திராவிட மெதுவென
திரிபுகள் செய்வதேன்?
தீரா நோயெனும்
ஆரிய வேற்றவர்
கெடுமதி சூழ்ச்சியை
உடைத்தெறி படைக்கலன்
கூரறி வாளர்கள்
கூடிய கழகமும்
தமிழுணர் ஆர்வலர்
தாங்கிய குழுமமும்
ஓங்கிவளர்ந்திடு
உள்ளமே திராவிடம்!
பகைவன் பயப்படும்
சொல்நம் ஆயுதம்!
ஆரியம் அஞ்சிடும்
ஆட்கள்நம் தலைவராம்!
குறுகிய வாத்தென
குருட்டு வாதமும்
விழைபடு பொருள்தரு
பீழைப் பிறவியர்
தரைவழி அளவினால்
வரைசெயும் பூமிப்
பரப்பினால் விளைவது
திராவிட மல்லடா!
அதுநரிகள் பேசிடும்
நயவஞ்சகம் அறி!
சூழ்ச்சியை சூழ்ச்சியால்
சூழ்வதே வாழ்வியல்!
எதுதான் திராவிடம்
என்றுனைக் கேட்டால்
ஆதிக்கவாதியின்
அடிப்படைத் தகர்த்தே
உழைக்கும் மக்களின்
உரிமை உணர்த்தும்
அரிய கருப்பொருள்
"திராவிடம்" என்றறை!
ஆரிய எதிர்நிலை
"திராவிடர்" எழுகவே!
-யோஜென் பால்கி