இன்று மாலை காலாற நடந்து செல்கையில் "பெரம்பூர் அன்ன தான சமாஜம்" அருகில் ஒரு மமதை மிக்க உபன்யாசக் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது! போகிற வழியில் ஒரு பார்வையில் மக்கள் சில நூறு பேர் அங்கு அமர்ந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
அந்த உபன்யாசக் குரலில் ஒருவித எல்லாம் தெரிந்த பாவம், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்த அஹங்காரம், இளக்காரமான தொனியை உணர்ந்தேன்.
எனக்கு கருத்துக்களை விட கருத்தறிவிக்கும் கருவிகளே முக்கியமாகப் படும்! ஏனெனில், கருத்துக்கள் எப்போதுமே உலகில் இங்கு புதியனவல்ல; அது பலராலும் பல காலத்திலும் சொல்லப் பட்டுவந்தவைதான்!
சுரேஷ் என்பவர் சொன்ன ஒரு கருத்தை ரமேஷ் என்பவர் கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொன்னால் அது ஒரு புத்தம் புதிய கருத்தாகிவிடுமா? ஆறுமுகம் இன்று நெய்த புடவை தான் உலகில் புத்தம் புதிதானதா? அல்லது அதில் தொங்க விடப் பட்ட குஞ்சலங்கள்தான் புதிய படைப்பா? அப்படி இருக்க, இந்த உபன்யாசிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், சாமியார்களும் தம்மை புத்தம் புது கருத்தாளர்களாக மமதையோடு கருதிக் கொள்வதும், கர்வத்தோடு பேசுவதும் அதற்கொப்ப நமது அப்பாவி மக்களும் குற்ற உணர்வோடும் பய பக்தியோடும், மெய் ஒடுங்கி அமர்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு பெருஞ் சிரிப்பு தான் வருகிறது!
பத்து புத்தகங்களை படித்த ஒருவன் பதினோராவது புத்தகம் எழுதுவது போல, இந்த 'ஞான-வேஷம்' போடுபவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே வாந்தி எடுப்பதை ....(Contd..)