Translate this blog to any language

360 degree view லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
360 degree view லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இங்கிருந்து கோவில்களை நேரில் பாருங்கள்! 3D Virtual Tour - Indian Temples!

0-360 mounted on point and shoot camera

நான் இன்றைய "புதிய தலைமுறை" இதழில் ஒரு நல்ல செய்தியைப் பார்த்தேன். அதில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் Virtual Visual கொண்ட இணையதளம் http:www//tamilnadutourism.org பற்றியும் அதில் உள்ள Virtual Tour  பற்றியும் அறிந்தேன். உடனே அந்த இணையதளம் சென்று பார்த்ததில் எனக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு பத்து நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன்! இதோ உடனே அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனது இணைய வலைப் பூவுக்கு வந்து விட்டேன். அதில் என்ன இருக்கிறது என்று ஒரு சிறு குறிப்பு:

1. நாம் நேரில் பார்க்கமுடியாத பல கோவில்களின் அமைப்புகளை நேரில் பார்ப்பதை விட துல்லியமாக 360 பாகைக் கோணத்தில் பார்க்கலாம்.

2. புதிய வியப்பூட்டும் விஞ்ஞான தொழில் நுட்பம்.

3. உங்கள் 'cursor' ஐ முன்னும் பின்னும் மேலும் கீழும் நகர்த்தி, விரும்பிய இடத்தை 'Zoom'
    செய்து பார்க்கலாம். (ஆச்சர்யம் என்னவென்றால் தரை-வானம் எல்லாமே தெரிகிறது. அதாவது, நீங்களே ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னூற்று அறுபது டிகிரி-மற்றும் மேலும் கீழும் பார்ப்பது போல் பார்க்க முடியும். அதோடு நம் கண்ணுக்கு முடியாத ஒரு வேலை-'Zoom" செய்து பார்ப்பது. அதுவும் இதில் சாத்தியமாகி உள்ளது)

4. இதை வீடியோ என்று சொல்ல முடியாது. புகைப்படம் என்றே கூற முடியும். ஆனாலும், இதில் உள்ள வசதிகள் அசத்தலானது. தமிழ்நாடு டூரிசம் இந்த வசதிகளை http://www.view360.in/  M/s. View360, Chennai, Tamilnadu. INDIA மூலம் செய்துள்ளது என்று தோன்றுகிறது. ஆயினும் அந்த முயற்சியை- தொழில் நுட்பத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகவும் குறைவே! சாதனையான செயல் இது! வேறெங்கும் நான் இப்படி இதுவரை பார்க்க வில்லை. இந்த பிரமிப்பு குறைய வெகு நாட்கள் ஆகும்!

நீங்களும் அந்த காட்சிகளை இங்கே கிளிக் செய்து பாருங்கள்: 
நீங்களும் என்னைப் போல சிற்பங்களை ரசிக்கும் மன உணர்வு  கொண்டவரானால் 
சந்தோசத்தில் தலை கால் புரியாமல் குதிப்பீர்கள்!

கோவில்கள் எல்லாமே ஓரிடத்தில் காண :
முதல் பக்கத்துக்குச் சென்று அங்குள்ள கோவில்களின் விவரம் மற்றும் சுற்றுலாத் தளங்களின் விவரம் இங்கே காண்க:
http://www.tamilnadutourism.org/virtualtour/index.html


( கொசுறு: இது கார் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு Virtual இணையம்:


yozenbalki