எந்த பெரிய அவசியமும் இல்லாத ஒரு சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஓடோடிச் சென்று மோடியைச் சந்தித்து பேசி இருக்கிறார்; ஏதோ வேறு மூத்த அமைச்சர்கள் இல்லாதது போல!
வரலாற்றில் மிக மிக முக்கியமான திராவிட-ஆரியப் போர் என்ற சூழலில் நாம் நிற்கிறோம்!
இந்திய ஒன்றிய முழுவதும் பார்ப்பனர்கள் தங்கள் பழங்காலத்து சனாதன அதர்ம திட்டங்களை வேகமாக விதைத்து வருகிறார்கள்!
பார்ப்பன துரோணாச்சாரியார்கள், சூத்திர ஏகலைவன்களின் கட்டைவிரலை காணிக்கை கேட்க காத்திருக்கிறார்கள்!
கல்வி வேலை வாய்ப்புகளில் இனி ஒடுக்கப்பட்ட தமிழினம், மற்ற மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இனங்கள் மேலே வருவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் பற்பல கொடிய சட்டத்திட்டங்களை, சதிவேலைகளை
சங்பரிவார பாஜக சத்தம் இல்லாமல் செய்து வருகிறது!
இது போன்ற சூழலில் ஒரு வேளை திமுகவுக்கு பாஜக பாமகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் தோன்றியிருக்கிறதா என்று அய்யம் எழாமல் இல்லை!
ஆனால் இந்த முறை திமுக பாஜகவுடன் கூட்டு வைத்தால் அது திமுகவின், தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த அழிவாக இருக்கும்!
எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாத சூழ்நிலையில் உதயநிதி சென்று மோடியை சந்தித்தது எரிச்சல் ஊட்டும் நிகழ்வாக தமிழ் பற்றாளர்கள் உணர்கிறார்கள்!
நேற்று எழுச்சித் தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து முற்போக்கு இயக்கத் தலைவர்களை அழைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...
கடைசியில் பேசிய வரிகள் மிகவும் முக்கியமானவை!
"இந்தத் திருமாவளவன் எந்தக் காலத்திலும் பாஜக மற்றும் பாமக இருக்கிற கூட்டணியில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டான்! அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் சமரசம் ஆகாது; விலை போகாது!"
இந்த ஒரு "குறியீடு" அவருக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்!
இந்தியா முழுவதும் தன்னுடைய மதவாதத்தை, பார்ப்பனியத்தை, சனாதன அதர்மத்தை விதைத்து வரும் சங்பரிவார்கள் தமிழ்நாட்டிலும் கால் ஊன்ற பாஜகவை எந்தக் கட்சி ஆதரித்தாலும் அந்தக் கட்சி தமிழ் இனத்துக்கு துரோகம் செய்கின்ற தமிழ் இனத்தால் வெறுத்து ஒதுக்கப் படவேண்டிய கட்சி என்றே நான் கூறுவேன்!
சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை, துப்பாக்கி எடுங்கள் சுடுங்கள், போய்க் கொண்டே இருங்கள், மோடி பார்த்துக் கொள்வார்... என்று ராணுவத்தினர் மத்தியில் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் உச்சபட்ச பேச்சாக அமைந்திருந்தது!
அதற்கு திமுக இன்னும் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை! அண்ணாமலையை பிடித்து சிறையில் அடைக்க வில்லை!
ஒரு விதமான Soft Hindutva பாணியில் திமுக செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!
மாநிலத்துக்கு ஒரு கூட்டு, மத்திய அமைச்சர்களாகி பொருளீட்ட இன்னொரு கூட்டு என்று கதை பேசுவது திமுகவின் பழைய வழக்கம்!
அந்த சந்தர்ப்பவாத வழக்கம் இது போன்ற மோசமான தருணத்தில் மீண்டும் நிகழ்ந்தால் திமுக என்ற கட்சியில் வெறும் பதவிக்கு அலைபவர்கள் மட்டுமே இருப்பார்கள்; அடிப்படைத் தொண்டர்களும் பெரியார் அண்ணா மீது பற்று கொண்டவர்களும் திமுகவில் இருந்து இந்த முறை சத்தியமாக காணாமல் போய்விடுவார்கள்! நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
திராவிட இயக்க கொள்கைகள் மீது சமரசம் செய்து கொள்வது, சங்பரிவார்களின் தமிழக ஊடுருவல்களை கண்டும் காணாமல் இருப்பது, இது போன்ற காலகட்டங்களில் மிக மிக ஆபத்தானது ஆகும்! தமிழ் இனத்தை அது ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும்!
ஆபத்து ஆபத்து ஆபத்து!
YozenBalki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: