சிறுமுகிலே ஓவியமே!
எனக்கென்றே இறைவனவன்
எடுத்துவைத்த பேரழகே!
வண்ணப் பைங்கிளியே
வாசமிகு ரோசாவே!
உன்னை நினைத்திருக்க
உசிரெல்லாம் இனிக்குதடி!
என்னப் பெருந்தவமோ
எப்படிநீ கிடைத்தாயோ!
எண்ணியெண்ணி மருகுகிறேன்
உள்ளமெலாம் உருகுகிறேன்!
என்னைத் தாயாக்கி
எனக்கருளி நின்றவளே!
உன்னைப் பெற்றதனால்
எல்லாமும் பெற்றேன்யான்!
எப்படி உனை சீராட்ட
ஒருமடிதான் உள்ளதடி!
பெருமையடி உன்னாலே
கண்படுமோ அதனாலே!
உன்னை எனக்களித்த
இறைமை நினைந்திருப்பேன்!
காலமுள நாள்வரையும்
உன்விழிகள் பார்த்திருப்பேன்!
-YozenBalki
(ட்விட்டரில் ஒரு போட்டி! அதற்கு நேற்று எழுதி அனுப்பினேன் தோழரே! 🌸🌸🙏🙏)