Translate this blog to any language

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

Kerala Flood பேரழிவு வெள்ளத்தை கணிக்க முடியாத மனித அறிவு!!

😂😅😂😃😄😃
💚💜💜💚💛💜
சென்னை வெள்ளம் 2015, கேரளா 2018 போன்ற பேரழிவு வெள்ளத்தை எவனாலயும் Predict பண்ணமுடியல!

ஆனால், சிலர் வெள்ளம் வரும், அதிக மழை வரும்னு சொல்றதுக்கு Vedic Prediction/ Scientific prediction எல்லாம் எதுக்கு? அதுதான் ஆயிரக்கணக்கில் உலகத்தில் நிகழ்கிறதே! அது ஆயா சொல்ற approximate size-ல வடை சுடற கதை! 

இவங்க அதையே English Vocabulary-ல வார்த்தை ஜாலம் பண்ணி தம்மை ஒரு intellectual ஆக கற்பனை பண்ணிக்கிறாங்க! 

1. மழை காலம், தமிழ் நாட்டுக்கு Sep, Oct, Nov, Dec எல்லாருக்கும் அது கொஞ்சம் தெரியும்! அதுலயும் Nov 15 to Dec 15 நமக்கு worst time & so on by previous years' average world climatic records.

2. ஆனால், சுனாமி,  பெருவெள்ளம், பூகம்பம், காட்டுத்தீ, Tornado போன்றவற்றை ஒரு மனித மனம் (புத்தர், ஐன்ஸ்டீன் உட்பட) "precise நாள்/நேரம்/precise இடம்" ஒரு வருடத்துக்கு முன்பே உரைத்து Predict பண்ணுவது என்பது "மயிரிழை அளவும்" சாத்தியம் இல்லை! 

We are totally powerless in this limitless universe!! அப்படி prediction சொல்பவர்கள் வெறும் தற்புகழ்ச்சியாளர்கள் என்பதையும், தாமே அறியாதவர்கள்!! 

"மனித எறும்புகளுக்கு இமயமலையை அளந்து Predict பண்ணும் திறமை உண்டென நம்பும்", அறிவை என்ன சொல்லி எப்படியழ? 

இயற்கை அல்லது இறைவன் மாபெரிய அளவிலான்! He is an ever expanding immeasurable & unpredictable vast consciousness!! 

ஆக, Forecast by science, Prediction by Intuition இவையெல்லாம் சிறுபிள்ளைகளின் சில்லறைத் தனமான "சொப்பு" விளையாட்டு!! சிறு அளவில் அது பயன்படும்; பெரிய அளவுக்கு என்றைக்குமே உதவாது!!

Yozenbalki 
Senior Psychologist 
www.yozenmind.com

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞரைக் காலம் அழைத்துக் கொண்டது!

இன்று மாலை 6.10 அளவில் கலைஞர் (94) காலமான சேதி காற்றில் பரவியது! மூப்பில் நிகழும் முடிவுதானெனினும், இதயம் ஏற்குமா என்ன? அழுத கண்களும் தொழுத கைகளுமாய் சென்னை காவேரி மருத்துவமனையில் மக்கள் கூட்டம்! இனப் பகைவர்களுக்கோ கொண்டாட்டம்!


ஒன்றைப் புரிந்து கொள்வது பகைக்குலத்துக்கு இயலாது!

'கருணாநிதி ஒழிந்தால் திராவிட இனவெழுச்சி ஒழிந்துவிடும்' எனும் மந்தபுத்தி நகைப்புக்குரியது! கலைஞர் ஒரு தனி மானுடரல்லர்; அவரொரு சமூக நீதிக் கோட்பாடு, சிந்தனைப்புரட்சியின் நீட்சி!

அவரது கொள்கைகளை மேலதிக தீரமூடன் மேற்செலுத்த பல்லாயிரம் களவீரர்கள் உள்ளனர்!

அதன்றியும், அவர் புகழை அணையாது கொண்டு செல்ல எம்ஜியார், ஜேஜே போன்று "பின்தொடர்ச்சி நில்லாத" பெருங்குடும்ப உறுப்பினர்கள், பெயரன் பெயர்த்திகளுமுண்டு!


ஆக, முன்பை விட வீரமாய், எழுச்சியுடன் பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த வழியில் ஒரு பெருங்கூட்டம், திராவிடத்தமிழின மீட்சிக்கான பாதையில் அயராது தொடரும்! அதில் ஒரு அய்யமும் எவருக்கும் இருக்கவியலாது!


வாழ்க கலைஞர்! வாழ்க தமிழ்!

அவரது புகழுடல், தமிழுடன் சேர்ந்தே வாழும்!

யோஜென்பால்கி 
www.yozenmind.com