Translate this blog to any language

indian-coins co(i)fusions indian-people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
indian-coins co(i)fusions indian-people லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 அக்டோபர், 2011

Indian Coins: A great Co(i)n-Fusions!! தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன! 
அச்சும் சரியில்லை;அளவுகளும் சரியில்லை!

இதோ கீழே உள்ள இந்த நாணயங்களை பாருங்கள் அதில் எதாவது கண்ணுக்குத் தெரிகிறதா? 

அதே அதற்கும் கீழே உள்ள பழைய நாணயங்களையும் பாருங்களேன் எவ்வளவு தெளிவாய் தெரிகின்றன!


இதெல்லாம் புச்சு....ங்கோ!!

ஆக, கையில் இருப்பது ஒரு ரூபாயா அல்லது இரண்டு ரூபாயா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தும் அளவுக்கு அளவும் எடையும் ஒன்று போலவே தோன்றும் வண்ணம் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன! இதனால் கடைத் தெருவில், பேருந்தில் என்று அங்கிங்கு எனாதபடி எங்கும் மக்களுக்கு குழப்பமே! குறிப்பாக அரசுப் பேருந்தில், தான் கொடுத்தது இரண்டு ரூபாய் என்று ஏதோ ஒரு பயணியும் இல்லை ஒரு ரூபாய் தான் என்று ஏதோ ஒரு நடத்துனரும் சண்டை போட்டுக் கொள்ளாத நாளோ அல்லது ஒரு பேருந்தோ  இல்லை எனலாம்! 

இந்த இலட்சணத்தில் ஐந்து ரூபாய் என்று ஒன்றை அச்சடித்து இருக்கிறார்கள் அது ஐம்பது பைசா நாணயம் அளவுக்கு சுருங்கிப் போய் கிடக்கிறது! மேலும், தற்கால இந்திய நாணயங்கள் யாவும் புடைப்புத் தன்மை குறைந்து அதிக வேலைப் பாடுகள் இன்றி தேய்ந்து போன தன்மையிலேயே காணப் படுகின்றன! கண்பார்வை உள்ளவர்களுக்கே சவால் விடும் இது போன்ற  நாணயங்களை பார்வை குறைபாடு உள்ளவர்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியும்? 

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் வந்த அல்லது மன்னர்கள் கால்  நாணயங்களை வைத்து ஒப்பிட்டால் இப்போது வந்துள்ளவை பெரும்பாலும்  'பாஸ் மார்க்' போடவே  முடியாதவை! பார்வை அற்றவர்களும் கண்டு கொள்ளும் வண்ணம் பழைய நாணயங்களின் அமைப்புகள் எப்படி உள்ளன என்று சற்று பாருங்கள்? வட்டம்..சதுரம்..வட்டத்தில் சிறு சிறு வட்டம்..பருப் புடைப்பான எழுத்துக்கள்..எவ்வளவு வசதி...அழகு!

அதுமட்டுமல்ல, ஒரு நாட்டின் நாணயம் என்பது:

1 உள்நாட்டு வர்த்தகத்துக்கு உதவும் ஒரு பண்ட-மாற்றுக்கு மாற்று!
2 அது பாமரர்களுக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் இருக்கவேண்டும்.
3 ஒளிகுறைவான நேரங்களிலும் அது 'இருவருக்கும்' புரியவேண்டும்.
4 பார்வைத் திறன் அற்றவர்களும் தொடு உணர்ச்சியால் அறியவேண்டும்.
5 நீண்ட காலம் உழைக்கும் வண்ணம் தயாரிக்கப் படவேண்டும்.
6 நாட்டின் கவுரவத்துக்கு அதுவும் ஒரு வாசல் ஆகும்!
7 அனைத்துக்கும்  மேலாக, 
நாணயங்கள் ஒரு வரலாற்றுப் பெட்டகம். சில நூறு/ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நமது கலாச்சாரம்/பண்பாடுகளை நம் சந்ததிகளுக்கு சொல்ல இருக்கிற ஒரு தொல்பொருள் குறியீடும் ஆகும்!

ஆனால், இப்போதெல்லாம் வருகின்ற நாணயங்களை யார் டிசைன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை எப்படி வாழ்த்துவது/ என்ன பரிசளிப்பது என்றும் புரியவில்லை!!
இந்திய மக்கள் 120 கோடி பேரும் தினமும் மனதார "வாழ்த்தும் படி" ஓகோ என்று தயாரித்து இருக்கிறார்கள்!!

(இப்போது வரும் ரூபாய் நோட்டுகளும் அப்படித்தான்! மாலை நேரங்களில், கொடுப்பவருக்கும் சரி வாங்குபவருக்கும் சரி அது 100 ரூபாயா அல்லது 500 ரூபாயா என்று சந்தேகம் வந்து 
பத்து முறை சரிபார்த்தும் 'தொலைக்க' வேண்டி இருக்கிறது! தயவு செய்து அது போன்ற குழப்பம் தரும் நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே திரும்பப் பெற்றுகொள்வது 
மிகவும் உத்தமமானது! )

ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்தில் அச்சடித்த நமது பழைய நாணயங்கள் இதை விட எவ்வளவோ சிறப்பாக இருந்தனவே?
இதோ அந்தப் பழைய நாணயங்கள்!


இன்னும் சற்று பின்னோக்கிப் போவோமா?
அதாவது வெள்ளைக்காரர்கள் ஆண்ட நாட்களுக்கு...?
இதெல்லாம் 1947 க்கு முன் வந்த நாணயங்கள்! அவை இன்னும் அழகு!


The new two rupee coin recently introduced by the Reserve Bank of India (R.B.I.) is causing confusion in the minds of visually impaired people as it is difficult to distinguish it from the one rupee coin.
As per estimates, the number of blind people in the country is 10 million. And all of them have no means of ensuring that the stainless steel coin given to them is of the right denomination. The earlier two rupee coin had curved edges which helped them identify and judge its contours. But the new two rupee coin is similar to the one rupee coin except for the fact that it is slightly bigger in size.
“Now coins of all denominations are round. Even though the new two rupee coin is slightly bigger in size, one cannot really make out the difference,” says C.D.Tamboli, Director of Education, National Association of the Blind.
A R.B.I. spokesperson said the Bank did not have much say in the design process and that a Finance Ministry Committee awarded the assignment to the National Institute of Design.
It seems the National Institute of Design is yet not universal in its thought process.
http://goo.gl/CfoHJ

இன்னும் பழங்கால மன்னராட்சி நாணயங்களைக் காண இங்கே சொடுக்குங்கள்:

அதன் அழகில் நீங்கள் மதி மயங்கிப் போவீர்கள்! அவை
இன்னும்...இன்னும் அழகு!













-யோஜென் பால்கி
yozenbalki