வைட்டமின் A:
இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.
வைட்டமின் B:
இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.
வைட்டமின் C :
இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.
வைட்டமின் D :
வைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.
வைட்டமின் E :
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.
புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:
1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.
3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)
5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.
வைட்டமின்கள்
1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.
2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.
3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.
4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.
5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்
பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
1. ஆப்பிள்:ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
2. ஆரஞ்சு: எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ஓரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
3. திராட்சை: சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "அவுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.
4. மாதுளை: இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.
5. அன்னாசி: "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
6. சப்போட்டா: - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
7. பப்பாளி: - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: