Translate this blog to any language

திங்கள், 10 ஏப்ரல், 2023

திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

திமுக மீது நமக்கு ஒரு சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் திமுகவை விட்டால் தமிழனுக்கு வேறு கதி கிடையாது!

உலகின் பிற கட்சிகள் திமுக செய்த அளவுக்கு சாதனைகளை எந்த காலத்திலும் செய்ய முடியாது! 

உதாரணத்துக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்! உலகில் எந்த நாட்டிலும் அது அமெரிக்கா உட்பட, ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டருக்குள் எத்தனை டாக்டர்கள் எத்தனை இன்ஜினியர்களை அந்த நாடு உருவாக்கி இருக்கிறது என்று நீங்கள் போய் கேளுங்கள்!

இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்கு நடுவிலும் ஒரு டாக்டர் ஒரு இன்ஜினியர் என்று உருவாக்கியது திராவிடர் இயக்கம் ஆகும்; குறிப்பாக திமுக! 

இன்றைக்கு கூலி வேலைகள் செய்வதற்கு தமிழின இளைஞர்கள் இளம்பெண்கள் இங்கு வேலைக்கு கிடைப்பதில்லை! அந்த உடல் உழைப்பு வேலைகளை செய்ய வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்!

நமது தமிழ்நாட்டு குழந்தைகள் மருத்துவம் தொழிற்கல்வி போன்றவற்றை படித்துவிட்டு White Color Job என்று சொல்லப்படும் அலுவலகப் பணிகள் செய்து கை நிறைய சம்பாதிக்கும் நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார்கள்! அவர்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் கூலி வேலைகளில் இன்று இல்லை!

இது போன்ற ஒரு பெரிய சமூகப் புரட்சி உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மாநிலத்திலும் இதுவரை நிகழவில்லை!

ஒரு மரத்தை அது தரும் நற்கனிகளை கொண்டு அளவிடுவது போன்று நீங்கள் மதிக்கும் நல்லதொரு உலகத் தலைவரை அவரது நாட்டில் அவரது மாநிலத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் உயர்வு நிலை, உரிமை நிலை, கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மையைக் கொண்டு அளவிட்டு விட்டு, திமுகவை குறை சொல்ல பிறகு வாருங்கள்!


சரி! இத்தகு மாபெரும் சமூக புரட்சிக்கு, தமிழ் இன முன்னேற்றத்திற்கு மூல காரணம், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் என்க! அவர்கள் போன்று மானுட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெண்களின் உயர்வுக்காக முழு மனதோடு பேசி, எழுதி, நாடகங்கள் சினிமா, அரசியல் என்று ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டதன் பலன்தான் என்றும் அறிவீர்! 

அது போன்ற உன்னதமான தலைவர்கள் உலகில் ஒருவர் கூட கிடையாது என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்!

அந்த மூவர் மீதும் உள்ள பெருமதிப்பின் காரணமாக, அவர்களது மூலக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு இயங்கும் திமுக மட்டும் தான் தமிழ் இன வளர்ச்சிக்கு அனைத்து நிலைகளிலும் பேருதவியாக இருக்கும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்!

வேறு எந்த கட்சியும் அந்தப் பணியை அவ்வளவு சிறப்பாக செய்வதற்கு வழியே கிடையாது! காரணம் நாம் பார்க்கிற ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் வெவ்வேறு நோக்கங்களும் வெவ்வேறு உள்ளார்ந்த கொள்கைகளும் வேறு விதமாகவே உள்ளன! நடைமுறை சாத்தியமற்ற, செயல் முறையில் இதுவரையிலும் எந்த மாநிலத்திலும் சிறிதும் சாதிக்காத கட்சிகளாகவே அவை ஒரு பின் தொடர்ச்சியின்றி காணப்படுகின்றன!

மேலும் அந்த கட்சிகள், அல்லது கொள்கைகள் தொடர்ந்து வேறு நாட்டில் வேறு மாநிலங்களில் அப்படி ஏதும் பெரிய ஆணியையும் பிடுங்கி விடவில்லை!

அப்படியெல்லாம் அந்த கட்சிகளின் கொள்கைகள் வெற்றி அடைந்திருந்தால் பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து திராவிடர் இயக்கம் ஆட்சி செய்த தமிழகத்துக்கு ஏன் அவர்கள் கூட்டம் கூட்டமாக பிழைப்பதற்காக வந்து குடியேறுகிறார்கள்? 

இந்த நுட்பமான உண்மையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!

நம் வீட்டு குழந்தைகளை நாம் சீர்திருத்தம் செய்து கொள்வது போல திமுகவை அப்படி பிழைகள் தவறுகள் நேரும் பொழுது நாம் சீர்திருத்தம் செய்து கொள்ளலாம்! 

ஆனால், நம் வீட்டில் குறை இருக்கிறது என்பதற்காக வீட்டையே எரித்து விட முடியாது! அதை அவ்வப்போது சீர் திருத்தம் செய்து பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!

மேலும் திமுகவை விட்டால் வேறு எந்தக் கட்சியும், அதன் பிரதான கொள்கைகளும், Inclusive Growth கொண்டதாகவோ அல்லது ஆட்சி ஆள்வதற்கான தகுதி உடையதாகவோ இல்லை! ஒரு சில கட்சிகளில் இருக்கின்ற ஒரு சில தனி மனிதர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள்வதற்கான கட்சி என்று தீர்மானம் செய்ய இயலாது!

மேலும், வேறு எந்தக் கட்சியும் திமுக வெற்றி பெற்ற அளவுக்கு சமூக நீதி, அனைத்து மக்களுக்குமான கல்வி, வேலை வாய்ப்பு, பிற சாலைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், பெண்கள் விடுதலை போன்ற நிலைகளில் வேறு நாடுகளில் வேறு மாநிலங்களில் வென்றதாக உலகத்தின் சரித்திரம் இதுவரை சொல்லவில்லை!

அதனால் திமுகவை எதிர்த்து, ஒரு சில முற்போக்கு தோழர்கள் வேறு ஒரு வழியை யோசிப்பதே தவறு! 

மீண்டும் கூறுகிறேன், நமக்கு திமுகவை விட்டால் தமிழினம் மேலும் மேலும் முன்னேற வேறு கதி கிடையாது!

YozenBalki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: