Translate this blog to any language

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:




ஹிக்ஸ்--போசான் ( God-particle or Higgs-Boson particle) என்பது என்ன?

தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது
அதற்கு முன்னர் நான் வேறு ஒரு விஷயம் பேசுவேன்!
அறிவியலாளர்களுக்கு வெகு காலமாய் ஒரு கேள்வி இருந்து வருகிறது.
பருப் பொருள்களுக்கு எடை எப்படி உண்டாகிறது என்பதே அது!!

ஒரு அங்குலம் கன சதுர வடிவமுள்ள ஒரு இரும்புத் துண்டுக்கும், அதே அளவுள்ள ஒரு தங்கத்துக்கும் அடிப்படையில் எடை மாறுபாடு ஏன் உண்டாகிறது (வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஈர்ப்பு விசையை (Gravity) அங்கு கணக்கில் கொள்ளாமல்)?

உதாரணமாக இரும்பின் அடர்த்தி சுமார் 7.874 g.cm -3
அதுவே தங்கத்தின் அடர்த்தி 19.30 g.cm -3
இரும்பின் அணு எடை 55.847
தங்கத்தின் அணு எடை 196.9655

அவற்றின் எடைக்குக் காரணம், அவற்றின் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் எலெக்ட்ரான், ப்ரோடான், நியூட்ரான் (Electron, Proton, Neutron the three fundamental

sub-atomic particles. There are more sub-atomic particles and antiparticles in a single atom) என்று சொன்னாலும் கூட, அந்த மூன்றும் வெறும் அலைகளே அல்லவா? அலைகளுக்கு எப்படி எடை வந்து அவை பொருளாக மாற இயலும்? அதுவும் அந்தப் பொருள்கள் வெற்றிடத்தில் இருந்து...கருந்துளைகளில் இருந்து எப்படி வெளியாக இயலும்?
வெற்றிடம் அல்லது வளி மண்டலம் ( The Space) என்பது சார்பற்றதா அல்லது சார்புற்று தனித் தனியே தாம் சார்ந்த பொருள்களுடன் நகரும் இயல்புடையதா? அப்படியாயின் எண்ணற்ற வளி மண்டலங்கள் உள்ளனவா? அதாவது பூமிக்கு ஒரு வளிமண்டலம்-அதாவது பூமியோடு நகரும் வான வளி. அதே போன்று, சந்திரனுக்கு ஒரு வளி மண்டலம்-சந்திரனோடு நகரும் வான வளி. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வளி..அது யாருடையது அய்யா?? அதேபோன்று, எனக்கென்று ஒரு வளிமண்டலம், உங்களுக்கென்று ஒன்று...இந்த அணுவுக்கு இந்தவொரு சிறு வளி-அந்த அணுவுக்கு இன்னொன்று.. இவ்வாறாக?

நீரில் வாழும் மீன்களுக்கு நீர் ஒரு கவசம் போல இருக்கிறது. எனினும் அங்கு தனித் தனி நீர் நிலை என்பது கிடையாது-அங்கு நீர் என்பது ஒரு ஒரே தொகுப்பு. ஆனால், இங்கே நமது வளி மண்டலம் அப்படி ஒன்றே ஒன்றாக இல்லை என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். பார்ப்பதற்கு வானம் என்பது ஒரு மாறாத ஒற்றைப் பின்புலம் போலத் தோன்றினாலும்.....


அது தனித் தனி வானமாய் இருக்கிறது என்பது நமக்கு கொஞ்சம் நம்புவதற்கு கடினம்தான்! பிறகு, இந்த தனித் தனி வளியை இணைக்கும் பொருள் தான் யாது?

(இந்த வளி என்பதே ஒரு குழைந்த நீர்மம் போன்ற தன்மை உடையதாயும் அதுவே அதன் பொருள்களை உற்பத்தி செய்வதாயும் எனக்குத் தோன்றுகிறது. தாயின் பனிக் குடம்-நினைவில் கொள்க!)

இங்கே அறிவியல் அறிஞர்களுக்கு ஏற்படும் கேள்வி மற்றும் பிரமிப்பு என்னவென்றால், ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் "எது" நீக்கமற நிறைந்து இருக்கிறது-"எது" இவற்றை ஒரு ஆதாரத்தில் நிலை நிறுத்துகிறது? "அதை" ஒரு காலத்தில் "ஈத்தர்" (Ether) என்று வேறுமாதிரி குறிப்பிட்டார்கள். இங்கே தான் "ஹிக்-போசோன்" வருகிறது. அந்த நீக்கமற நிறைந்து நிற்கும் ( Higgs Field) ஹிக்ஸ் வளிமண்டலத்தின் மூலக்கூறின் பெயரே ஹிக்-போசோன் என்று தற்போது சொல்கிறார்கள்! அந்த ஹிக்ஸ்-போசொனின் எடையைக் கூட போன வாரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது ஒரு ப்ரோடானின் (Proton) எடையை விட சுமார் 125 மடங்கு அதிகமாம்! அதை 125 GeV என்று குறிப்பிடுகிறார்கள். வானில் மிதக்கும் பொருளுக்கெல்லாம் (Except Nutrinos) எடையை தருவது இந்த ஹிக்-போசான் தானாம்! அட! வானமே அதுதான் போங்களேன்!

(இதைப் புரிந்து கொள்ள கடல் தண்ணீருக்குள், ஒரு பிரம்மாண்டமான நீருக்குமிழியாலான கப்பலில், நீர்க்குமிழியால் செய்யப்பட்ட மனிதர்களாக நம்மைக் கற்பனை செய்து கொண்டு பிரயாணம் செய்யவேண்டும்! இன்னும் நமக்குள் உயிர்வாழும் வெள்ளணுக்கள், சிவப்பணுக்கள், பிற நல்ல-கெட்ட உயிர்கள் இவற்றையும் நீர்க்குமிழியாக கற்பனை செய்து கொண்டு...ஒன்னுக்குள் ஒன்னாக இப்படியும் அப்படியுமாய் அலைந்து கொண்டு...ஐயோ...பைத்தியம் தான் பிடிக்கும்! இந்த நீர்-நீர்க்குமிழி இதெல்லாம் ப்ரோடான், நியூட்ரான் மாதிரி கட்புலனாகாத சமாசாரங்கள்! அது சரி! இதெல்லாம் கடவுளின் பொழைப்பு...நமக்கென்ன வந்ததுங்க...சொன்னா யார் இங்கே கேக்கப் போறாங்க?

இதைக் கண்டுபிடிக்க ஆன செலவு சுமார் பத்து பில்லியன் டாலர்கள் என்று சொல்கிறார்கள். அதாவது Rs.55,000 கோடி செலவு. அம்மாடியோவ்!! இதெல்லாம் இந்த உலகத்து மக்களுக்காக  நல்ல தண்ணீர், நல்ல உணவு, நல்ல சுகாதாரம், நல்ல காற்று, நல்ல சாலைகள், இதை உருவாக்க எவனும் செலவு செய்ய மாட்டானே!)

அதென்ன ஹிக்-போசோன்! கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரா நாத் போஸ்- எனும் போஸ் உடன் சேர்ந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1920- களில் ஆரம்பித்த பணியை சுமார் முப்பது வருடம் கழித்து பிரிட்டனை சேர்ந்த பீட்டர்-ஹிக்ஸ் http://en.wikipedia.org/wiki/Peter_higgs (Now he is 83 years old and expected to get a Noble prize in Physics for the year 2012)


            Peter Higgs

என்பவரால் இது துவங்கி, அது பலராலும் பழிப்பு, நகைப்புக்கு உள்ளாக்கப் பட்டு தற்போது வெற்றிகரமாய் முடிந்துள்ளது. எனவே தான் அது ஹிக்ஸ்-போசோன் என்று பெயர் இடப் பெற்றுள்ளது. இன்னொரு சுவாரசியமான விஷயம், இந்திய விஞ்ஞானி என்.எஸ்.போஸால் அன்று துவங்கிய பணி, இன்று கலிபோர்னியாவில் வாழும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி

விவேக்-சர்மாவால் (Vivek Sharma, a physicist at the University of California, San Diego, and the leader of the Higgs search at LHC's CMS experiment.)


              Vivek Sharma 
http://hepweb.ucsd.edu/~vsharma/aboutme.php
தலைமை ஏற்று வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளது.

முதலில் ஹிக்-போசனை கண்டுபிடிக்கும் பணி இந்தியாவில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலில் 1960- களில் ஆரம்பிக்கப் பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? http://en.wikipedia.org/wiki/Particle_experiments_at_Kolar_Gold_Fields இப்போதும் அதே போன்றதொரு பணி தமிழ்நாடு மதுரையில் நடை

பெற்று வருகிறது. INO near Madurai. By India-Based Neutrino Observatory http://www.ino.tifr.res.in/ino//about.php.

சரி! அதற்காக உலக அறிவியல் அறிஞர்களை நாம் உளமார வாழ்த்துவோம்!

இந்த ஆராய்ச்சி, வேறு சில உபயோகமான, வசதியான வாழ்க்கையை நமக்குத் தரக் கூடும்! மாட்டு வண்டிக்கு பதில், கார் வந்தது போல!

ஆனால், கடவுளைக் கண்டுபிடிக்க புறப்பட்ட அறிஞர்களிடம் ஒரு கேள்வி!

வெற்றிடக் கருந்துளைகளில் இருந்து பருப் பொருள்கள் வெளிப்படுவது எங்கனம் அய்யா ? இல்லாமையில் இருந்து இருப்பு எப்படி சாத்தியம்?
ஒரு எறும்பு-நான், இமய மலையை உணர்வது எங்கனம்?
எனக்குள் வாழும் உயிரணுக்கள் யாவும் என்னையும், நான்-பிறகு கோடிக்கணக்கில் வாழும் அவற்றையும் உணர்வது எங்கனம்? நாங்கள் பழகுவது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது எங்ஙனம்?

காற்றில் மிதந்து காதுகளை அடையும் ஒரு இனிய சங்கீதத்தில், தனித்து ஒலிக்கும் ஒரு வீணையின் இசையை பிடித்தவாறே பின்நோக்கி முப்பது வருடங்கள் சென்று, அதை வாசித்த "இசைக் கலைஞனை", மற்றும் அதை உருவாக்கிய சிற்பி அன்றைய "இளைய-ராஜாவை" மீட்டுருவாக்கம் செய்து இப்போது / இங்கே கொணர்வது எங்கனம் அய்யா?

இதெல்லாம் சாத்தியமானால் மட்டுமே "படைத்தவனை"" அல்லது "படைப்பின்" இரகசியம் பற்றி நாமெல்லாம் அறியக் கூடும்! அல்லவா?

One is One and the Zero-only, is exponential ever!
"Cause" is a single undivided "oneness", and the 'Effect" is an exponential incomprehension!!
One cannot understand that in-comprehensiveness of life and living via death and decay either!

How can you reverse an already happened-Cause with an available Effect now? Is it possible to re-assemble 100% perfectly again, a completely collided/deformed vehicles met with an accident/incident? Can you get back a dense green forest destroyed in a wild-fire at once? First of all, how can you reverse the Time sir? And unless you reverse it how can you go back to the past, undo the effects and know its primary cause called "Creation" sir?

God/Mother Nature is a greatest creator and one can never know its mystery of Creation using our five limited senses and poorest understanding ever!

However, Best of Luck sirs!!

முயற்சி செய்து கொண்டே இருங்கள்; இருக்கிற வரைக்கும்.

பிறகு நாம் என்னதான் செய்வதாம்!!

-YozenBalki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: