Thursday, December 15, 2011

How Pyschology is an incomparable Art -Top 10 Reasons! உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்!

மனித மனம்!
ஒரு உளவியல் விற்பன்னன்/ உளவியல் குரு பார்வையில்:

1 .  உடலை நம்பியே மனம் இருப்பினும் மனம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைக்கான முழுக் காரணி!
2 .  மனத்தில் சோர்வு அல்லது பயம் ஏற்படும்போது பல்லாயிரம்
மன/ உடல் நோய்கள் ஏற்படுகின்றன!
( WHO declares that more than 70-80% physical diseases are caused by depressed mind)
3 .  பிறவியிலேயே சிதைந்த மனத்தை யாராலும் சரி செய்ய முடியாது!
4 .  உடல் நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும் உடல் அவயங்களைக் கூட யாரும் மாற்றிவிடலாம்,
      ஆனால் ஒருவனின் மனம் போல இன்னொரு மனத்தை/மூளையை    யாராலும் தரமுடியாது!
5 .  ஏனென்றால், இன்னொருவர் மூளையில் இன்னொருவர் வாழ்க்கையின் நினைவுகளும் அனுபவமுமே இருக்கிறது! அதை யார் விரும்புவார்?
6 .  ஆக, பாதிக்கப்பட்டவரின்  மனத்தையே செப்பனிட்டு
மீண்டும் அவரிடம் தர வேண்டும்!
7 .  மேலும், மருந்து-மாத்திரை இன்றி, கத்தியின்றி ரத்தமின்றி எந்த வித சேதாரமும் இன்றி!
8 .  அதுவும் குறைந்த சில நாட்களிலேயே; விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல!
9 .  நிரூபணம் செய்யக் கூடிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் சிகிச்சைக்குப் பிறகு தெரியவேண்டும்!
10 . நிரந்தர நற்-பலன் தரவேண்டும்!


இதையெல்லாம் செய்யக் கூடிய ஒரு அதீத உளவியல் கலை
உலகின் அனைத்துக் கலைகளையும் தாண்டிய தன்மையது ஆகும்!

ஆம்! செத்தவனை உயிர்ப்பித்தல், இரும்பைத் தங்கமாக்குதல், கை அசைவில் கைக்கடக்கமான ரத்தினங்கள் வரவழைத்தல் போன்ற பிற கலைகளை விட உன்னதமானது!

 ( உயிர்ப்பித்தவனும் உயிர்ப்பிக்கப்பட்டவனும்  மீண்டும் ஒருநாள் இறப்பர்..தங்கச் சுரங்கத்துக்கே அதிபதி ஆனாலும் நிம்மதிக்கு அதிபதியாக வேண்டுமே..ரத்தினங்கள் வரவழைப்பதை விட ஒரு நாட்டுக்கு சுபிட்சம் வரவழைக்க முடிந்தால் அது மிகவும் மேன்மையானது )

மேலும், உடலில் கோளாறுகள் இல்லாத ஒரு மாணவர், பொறியாளர், வழக்குரைஞர், சினிமா கலைஞர், வணிகர் போன்றோரைக் கூட நீங்கள் உலகில் பார்த்து விடலாம்!

ஆனால், மனதில் பயம்/துக்கம்/கோபம்/குற்ற உணர்வு. உலகத்தினரோடு ஒப்புரவு கொள்ளாமை,  அல்லது கொஞ்சமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கான 'உள இயல் குறைபாடுகள்' இல்லாத ஒரு மருத்துவரையோ, மதத் தலைவரையோ, அறிவியல் அறிஞரையோ உலகில் காண்பது அரிதினும் அரிது ஆகும் ! அவர்களின் கட்புலனாகா உளவியல் குறைபாடுகளையும் உணர்ந்து உள்வாங்கி 'கத்தியின்றி ரத்தமின்றி' பழுது நீக்கி, சிற்பம் செதுக்குவது போல் செதுக்கி, அவர்களது மூளையை, அவர்களது உயர் சிந்தனையை அவர்களிடமே மீண்டும் தந்து, புத்தம் புது வாழ்வை மீட்டுத் தருகின்ற கலை, 'உயர்-யோக உள இயல்' கலை ஆகும்!

ஆக, பன்னூறு நதிகள் கடலை வந்து அடைவது போல எல்லாக் கலைகளும் வந்து சங்கமிக்கிற இடம் உள இயல் துறை! ஆயினும் நல்லதொரு உள-இயல் கலைஞரை, தேவையுள்ள ஒருவர், இன்னும் பழுதுபடாத தனது  "ஒரு-பாக அறிவாற்றல்" வழியேதான் கண்டுகொள்ள வேண்டும்!

மேற்கண்ட இந்த பத்து அம்சங்களையும் நிதானமாக படித்து உணர்ந்தால், "உளவியல் நிபுணத்வம்" என்பது  ஏன் அனைத்துத் தரப்பினராலும் அதிக ஆர்வம்/பெருமதிப்புடன் கவனிக்கப் படுகிறது என்று விளங்கும்!


-யோஜென் பால்கி
yozenbalki________________________________________________
"To me Psychology is more an Art than a science. Because, any science can be taught to multitudes.
But an Art can not be so. A real senior artist, wishing to teach for a student and a disciple who is searching for a real Guru are one day, somewhere, suddenly meeting in a same frequency! Now His heart opens up and unfolds the mysteries of all tangibles and intangibles. It is just an Art from Heart to Heart communion! Never a 'mind-game' and a science to me!".

No comments:

Post a Comment

You can give here your comments: