இப்போதெல்லாம் நமது தமிழினக் குடும்பங்களில்
நாம் கொண்டாடும் தீபாவளி நரகாசுரன் சம்பந்தமான மூட தீபாவளி அல்ல! அதே நாளில் நம்முடைய குழந்தைகள் எல்லோரும் பட்டாசு கொளுத்தி புத்தாடை அணிகிறார்கள் அவ்வளவுதான்!
மேலும், பழக்கத்தில்/புழக்கத்தில் வந்துவிட்ட அந்நிய பேண்ட் சூட் கோட்டு போன்றவற்றை உடனே சட்டென பிடுங்கிவிட முடியாது; அதற்கான மாற்று வைக்கப்பட வேண்டும்! அதுதான் நியாயம்! சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் 8 லட்சம்+ ஏழைத் தொழிலாளர்கள் வேலை பார்த்து பிழைக்கிறார்கள்!
அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் நமக்குள் நாம் செய்து கொள்ளும் வியாபாரம், வேலை வாய்ப்புகள் யாவும் எண்ணற்றவை!
ஒரு மாற்றுப் பண்டிகையை நாம் ஏற்பாடு செய்துவிட்டு தீபாவளி என்ற பெயரை நாம் ஓரம் கட்டி விடலாம்!
அது தமிழினத்தை நடத்திக் கொண்டிருக்கிற பற்பல தலைவர்களுடைய கடமை!
அட! தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய தமிழ் நிலங்களும் அன்னியர்களிடம் கொள்ளை போய் விட்டன! இனி அவர்கள் சொல்லும் மொழி பேச வேண்டும் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு நாம் உடன்பட வேண்டும்...இப்படி வந்த
கோட்டு சூட்டு பேண்ட் ஷர்ட்டுதான் தீபாவளி!!
தவிர்க்க முடியாதது... மாற்று ஏற்பாடு யார் எப்போது செய்வது? அப்படி செய்துவிட்டு நமது குழந்தைகளிடம் நாம் பேசலாம்!
-YozenBalki
25th Oct 2022
🥸🥸