Translate this blog to any language

ஞாயிறு, 21 ஜூன், 2020

ஒரே காற்றில் மனித மீன்கள்!

சிரிப்பாய் இருக்கிறது
ரொம்பவே சிரிப்பாய்
இருக்கிறது!

தெருவில் வீட்டில் 
வசிக்கும் பூனைகள் 
நாய்கள் பறவைகள் 
நான்கு, மூன்று 
ஈரறி(வு) உயிர்கள் 
முகமூடி அணியாமல் 
நம்முன் வாழ்கையில் 
அவைமுன் னுயர்ந்த
மானுடம் கூனி
முடங்கிக் கிடைக்கையில்
சிரிப்பாய் இருக்குது!

















"ஒரே காற்றில் 
ஒரே கடலில் 
வாழும் மீன்களில் 
மனித மீன்கள்" 
மட்டுமே பாவம் 
இத்தனை மெலிவாய்
பூமியில் கிடந்து 
அல்லல் உறுவதை 
காண்கையில் எனக்கு 
வகை வகையாக 
சிரிப்பே வருகுது!

இராக்கெட் என்ன?
ஏவுகணை எ(ன்)ன?
கப்பல் விமானம் 
அறிவியல் என்ன?
எல்லாம் இருந்தும் 
இல்லா திருக்கும் 
நிம்மதி என்ன?
ஆறறிவு என்ன?

நாமே வளர்க்கும் 
நாய்களும் பழிக்கும் 
மூடிய கவசம்
முடியா முடக்கம் 
நீண்டிடும் பூமியில்
காதுகள் வழியாய்
நுழையா தொற்றை!!
நம்பிடும் பதர்களாய்
அரசர் அறிஞர்கள்
சாமிகள் சாமியார்
அனைவரை மிரட்டும்
ஓரணு உயிரியை
சிந்துபாத் கதையை
பார்க்கையில் எனக்கு
கழுதை சிரிப்பாய் 
சிரிப்பு வருகுது!

-பால்கி