கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் சில ஊர்களில் மட்டுமே வெயில் அதிகம் என்று பயந்த காலம் மாறி, இப்போது எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலைவிடக் கொடுமை பகல்நேர மின்வெட்டு. அலுவலகம், வீடு எங்கே என்றாலும் உட்கார முடிவதில்லை. உடலும் சேர்ந்து கொதிக்கிற வேளையில்தான் நம் முன்னோர்களின் கட்டடக் கலை நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தின் கோயில்கள், அரண்மனைகள், பழமைவாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் இந்தியச் சுற்றுச்சூழல், தட்பவெப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டப்பட்டவை.
பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் பொறியாளர்கள் சென்று பார்த்து வியக்கும் ஒரு கட்டடமாக இருந்து வருகிறது. காரணம், அந்த அரண்மனைக்குள் எப்போதும், எந்தப் பருவ காலத்திலும் தட்பவெப்பம் இதமாக இருப்பதால்தான். திருமலை நாயக்கர் மகாலும் அப்படிப்பட்டதே.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு அலுவலகம் அல்லது வீட்டுக்குச் சென்றால்கூட, வெளியே எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும், கட்டடத்துக்குள் ஒருவிதமான குளுமை எப்போதும் இருக்கும். கூரையிலிருந்து 20 அடி நீளக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறிகள் சுழலாத போதும் இந்தக் குளுமை நீடிக்கவே செய்யும். காரணம், அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அந்த அளவுக்கு உயரமாகவும், ஜன்னல்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தது.
ஆனால் இன்றைய பொறியாளர்கள், வெளிநாடுகளில் உள்ள கட்டடங்களை அப்படியே காப்பியடித்து இங்கு கட்டுகிறார்கள்.
பத்து ஆண்டுகள் முன்புவரை குடிசைகள் கட்டுவோர், ஓலையால் கூரை வேய்ந்து, சுற்றுச் சுவரை மண்ணால் கட்டினார்கள். அத்தகைய வீடுகள் மழையிலும், வெயிலிலும் குளுமையாகவே இருந்தன. இப்போது, அதே அளவில், தாட்கோ நிதியுதவியுடன் கட்டப்படும் ஆதிதிராவிடர் நலக் குடியிருப்புகளில் பகல்நேரத்தில் வேறு வழியின்றி இருந்தாக வேண்டும். இரவில் கான்கிரீட் வெப்பத்தைக் கக்கும்போது, இந்த ஏழைகள், வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கிராமங்களிலாவது வெளியே வாசலில், திண்ணையில் படுத்து உறங்க முடிகிறது.
நகரத்தில் வசிக்கும் மக்கள் திருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே உடல் வெம்பிக் கிடக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு உடல் வெம்புதல் காரணமாக, நகர்வாழ் மக்களைப் பாலுணர்வு சிக்கல்களில் கொண்டு சேர்க்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
பழைய காலத்துக் கட்டடங்களில் பெரும்பாலானவை கருங்கற்களால் கட்டப்பட்டவை. கருங்கற்கள் வெயில் சூட்டை உள்வாங்கி, அதே திசையில் வெளியேற்றிவிடும். கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்கு வெயில் தெரியாது.
ஆனால், இன்றைய கான்கிரீட் கட்டடங்கள், வெப்பத்தை வாங்கி வீட்டுக்குள் பரவச் செய்கின்றன. அதைத் தணிக்க மின்விசிறி, வசதியிருப்பின் ஏர்-கண்டிஷன் ஆகியவை தேவையாக இருக்கிறது. இதனால் மின்சாரத் தேவையும் கூடுகிறது.
தற்போது கிரீன் பில்டிங் என்ற கருத்தாக்கம் பரவலாகி வருகிறது. இதன் நோக்கம் மின்சாரம் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடங்களை வடிவமைப்பதுதான். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டடங்களை உருவாக்குவதுதான் இதன் அடிப்படைக் கருத்து. கட்டடத்தைச் சுற்றி மரங்களை வளர்த்துவிட்டால், அதன் மூலம் பசுமைச் சூழலை ஏற்படுத்தலாமே தவிர, எரிசக்தி இல்லாத கட்டடமாக அதை மாற்ற முடியாது.
மின்சாரம் மிகக் குறைவாகத் தேவைப்படும் வீடுகள், பங்களாக்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை வடிவமைப்பதுதான் இன்றைய அவசியத் தேவை.
பெருநகரங்களில் உள்ள வீடுகளிலும் அலுவலகங்களிலும் பகல் நேரத்தில் எரியும் விளக்குகள், இயங்கும் குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து. இவர்கள் பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை மட்டும் கணக்கிட்டால் மின் உற்பத்தியில் பாதியை நகரங்கள் விழுங்கிக் கொண்டிருப்பதை உணரலாம்.
இந்த மின்தேவையைப் பாதியாகக் குறைத்தாலும்கூட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா? நகரங்களில் மக்கள்தொகை பல கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில், அனைவருக்கும் வீட்டுவசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டடங்கள் உருவாக்கப்படும்போது, இத்தகைய கிரீன் பில்டிங் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும்கூட,
நமது பாரம்பரியக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கட்டடத்தின் உட்கூரையை உயரமாக அமைப்பதும், ஜன்னல்களை அதிக எண்ணிக்கையில் வைப்பதும், சிமென்ட் பயன்பாட்டைக் குறைப்பதும், கட்டடம் எந்தத் திசையில் இருந்தாலும் எப்போதும் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் வகையில் வடிவமைப்பதும்தான் இன்றையத் தேவை.
இந்த மண்ணின் தட்பவெப்பம், சூழல் அறிந்து, முன்னோர் காட்டிய வழியில், இன்றைய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தும் பொறியாளர்கள் நமக்குத் தேவை. இப்போது படிக்கும் இந்த மாணவர்களில் 10 சதவீதம்பேரையாகிலும் மரபின் பொறியாளர்களாக இப்பல்கலைக்கழகங்கள் மாற்றும் என்றால், மக்கள் பயன்பெறுவர், நாடும் பயன்பெறும்
நன்றி நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=223206&SectionID