Tuesday, September 13, 2011

Acid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது!

உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது.
தற்போதைய அவசர வாழ்க்கையில், வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் பெரும்பாலும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. காரணம், அதில் எந்தவிதமான உயிர் சத்தும் இருப்பதில்லை. 

ஒரு பச்சைக் காய்கறியோ, பழமோ, பயறு வகைகளையோ கண்ணில் காணாமலேயே நமது மூன்று வேளை உணவும் முடிந்து விடுகிறது. 

வெறும் காய்ந்து போன வைக்கோலைத் தின்று உயிர் வாழும் கால்நடைகளைப் போல நாம் சத்தில்லாத துரித (fast-food) உணவு வகைகளை வித விதமாகத் தின்று வருகிறோம். என்ன....? கொஞ்சம் வைக்கோலுக்கு வாசனை தடவி மசாலா கலந்து நாக்கை ஏமாற்றி நமது வயிற்றையும் வஞ்சிக்கிறோம்!

விளைவு? நோய்கள் பெருக்கம்!

இங்கே கீழ்க் காணும் முப்பரிமான படத்தைப் பாருங்கள்.
                                             அடிப்புறம் 44% + 32% +18% + 6% சுமார் அளவு. 

இது ஒரு சரிவிகித உணவு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை நான்கு 
கட்டங்கள் மூலம் உணர்த்துகின்றன. அடிப்புறம்-அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய கார்போ ஹைட்ரேட் துவங்கி மேற்புற கூம்பில் எப்போதாவது எடுத்துக் கொள்ளவேண்டிய கொழுப்பு, எண்ணெய், இனிப்பு வகைகள் வரை சொல்லப் பட்டிருக்கிறது. (நாம் தான் எண்ணையை தினந்தோறும் லிட்டர் லிட்டராக உணவில் பொரிக்க வறுக்க பயன்படுத்தி நமது வயிற்றை ஒரு குப்பைத் தொட்டியாய் ஆக்கிவிடுவோமே!)

இரண்டாம் அடுக்கில் பாருங்கள். காய்கறிகள் பழங்கள் சொல்லப் பட்டு இருப்பதை. நம் தினசரி உணவில் இதுதான் மிக மிக முக்கியமானது. அதிகம் 
எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

அதெல்லாம் போக நம் மனித உடலில் உள்ள இரத்தத்தில் இன்றியமையாத
ஒரு காரத் தன்மை காணப் படுகிறது. எனவே நாம் நமது தினசரி உணவில் காரச்சத்து உள்ள உணவு வகைகளான காய்கறிகள் கீரை பழ வகைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். (காரம் என்பதை "கார சாரமான" என்ற அர்த்தத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது)

நம் இரத்தத்தில் pH அளவு சுமார் 7 முதல்  8 வரை இருப்பின் அது மிகவும் நல்லது ஆகும். அதற்கு கீழும் மேலும் போனால் அது நமக்கு அபாய அறிவிப்பு ஆகும்!

The pH scale is from 0 - 14
சுத்தமான ஒரு குடிநீரின் pH Value ௦௦"0" ஆகும்!
0 1 2 3 4 5 6 7 healthy 8 9 10 11 12 13 14

Human blood pH should be slightly alkaline ( 7.35 - 7.45 ). 
Below or above this range means symptoms and disease.

A pH of 7.0 is neutral. (அமிலமும் அன்று காரமும் அன்று)

pH below 7.0 is acidic. (அமிலம்)

pH above 7.0 is alkaline. 
(காரம்)

pH 7.0 அளவுக்கு கீழே போகப் போக அந்த உணவானது அமிலத் தன்மை அதிகம் கொண்டது -அதிகம் தீங்கு விளைவிப்பது என்று அறிய வேண்டும்.
The most common disorder in acid-base homeostasis is acidosis, which means an acid overload in the body, generally defined by pH falling below 7.35 level.
Acidosis- நோய் நிலையின் அறிகுறிகள்-அதன் பாதிப்பு பற்றிய படம்:


உதாரணமாக ஒருவரின் ரத்தத்தில் pH அளவு 6.0 - 6.5 இருந்தால் அவருக்கு கோமா நிலை அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்கின்றனர்.

அதற்காக அமிலத்தன்மை கொண்ட உணவே கூடாது என்பதல்ல.
உங்கள் வயிற்றில் மொத்த உணவின் அமிலத்தன்மை 40% -க்கு மிகாமல் 
பார்த்துக் கொள்ளுங்கள். 

இன்னும் கேட்டால் 20% அமில உணவு  80% கார உணவு விகிதம் என்றால் இன்னும் நிம்மதி! 

(அதற்காக, காரத் தன்மை pH 7.45 க்கு மேலே போனாலும் Alkalosis என்னும் நோய் நிலை உண்டாகி விடும்-ஜாக்கிரதை!)

அது சரி! எது எதுவெல்லாம் அமில உணவு என்று கேட்கிறீர்களா?

மாமிச உணவு வகைகள், முட்டை, மீன், பருப்பு வகைகள் போன்றவை அமில உணவுகள். மேலும் காண இங்கு கிளிக் செய்க 

அதே போல் கார உணவுகள் என்பன: பெரும்பாலான பழ வகைகள், பச்சை காய் கறிகள் ஆகும். மேலும் காண இங்கு கிளிக் செய்க

To maintain health, the diet should consist of 60% alkaline forming foods and 40% acid forming foods. To restore health, the diet should consist of 80% alkaline forming foods and 20% acid forming foods.
Generally, alkaline forming foods include: most fruits, green vegetables, peas, beans, lentils, spices, herbs and seasonings, and seeds and nuts.

Generally, acid forming foods include: meat, fish, poultry, eggs, grains, and legumes.*An acidic body is a sickness magnet.


ஆரோக்கியத்தின் சாவி நாம் தினசரி உண்ணும் உணவில் தான் 
மறைந்து கிடக்கிறது!

நல்லுணவை உண்டு நாம் நலமாய் வாழலாமே!

-யோஜென் பால்கி
yozenbalki

www.yozenmind.com

1 comment:

  1. Good. But the pH of pure drinking water should be 7 (not 0)

    ReplyDelete

You can give here your comments: