Translate this blog to any language

திங்கள், 23 ஏப்ரல், 2018

யான் கவிஞனல்லன் குவிஞன்:


💚💛💜💚💛💜💚💛💜💚💛💜
வசியம் செய்யப்பட்ட
வார்த்தைகள் நடுவில்,

படர்ந்த விசும்பில்,

ஒளிந்தொலிக்கும்
உட்பொருள் தன்னை

உணரக்குவிந்து
மெனக்கெடும் உயிரி யாம்!

எமக்குத் தொழில்
கவியல; குவியல்!

எத்தையுணர்வதால்
புதைபொருள் ஒன்றின் பூடகமுடைந்து பூமி திறக்குமோ,

அத்தையுணர்ந்து வித்தை செய்தல், வீரியமூட்டலே சீரிய யெம்பணி!

பழுதுள விதையென
பல்லோர் தள்ளிய

வெள்ளியைத் தாங்கித் தங்கமாக்குதல்!

தக்கார் பற்றி தரணி மேம்படத் தகுதியாக்குதல்!

கல்லெனக் கருதிய வல்லினமொன்றை
சில்லுகள் நீக்கி சிற்பமாக்கிடும் சீர்பணி இஃதாம்!

மொழிவழி நுழைந்து
வழிவழி செய்தொரு
போக்கிடம் குறிப்பதெம் தலைப்பணியெனினும்,

மொழியறு மோனைத் தவத்திடமிருந்தே

அவ்வொலியறு ஓரொலி ஒருமையில் குவிந்து

ஓமென்றிருக்கும் இருப்பையறிந்தவம்!

ஆதலால், இன்றல,
என்றுமே,

பிறவிகள் தோறுமாய்
யாமொரு குவிஞனாம்!

-யோஜென் பால்கி
(Yozenbalki)
தமிழ்நில உள இயல் கலைஞன்
💚💛💜💚💛💜💚💛💜💚💛💜