மகன்: அப்பா! திட்டாதீங்கப்பா! நான் இப்போ எட்டாவது தானே படிக்கிறேன்! நான் இன்னும் பெரிசாகி காலேஜ் போகும் போது பாருங்க! எப்பிடி நூத்துக்கு நூறு எடுத்துக் காட்டப் போறேன் !
தந்தை: கிழிச்சே! விளையும் பயிர் முளையிலேன்னான் ஒருத்தன்! சின்ன சைஸா இருக்கும் போதே உருப்படாதது - கிழடாகும் போது உருப்பட்டுக் கிழிக்கப் போவுதா? சென்னையும் நீயும் எனக்கு ஒண்ணுதாண்டா!சிங்கப்பூர் ஆக்குறோம்ன்னு சொல்லாத ஆட்சி இங்கே உண்டா! எள்ளளவும் இன்னைக்கே செய்யாதவன், என்னைக்காவது ஒருநாள் இமயத்த புரட்டுவேன்னா எப்படி? இதெல்லாம் பெத்தவங்க தலை எழுத்துப்பா!
(சென்னையைப் பற்றிய நாசூக்கான கிண்டல் இது)
-மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: