அடடே மனோகர்! என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு?
அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லிங்க் அனுப்பியிருந்தார்.
மனோஹரின் மிக்கத் தெளிவு, இறைமை பற்றிய தனது மேலான கருத்துக்கள், தானே எழுதி, இசை அமைத்த தனது இறை/தத்துவ/நிலையாமை /வாழ்வியல்உண்மைகள் பற்றிய கருத்துக்களை மற்றும் பாடல்களைக் கேட்டேன்! அதை அனைவரும் கேட்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், தனது வலைத் தளத்தில் இருந்து பிறர், பதிவிறக்கம் செய்யுமாறு அமைத்துள்ள உள்ளப் பாங்கு கண்டு வியப்பும் பெரு மகிழ்வும் கொண்டேன். பாடல்கள் பாடி இசை அமைத்துப் பதிவு செய்வது என்பது சின்ன விஷயம் அல்ல! அந்தப் பணியை எப்படியோ செய்து மெனக் கெட்டு பின்னர் அதை "சும்மா" தருவதற்கும் அவர் பெரிய தொழில் அதிபரோ சூப்பர் ஸ்டாரோ அல்ல! ஏதோ ஒரு இறைமையின் உந்துதல் அவரிடம் இருக்கிறது-இல்லாவிடில் இதை செய்ய முடியாது என்பது எனது கருத்து! சுமார் நாப்பத்தி ஒரு பாடல்களுக்கு மேல், அதில் வரவு எதுவும் இருக்காது என்று தெரிந்தே எழுதி, இசை அமைத்து, ஒலிப் பதிவு செய்வது-அதிலும் தரமாக- என்பது சாதாரண வேலை அல்ல!
இவர் ஒரு வித்தியாசமான நடிகர்-அதை விட மேலாக நம் சம காலத்தில் வாழும் ஒரு நல்ல உயிர்!
அவர் மேலும் நல்ல உடல்/மன/ஆன்ம நலம் பெற்று நீடு வாழ்க என்று வாழ்த்துவோம்!
நீங்களும், அவரது வலைத் தளத்துக்குத் தவறாமல் இப்போதே செல்லுங்களேன்!
http://adademanohar.blogspot.com/
அதை புக் மார்க் செய்து வையுங்கள்; சமயம் வாய்க்கும் போது அவரது அர்த்தமுள்ள இனிய பாடல்களை கேட்டு மகிழலாமே!
அவரது முகவரி/தொலைபேசி எண்கள்:
தெ.ரா. முரளி மனோகர்
('அடடே மனோகர்')
199 வெள்ளாளத் தெரு
புரசைவாக்கம்
சென்னை 600 084
(தொலை பேசி: 25325412)
(அலை பேசி: 9840061878)
-மோகன் பால்கி