Translate this blog to any language

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

"நாங்கள் இந்தியர்களில்லை"- மனுஷ்யபுத்திரன் கவிதை


எங்களுக்கு இந்தி தெரியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் வடக்கத்தி தெய்வங்களை
வணங்குவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களது குழந்தைகள்
காய்ந்த சப்பாத்தியை
உப்பைத்தொட்டுக்கொண்டு
பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் கிராமங்களுக்கு
எப்போதோ மின்சாரம் வந்துவிட்டது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

மாட்டு மாமிசம் உண்பவர்களை
இங்கே யாரும் அடித்துக்கொல்ல முடியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் காந்தியை 
கொலை செய்யவில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மதக்கலவரங்களில்
கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுவை
கீறி எடுத்ததில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
எங்கள் ஆண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கின்றன
எங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் ஊர்கள் அனைத்தும் 
சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
பேருந்துகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

இறந்த உடலை சுமந்துகொண்டு
இங்கே யாரும் முப்பது மைல்
நடக்க வேண்டியதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெயர்களுக்குப்பின்னே
சாதிப்பெயர்கள் இல்லை
சாதிப்பெயரைச் சொல்லி 
யாரும்அழைத்தால் 
நாங்கள் செருப்பால் அடிப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வேலையே இல்லாவிட்டாலும்
நாங்கள் பட்டினியாக இருக்கவேண்டியதில்லை
ரேஷன் அரிசியை சமைத்துத்தின்றுவிட்டு
தன்மானத்துடன் அரசியல் பேசிக்கொண்டிருப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மருத்துவம் படிக்கிறோம்
கணிப்பொறி படிக்கிறோம்
ஆங்கிலம் படிக்கிறோம்
பல்லாயிரம் மைல் கடந்து
உலகெங்கும் திரவியம் தேடிச் செல்கிறோம்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு
வடக்கு நோக்கி கூலித்தொழிலாளிகளாய்
எங்கள் இளைஞர்கள் செல்வதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் குழந்தைகள் 
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறப்பதில்லை
எங்கள் பெண்கள் பிரசவத்தில் இறப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் தெய்வ நம்பிக்கைகள் தனி
எங்கள் சித்தாந்தங்கள் தனி
இரண்டையும் நாங்கள் ஒருபோதும் கலப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வடக்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இருண்ட இந்தியா
அதில் நாங்கள் ஒருபோதும்
குடிமக்களாக இருந்ததில்லை

தெற்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இரவிலும் சூரியன் உதிக்கும் இந்தியா
அதை அவர்களால்
ஒரு போதும் புரிந்துகொள்ளவியலாது

11.8.2020
காலை 9.54
மனுஷ்ய புத்திரன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை NEP ஒரு குலக்கல்வித் திட்டமே!

*📌 5+3+3+4*


*📌 இது ஏதோ கூட்டல் கணக்கு அல்ல நம் எதிர்கால ஏழை சந்ததிகளின் கல்வியை பறிக்கும் குலக்கல்வி கணக்கு.*


*📍 புதிய கல்விக் கொள்கை 2020.*📍


*Pre kg*
*LKG*
*UKG*
*1st*
*2nd*


*📌 மொத்தம் 5 வருட தொடக்கக் கல்வி.*


*3rd*
*4th*
*5th*


*📌 பிறகு நாடு முழுவதும் 5 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*6th*
*7th*
*8th*


*📌 பிறகு நாடு முழுவதும் 8 -ம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு.*


*9th*
*10th*
*11th*
*12th*


*📌 இவற்றில் 10, 11,12 ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு.*


*📌 இத்தனை பொதுத்தேர்வுகளையும் தாண்டினால்தான் கல்லூரிக்குள் நுழைய முடியும்.*


*📌 கல்லூரிக்குள் நுழையவே ஒரு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்..*


*📌 18 வயதுவரை உள்ள அனைவரும் குழந்தைகள்தான்.*


*📌 12-ம் வகுப்பு மாணவன் 17 வயதுக்குள் இத்தனை தேர்வுகளை எழுதிதான் கல்லூரிக்குள் நுழைய முடியுமா?..வேண்டுமா???...*


*📌 நம் நாடு ஏழைகளை மட்டுமே கொண்ட ஒரு நாடு.*


*📌 இங்கே மூன்று வேளையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கும் குடும்பங்கள்தான் அதிகம்.*


*📌 அவர்களின் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புவதே தங்கள் குழந்தைக்கு மதிய உணவு கிடைக்கும் என்றுதான்.*


*📌 அப்படிப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஊக்கப்படுத்த இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம், இலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச செருப்பு,இலவச பஸ்பாஸ் என்று ஏறாலமாக கொடுத்ததுதான் நம் திராவிடம் கடந்த 50 வருடங்களாக கல்விக் கொள்கையில் சாதனைகள் செய்து வருகின்றன.*


*📌 அதைத்தான் தற்போது மாற்ற முயற்சிக்கின்றார்கள்.*


*📌 தங்கள் குழந்தைகள் தங்களை போன்றுஅல்லாமல்...*


*📌 படித்து பெரிய டாக்டராகவோ, கலெக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவு.*


*📌 நிற்க!!.*


*📌 8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடையும் ஒரு ஏழை மாணவன் தன் சக நண்பர்களால் கேலி செய்யப்பட்டால் அவன் மீண்டும் பள்ளிக்கு வராமல் போகலாம்.*


*📌 இருமுறைக்கு மேல் தோல்வியடைந்தால் பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல் தாங்கள் என்ன தொழில் செய்கின்றனரோ அதே வேளையை பார்க்க அழைத்துச் செல்வார்கள்.*


*📌 உதாரணமாக முடி வெட்டுபவரின் மகன் சலூன் கடைக்கு சென்று முடிவெட்ட கற்றுக் கொள்வான். பிறகு அந்த வயதில் கொஞ்சம் காசு பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.*


*📍 அதன் பிறகு அந்த குழந்தை படிப்பதை நிறுத்திவிடும். இதற்கு பெயர்தான் குலக்கல்வி என்று பெயர்.*📍


*📌 நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் சூத்திர பஞ்சமர்களே!!*


*📌 அவர்களின் குழந்தையின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டால்...*


*📌 பிறகு கல்லூரிக்குச் செல்ல ஆள் இருக்க மாட்டார்கள்...*


*📌 அல்லது போட்டியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.*


*📌 இதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் உயர்சாதியினர் மட்டுமே படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.*




*📌 ஏற்கனவே கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் இனி கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்படும்.*


*📌 தரத்தை கூட்டுகின்றேன் என்று போட்டியாளர்களை குறைப்பதே அவர்களின் நோக்கம்..*


*📌 கற்கை நன்றே!..*
*கற்கை நன்றே!!..*
*பிச்சை புகினும் கற்கை நன்றே!!..*
*என்ற வார்த்தைகள் இனிவரும் காலங்களில் காணாமல் போகலாம்.*


*📌 ஏனெனில் இனிமேல் பிச்சையெடுத்தெல்லாம் கல்வி கட்டணம் நம் நாட்டில் செலுத்த முடியாது..*


*📍 ஏழையா பொறந்த உனக்கெதுக்குடா படிப்பு என்று அரசே கேள்வி கேட்பதுபோல் உள்ளது.!!*📍


*📌 எனக்கு ஐந்தாம் வகுப்புவரை ABCDEF யை தவிர ஆங்கிலத்தில் எதுவும் படிக்க தெரியாது.*


*📌 ஆனால்..*


*📌 பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.*


*📌 இன்று போல் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தால்??....*


*📌 அன்றே என் பள்ளிப்படிப்பு முடிந்திருந்தாலும் முடிந்திருக்கலாம்.*


*📌 இதை ஏன் கூறுகின்றேன் என்றால் ஒரு குழந்தை 5 ம் வகுப்பில் படிக்காதது 8 ம் வகுப்பிலிருந்து நன்றாக படிக்கும் 8 ம் வகுப்பில் படிக்காத குழந்தை பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும்....*


*📌 எனவே...*


*📌 அவர்களை பிஞ்சிலேயே கல்வி கொள்கை( கொள்ளை ) என்ற பெயரில் கசக்கி பிழிவது சரியல்ல!!..*


*📌 அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ளது போல் 10,12 ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தினால் போதும்.*

எவரோ ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அருமையாக எழுதி இருந்தார்! அது இதுதான்!

YozenBalki