Translate this blog to any language

ஞாயிறு, 20 மே, 2012

Bad to Heaven & Good to Hell? சிடுமூஞ்சிக்கு சொர்க்கம்-சிரித்த முகத்துக்கு ஏன் நரகம் ?


ஒரு ஊரில் இரண்டு பாட்டிகள் இருந்தார்கள்.
ஒன்று சிடுமூஞ்சி, இன்னொன்று சிரித்த முகம்!


இரண்டு பேரும் அதே ஊரில் ரெண்டு தெருக்களில் இட்லி சுட்டு விற்று வந்தார்கள்! காலம் வருகையில் காலன் அழைக்க முன்பின்னாக மேலோகம் சென்றார்கள். 'சிரித்த முக' பாட்டிக்கு ஏனோ நரகம் சித்திக்க அவளுக்கு அப்போது 'சிடு மூஞ்சி' பாட்டியின் நினைவு வந்தது. நமக்கே இந்த கதி-அவளுக்கு என்ன கதியோ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்! அவள் சித்திர குப்தனை அணுகி விசாரிக்க "ஒ ! அவர்களா..? அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்றான் அவன்!

வந்ததே கோபம் சிரித்த முகப் பாட்டிக்கு! "அவள் போய் இங்கு -'அவர்களாமா'? தாம்-தூம் என்று எகிறிக் குதித்த சிரித்த முகப் பாட்டி, அப்போது இராட்சசி ஆனாள். "உங்கள் எமலோக அரசு, இந்திய அரசை விட படு மோசம்..நல்லவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. கெட்டவர்களுக்கு சொர்க்கமும், நல்லவர்களுக்கு நரகமும் தருவதா எமதர்ம ராஜனின் தர்மம்.." அது இது என்று வசை பாடி வாய்க் கூசும் கெட்ட வார்த்தைகளில் பழி தூற்றினாள். எமபட்டணமே அங்கு வந்து குவிந்து இந்த சண்டையை வேடிக்கைப் பார்க்க, சித்திர குப்தனுக்கு அப்போது மஹா கோபம் வந்தது. அவன் தனது "தர்மப் பேரேட்டை" விரித்து அதற்கான காரணம் கணக்கு கூறலானான்!

சிரித்த முகப் பாட்டி:

அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 13,14,000 நிமிஷங்கள் 
பதிமூன்று இலட்சம் நிமிஷங்கள் என்க!
( ஒரு நாளைக்கு காலையில் மட்டும் நான்கு மணி நேரம் - பல நாட்கள் கோவில் குளம், 
நல்லது கெட்டது என்று சென்று வாயாடிக் கொண்டு 'கடை' திறப்பதே இல்லை.  
எனவே, சராசரி மூன்று மணி நேரம்- 25 வாடிக்கையாளர்கள், 
இருபது வருட உழைப்பு மட்டுமே!)
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 20x25x365x5 = 9,12,500
ஒன்பது இலட்சம் இட்லிகள்...
(ஒருவருக்கு சராசரி ஐந்து இட்லிகள் (கொஞ்சம் ருசியாய் இருக்கும்) வீதம்)

ஆக, இவளால் உலகுக்குப் பயன் குறைவு! நான் எதையாவது செய்தால் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்போடு செய்வேன்- இல்லையா வருஷக் கணக்கில் சோம்பேறியாய் இருப்பேன் என்று சொல்லும் ரகம் இவள்!

சிடு மூஞ்சிப் பாட்டி: 
அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 1,05,12,000 நிமிஷங்கள் 
ஒரு கோடி நிமிஷங்கள் என்க! (அம்மாடியோவ்...)
( ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வீதம் அறுபது 
வருட உழைப்பு மட்டும் சேர்க்க)
ஒரு நாளைக்கு காலை-மாலை என்று பயன் அடைந்தவர்கள் விகிதம் 
சராசரி 60 பேர்கள் 
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 60x60x365x4 = 52,56,000
ஐம்பத்தி இரண்டரை இலட்சம் இட்லிகள்..
(ஒருவருக்கு சராசரி நான்கு இட்லிகள் (கொஞ்சம் ருசி குறைவுதான்) வீதம்)

ஆக, இவள் ஒரு நிஷ்காம்ய கர்மி! நிறைய மக்களுக்கு தொண்டு செய்தவள். எண்ணற்ற வயிறுகள் பசியாற உதவியாய் இருந்தவள். தரத்தை விட, நேரம் தவறாமையும் தொடர்ந்த உழைப்பும் உடையவள்.

சித்திர குப்தன் தொடர்ந்தான்: 

"நீ நல்லவள், நல்ல தோற்றம் உடையவள், இனிய பேச்சு பேசுபவள் என்பதெல்லாம் உன்னை உயர்ந்தவளாக காட்டிக் கொள்ளும் கர்வம் தவிர வேறென்ன? உன்னால் இந்த உலகத்துக்கு என்ன பயன் என்பதை வைத்தே எங்களுடைய 'எமலோக-கணக்கு வழக்குகள் அமையும். 'நிஷ்காம்ய கர்மமே' உயர்ந்த தவம்; கர்ம யோகமே இறைவனை அடையும் பாதை! நீ அன்றைக்கு பூவுலகில் இனிய மொழி பேசி நல்லவளாக நடித்து இன்றைக்கு இழிந்த மொழி பேசுவதை சற்று நினைத்துப் பாரேன்! 
நீ, பொறுமை இழந்தவளாகவும், அடுத்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் குயுக்தி மனப்பான்மை கொண்டவளாகவும், மேலும் உயர்ந்தவர்களையே சந்தேகப்படும் இயல்பு கொண்டவளாகவும் இருக்கின்றாயே! எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்கும் முன்பாகவே நிதானம் தவறி நீ கொட்டிய வார்த்தைகளை மீண்டும் எப்படிப் பொறுக்கி எடுக்கப் போகிறாய்! அதற்கொரு நரகமும் எங்கள் பேரேடுகளில் தானாகவே (Akashic Records) எழுதப் பட்டு விட்டது", என்று அமைதியாய் சொல்லி முடித்தான்!

அதைக் கேட்ட சிரித்த முகப் பாட்டியின் கண்களில் கண்ணீர் வற்றாத ஆறாக ஓடிக் கொண்டிருந்தது! மேலும் கேள்வி கேட்க பயந்து அவள் மவுனமாய் நின்றாளே தவிர, 'சித்திரகுப்த' உண்மையை அவள் இன்னும் உணர்ந்த பாடில்லை!

திங்கள், 14 மே, 2012

"கணினி" கண்-நோய்- நீங்கள் ஜாக்கிரதை - Computer Vision Syndrome


"நவீன உலகில் இன்று நாம் அதிக நேரம் செலவிடும் கணினி, செல்பேசி, தொலைக் காட்சி மூலமாக நமது கண்களுக்குத்தான் அதிக வேலைத் துன்பம் தர ஆரம்பித்து விட்டோம். அத்தோடு தூரம்-வானம்-பறவை என்றெல்லாம் பார்க்க நேரமும் வாய்ப்புமின்றி மனிதக் கண்களுக்கு தூரம் பார்க்கிற திறமையும் மங்கி வருகிறது."



இப்பல்லாம் எனக்குத்தான் எத்தனை தொல்லை..???
அடப் பாவிங்களா!!


நவீன அறிவியல் நமக்கு பல வசதிகள் தந்துள்ளது.

அத்தோடு சில தீமைகளையும் தான்!

நவீன எந்திரங்கள் நமது கை-கால்களை- உடலை அதிகம் அசைக்கத் தேவை இல்லாத படி செய்து விட்டன. எல்லாமே விரல் அசைவில் கிடைக்கும் அளவுக்கு மனித வேலையை எந்திரங்கள் பலவும் செய்து தந்து விடுகின்றன.

அதனால், தற்காலத்தில் நமது கண்களுக்கு அதிக வேலை பளு உருவாகி விட்டது. சொல்லப் போனால்....(Contd....)

புதன், 9 மே, 2012

Visibility Road Splays: A must in Chennai !! நமது சென்னை சாலைகள் 'அப்படி' இருக்கிறதா?

ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்! 


                A Wrong Road without Splay


               A rightly 'splayed' Road

நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது! 

ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!! 
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது! 

ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)

சனி, 5 மே, 2012

"I am-the God" Vulgarians!! தன்னையே கடவுளாக வரித்துக் கொள்ளும் 'ஈனப் பிறவிகளுக்கு 'ஒரு கேள்வி?


இன்று மாலை காலாற நடந்து செல்கையில் "பெரம்பூர் அன்ன தான சமாஜம்" அருகில் ஒரு மமதை மிக்க உபன்யாசக் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது! போகிற வழியில் ஒரு பார்வையில் மக்கள் சில நூறு பேர் அங்கு அமர்ந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த உபன்யாசக் குரலில் ஒருவித எல்லாம் தெரிந்த பாவம், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்த அஹங்காரம், இளக்காரமான தொனியை உணர்ந்தேன். 

எனக்கு கருத்துக்களை விட கருத்தறிவிக்கும் கருவிகளே முக்கியமாகப் படும்! ஏனெனில், கருத்துக்கள் எப்போதுமே உலகில் இங்கு புதியனவல்ல; அது பலராலும் பல காலத்திலும் சொல்லப் பட்டுவந்தவைதான்

சுரேஷ் என்பவர் சொன்ன ஒரு கருத்தை ரமேஷ் என்பவர் கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொன்னால் அது ஒரு புத்தம் புதிய கருத்தாகிவிடுமா? ஆறுமுகம் இன்று நெய்த புடவை தான் உலகில் புத்தம் புதிதானதா? அல்லது அதில் தொங்க விடப் பட்ட குஞ்சலங்கள்தான் புதிய படைப்பா? அப்படி இருக்க, இந்த உபன்யாசிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், சாமியார்களும் தம்மை புத்தம் புது கருத்தாளர்களாக மமதையோடு கருதிக் கொள்வதும், கர்வத்தோடு பேசுவதும் அதற்கொப்ப நமது அப்பாவி மக்களும் குற்ற உணர்வோடும் பய பக்தியோடும், மெய் ஒடுங்கி அமர்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு பெருஞ் சிரிப்பு தான் வருகிறது! 

பத்து புத்தகங்களை படித்த ஒருவன் பதினோராவது புத்தகம் எழுதுவது போல, இந்த 'ஞான-வேஷம்' போடுபவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே வாந்தி எடுப்பதை ....(Contd..)