Translate this blog to any language

திங்கள், 5 செப்டம்பர், 2022

கரைக்கப் போன எடத்துலே!


பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.
போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.
ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...
ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.
நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.
அவ்ளோ பெருசு.
பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.
ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.
மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி... 
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.
யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.
எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா
அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்...
எத்தனை செல..
ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே 
கருப்பா தான் இருந்தாங்க.
வெள்ளையா செகப்பா
ஒருத்தனை ஒருத்திய
பாக்க முடியல.

பூணூல்போட்டவங்களையோ 
சமசுகிருத மந்திரங்கள் ஒதுரவங்களையோ 
ஒருத்தரக் கூட காணோம் 

பட்டை போட்டவனும் இல்லை 
நாமம் போட்டவனும் வரவில்லை 
பட்டாடை உடுத்துனவங்களோ
வெண்நூலாடை போட்டவங்களோ
யாருமே இல்ல.
பெரிய பெரிய பதவில
இருக்கிறவங்க 
யாரும் கூட்டத்தில 
இருக்கிற மாதிரி தெரியல.
ப்ச்...
ஏன் அவங்கல்லாம்
வரலேன்னு ஒரு கேள்வி.
அவங்க இதெல்லாம்
செய்ய மாட்டாங்களான்னு
கூட ஒரு கேள்வி.
அப்போ
நம்ம மட்டுந்தான்
இதெல்லாம் செய்றமா?

நமக்கு ஏன் அறிவில்லாம போச்சி?

கூட்டம் கூடுறதுக்கும் 
கும்மி அடிக்கிறதுக்கும்
 குத்தாட்டம் போடுறதுக்கும் 
கலவரம் செய்றதுக்கும் மட்டும்தான் நாமளா?  
அதுவரை கொண்டாட்டமா
இருந்த மனம்
சட்னு வடிஞ்சிருச்சி.
அங்க நிக்கவே
ஒரு மாதிரி இருந்தது.
கைடு வாங்க 
காசு கேட்ட மவன் மொகம்
கண்ணுக்குள்ள வந்து போச்சு.
திரும்பிப் பாக்காம
நடையைக் கட்டிட்டேன்.

புத்தி வந்து சேர்ந்ததாலே 

இனிமேல் இந்தக் கூட்டத்துல 
ஒருநாளும் சேர மாட்டேன் 
சங்கியா நான் சாக மாட்டேன்!

Courtesy:
Whatsapp University Professors
🌸🌸🙏🙏☘️☘️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: