புற நானூற்றின் வீரம் யாவும்
கலந்து பிறந்த ஓர் உயிரை
உலகம் மெச்சும் பண்பி னனை
உயர்வாய் பெற்ற ஒரு தாயை
பகைவன் கூட தொட வில்லை
பழிக்கு அஞ்சி விடை தந்தான்!
தர்மம் பேசும் 'ஹிந்தியர்' கள்
குதர்க்கம் பேசும் தமிழர் சிலர்
வயது முதிர்ந்த அன்னை யினை
மருத்துவம் செய்யவும் மாட்டமென
திருப்பி அடித்தக் கொடுமை தனை
நெருப்புத் தமிழர் காண் கின்றோம்!
இறைவா உனக்கு கண் இலையோ
உந்தன் அரசின் நீதி இதோ?
மனிதப் புலையர் இருக் கட்டும்
மாண்புக ளேதும் உனக் கிலையோ?
'கேவ லனுக்கு' எரி மதுரை
தர்மம் காக்க கலி குதிரை
கதைகள் ஏதும் நட வாதோ?
உதைகள் படவே தமிழ்க் குலமோ?
காலம் இன்னும் நீள் கிறது
சோகம் மேலும் சேர் கிறது!
இன்னும் தமிழர் சேர விலை!
ஒன்றே உடலாய் மாற விலை!
சேர சோழர்கள் கதை பேசி
சேராமல் நாம் போ னோமே!
'ஊருக் கொரு தலை' பேச்சாலே
ஒற்றுமை இன்றிச் சாய்ந்தோமே!
பிரியும் கொள்கைகள் பே சாதீர்!
ஒன்றே குரலாய் ஒலித் திடுவோம் !
உலகத் தமிழா ஒன்று படு
இல்லை பகையால் தின்று படு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: