு வந்தன.

இதனால
், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள்
எழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர்
அது நேற்று மாலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது எஆழத் தமிழர்களின்
நியாயமான உரிமைகளை
ஆதரித்து மேற்குலக நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்த
, ஜெர்மனி,
இங்கிலாந்த
, பிரான்ஸ, இத்தாலி, கனட, சிலி, மெக்ஸிகோ
உள்ளிட்ட
நாடுகள் வாக்களித்தன.


ஆனால் இந்த நல்லதொரு தீர்மானத்திற்கு எதிராக இந்திய,
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய, கியூப,
ரஷ்யா,
ஆப்ரிக்க உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வாக்களித்தன
.
(இதில் தமிழர்கள் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம்
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய
போன்ற நாடுகள்
இந்தியாவின் பகை நாடுகள்-மற்றும் போட்டி நாடுகள்...இந்தோனசியாவில்
சமீபத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்
பட்டதும் நினைவிருக்கலாம்)

மற்ற 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும்
எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்க அரசாங்கத்திற்கு
எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல்
போனது.


அதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்க அரசாங்கமும்
தனது ஆதரவு நாடுகளின்
ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம்
ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.


சிறிலங்க அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த
தீர்மானத்திற்கும் இந்தியா
உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக
வாக்களித்தன.


ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.


எனினும் வாக்கெடுப்பின் முடிவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும்
தீர்மானத்திற்கு ஆதரவாக
27 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
ராஜபக்சேவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்ட
து.


இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 தற்காலிக பிளாஸ்டிக்
முகாம்களில்
3 லட்சம் மக்கள் வசிப்பதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக
ஐ.நா.வின் மனித
உரிமைகள் சபை பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதான் தமிழர்களின் தற்போதைய தலை விதி!

நமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.
அதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன?


நம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.
அவர்கள்
குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி "ஹிந்திக் காரர்கள்"
காலடியில்
உட்கார்ந்துபிழைத்துக் கொள்ளும்.

ஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு
யார்
இனிகாவல் இருக்கப் போகிறார்கள்?

ஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு
வழிகாட்டியாக
நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,
இலங்கையில்
நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி
இதயம்
வெடித்து 'சதை ஆடாத போது" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு
இதே
நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்?

விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ?

திங்கள், 25 மே, 2009

இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!

இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்!



முத்துக் குமரன்
எங்கள் - தமிழின
சொந்தங்கள் யாவர்க்கும்
சொத்துக் குமரன் !

ஈழ விடுதலைப்
போரின் எழுச்சியை
தீவிரப் படுத்திய
சித்துக் குமரன் !

உலகத் தமிழரை
ஒன்றாய் ஆக்கி
நெருப்பாய் மாற்றிய
வித்துக் குமரன்!

தமிழர் உளமெலாம்
தமிழுள நாள்வரை
தங்கி நிலைபெறும்
காவல் மதில்-அரண் ! 

-மோகன் பால்கி

செவ்வாய், 13 ஜனவரி, 2009

உதவியா பொழுது போக்கா ?

"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!

அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!

சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!

அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!

-மோகன் பால்கி

31st Jan 2004


ஞாயிறு, 11 ஜனவரி, 2009

கலியுகத்தின் குற்றம்!


வசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்
இலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன!
அதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.
வேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் !

அதே போன்று,
தர்ம யுகத்தில் தேவைக்கு மேல்
செழிப்பும், செல்வமும் இருந்தது!
அதனால், பேராசைக்கும், பொறாமைக்கும்
அங்கு வேலையே இல்லாதிருந்தது!

இன்றோ கலியுகம்!
எல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே
எங்கும் வறுமை படர்ந்து வருகிறது!
இங்கு மனிதர்களும் அதிகம்
செயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-
ஆனால் கையிருப்போ அதி சொற்பம்!
அதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன!

இது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்?
இது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்!

-மோகன் பால்கி
22nd Jan 2004


இறைவா நீயும் வெளியேறு!




நான் இருந்த "வீட்டில்" கூட்டம் கூட்டமாய்
இன்று
யார் யாரோ!

நானும்
பெயருக்கு ஏதோ
ஓரமாய்...!

எனது தந்தை
"இவ்வீட்டைத்" தருகையில்
இந்தக் கும்பல்கள்
அன்றைக்கில்லை!

இன்றோ..
அரசியல் அண்ணன்கள்
மதம் முதிர்ந்த கிழடுகள்
கிரிக்கெட் மைத்துனர்
என்று
ஒரு ஊரே கிடந்து
என் "அறைகளில்"
சப்தமிடும்!

அது போதாதென்று
மூலைக்கு மூலை அமர்ந்து


சினிமா சீரியல்
அடுத்த வீட்டு கதை என்று
சிரித்தும் அழுதும்
அமைதி கெடுக்கும்
அக்காள் தங்கைகள்!

அதோடு நிற்காமல்
இவர்களைப் பார்க்க
எவர் எவர்களோ வந்து
அவர்களும் "உள்-நின்று"
ஓயாமல்
சப்தமிடுகிறார்கள் !

இடையிடையே
என் தந்தையும்
வந்து தங்கி
சப்தமிட்டுச் செல்கிறார்!

எப்படியோ!
சதா சப்தமிடும்
ஒரு
இயந்திரமாகிப் போனது-
என் "வீடு"!

என் தந்தையோடு
நான் மட்டுமே இருந்த நாளில்
கொஞ்சம் அமைதியும்
ஏகாந்தமும்
இருந்ததாய்
ஒரு ஞாபகம் !

ஒரு நாள்!
நான்
பெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;
அவரவர்களை
"அவரவர்களின்-சொந்த வீட்டிற்கு"
துரத்தியடிப்பது என்று!

ஒரு
சிம்ம கர்ஜனையில்
அவர்கள்
சிதறியோடினார்கள்!

அப்பா!
என்ன ஒரு ஆனந்தம்..
என்னவொரு ஏகாந்தம்!

இனி என் வீட்டில்
எனது "உள்-வீட்டில்"
அரசியல் மதம்
சினிமா கிரிக்கெட்
என்று
எதற்கும் இடம் இல்லை!
வெறேது பற்றியும்
உள்-வெளி
கூச்சல்கள் இல்லை!

இனி
எனது தலையும்
ஒரு
பஜனை மடம் அல்ல!
அது
சப்தமற்ற ஆகாயம்-
அலை நின்ற சமுத்திரம்!

ஆம்!
நான் இனி
என்னுடன் மட்டுமே
இருக்கப் போகிறேன்!

எனக்குள் இருந்து
என்னில் கரைந்து
அந்த ஏகாந்தத்தில் நான்
காணாமல் போவேன்!

எனவே - இறைவா !

என் - தந்தையே - நீயும்
வெளியேறு!

-மோகன் பால்கி
12th April 2004


வெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக!


அறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.
எவ்வளவுதான் மிகச்சிறந்த அறிவானாலும்
அது
செயல்படும் மனிதனிடமே சிறப்படைகிறது!

மேலும்,
"அறிவு" செயல் படுவதற்கான சக்தியையும்
ஏதோ ஒரு "செயலே" தருகிறது!

அதாவது,
அமைச்சர்களுக்கும்,
"அறிஞர்களுக்கும் "
எந்தப் பெருமையும் அற்ற
ஏதோ ஒரு "அரசன்" சம்பளம் தருவது போல!

-மோகன் பால்கி

சனி, 3 ஜனவரி, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே!

image00154.gif 2009

வியாழன், 1 ஜனவரி, 2009

"பனி மலர்கள்" காத்துநிற்போம்!



ஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!

புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!

புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !

தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை

ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!

உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!

மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!

-மோகன் பால்கி