Shruthi (6yrs) died in Zion School Bus-hole accident:
on 25th July 2012- Chennai Tambaram
|
Then-Shruthi with her parent and prizes |
The bus was gutted. Shruti was a resident of Bharadwajnagar near Tambaram and was the second daughter of SethuMadhavan, an auto driver whose wife Priya is a house wife. Their son Pranav, elder to Shruti, was studying fifth standard in a Zion school. She used to participate in many school competition.
Then-Shruthi in Zion school competition |
There was a gaping hole below her seat which was just covered with a piece of plywood not-nailed.
Shruthi (6yrs) fell down through this Zion School Bus-hole and died |
Enraged locals set fire (Zion Mat HC school bus-Shruthi death) |
-Agencies
****************************************************************
சிறுமி சாவு: பள்ளியை மூட அரசு நோட்டீஸ்..?
பள்ளித் தாளாளர் உள்பட 4 பேர் கைது
http://goo.gl/Pnh7S
சென்னை, ஜூலை 26: பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி (7) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை ஏன் மூடக் கூடாது என்று கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலையூரில் செயல்படும் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த ஸ்ருதி, பள்ளி பஸ்ஸில் வீடு திரும்பும்போது இருக்கைக்கு கீழிருந்த ஓட்டையில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாள்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புதிய செய்தி: http://goo.gl/H6Fnr
http://goo.gl/Pnh7S
Zion School Corresp. Dr. என். விஜயன், பஸ் டிரைவர் பி. சீமான், யோகேஸ்வரன், கிளீனர் சண்முகம் Arrested (Shruti 2nd Std girl death 25.7.2012 -via gaping hole in school bus) |
சேலையூரில் செயல்படும் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த ஸ்ருதி, பள்ளி பஸ்ஸில் வீடு திரும்பும்போது இருக்கைக்கு கீழிருந்த ஓட்டையில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாள்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புதிய செய்தி: http://goo.gl/H6Fnr
Hundreds pay homage to Shruthi - Chennai 26.7.2012 |
இது குறித்து, ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பழுதுள்ள பஸ்ஸை குத்தகையின் அடிப்படையின் பள்ளி வாகனமாக இயக்கியதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்த ஸ்ருதியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் சம்மன்: இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
The Madras High Court today suo motu took cognisance of yesterday's bus mishap in which a second standard girl student fell through a gaping hole in the school bus in which she was travelling and was run over by the rear wheels and directed the Transport Department officials to appear before it today 27th July 2012.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
""பள்ளி பஸ்ஸினுள் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது. மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் 15 நாள்களுக்கு முன்பு தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.) வழங்கப்பட்ட பஸ்ஸில் இந்த சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
பள்ளியின் நிர்வாகிகள், பஸ்ஸை இயக்குவதற்கு தகுதிச் சான்றிதழ் அளித்த மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 27.7.2012 காலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
மேலதிக செய்திகள் இங்கு காண்க: http://goo.gl/YvscL
தலைமைச் செயலாளர் ஆலோசனை: முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, போக்குவரத்துத் துறை செயலாளர் பிரிஜ் கிஷோர் பிரசாத் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் அளிக்கப்பட வேண்டிய விளக்கங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பள்ளித் தாளாளர் கைது: இதனிடையே, இச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் என். விஜயன் (60), பஸ் டிரைவர் பி. சீமான் (58), பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்: விபத்துக்கு காரணமான பள்ளி பஸ்ஸுக்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) பட்டப்பாசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில், ராஜசேகர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
------------------------------------------------------------
ஒரு மறக்க இயலாத பழைய செய்தி: http://www.kazhuku.com/2012/05/blog-post_30.html
திருந்தவே மாட்டோமா நாம்? இப்படி மெத்தனமாக, அசட்டையாய் இருந்து எத்தனையோ உயிர்களை இந்த நாட்டில் நாம் இழந்து இருக்கிறோம். அப்படியும் கூட நமக்கு நல்ல புத்தி வரவே வராதா?
வெகு சிலர்தான் இப்படியா - அல்லது இந்த நாடே அப்படியா?
-YozenBalki