Translate this blog to any language

செவ்வாய், 12 நவம்பர், 2024

ஒறவே!! திராவிடத்தால் வீழ்ந்தோம்!!😋😋

திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றீயே தம்பி, உன்னோட பெயர் என்ன?

Selvam sir!

சரி, அப்பா என்ன வேலை செய்றாறு..?

சிறு விவசாயி சார்..

அப்பா பெயர் என்ன..?

கோபால் சார்..

தாத்தா பெயர் என்ன..?

குப்புசாமி..

ரெண்டு பேரும் என்ன படிச்சிருக்காங்க..?

தாத்தா கை நாட்டு, அப்பா எட்டாவது வரை படிச்சிருக்கார்..

நீ..?

பி.இ.

காசு கட்டி படிச்சியா?

இல்ல, பிரீ சீட்.. MBC/BC/SC கோட்டா.. முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, இலவச பஸ் பாஸ் எல்லாம் குடுத்தாங்க.. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தாங்க..

அம்மா என்ன தம்பி செய்றாங்க?

வீட்டோட தான் இருக்காங்க, ரொம்ப நாளைக்கு முன்னாடி கர்ப்பப்பை புற்றுநோய் வந்தது, கலைஞர் காப்பீட்டு திட்டத்தில இலவசமா ஆபரேஷன் செய்துகிட்டங்க.. இப்போ நல்லா இருக்காங்க..

நீ மட்டும் ஒரே பையனாப்பா?

இல்லைங்க, ஒரே தங்கச்சி, நுழைவுத் தேர்வ ரத்து செய்தப்போ, ஓபன் கோட்டாவுல மெடிக்கல் சீட் கிடைச்சது.. இப்போ லண்டன்ல மேற்படிப்பு படிச்சிட்டு இருக்காங்க..

சரி தம்பி, இப்ப நீங்க என்ன செய்யுற..?

நான், ஒரு MNC கம்பெனியில சாப்ட்வேர் மேனேஜரா வேலை செய்யுறேன்.. ஆன்சைட்ல கொஞ்சநாள் இருந்தேன்..

கல்யாணம் ஆயிடுச்சா..?

கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க..

உங்க மனைவி என்ன செய்றாங்க..?

அவுங்க ஈபில இஞ்சினியரா வேலை பார்க்கிறாங்க

உங்க பிள்ளைகள் கவர்மெண்ட் ஸ்கூல்யா படிக்கிறாங்கா..?

நோ.. நோ.. கான்வெண்ட்ல படிக்கிறாங்க..

அப்புறம், சொந்தம்மா வீடு? கார்??

கிராமத்துல சின்னதா ஓட்டு வீடு, பாகம் பிரிச்சதுல பெரியப்பாவுக்கு போயிடுச்சி.. பக்கத்து டவுன்ல வாடகவீடுல தான் இருந்து படிச்சேன், வளர்ந்தேன்.. ஆனா, இப்போ, சென்னை OMRல டீலக்ஸ் டிரிபுள் பெட்ரூம் பிளாட்டு, ECRல வைஃப் பேர்ல பண்ணை வீடு, SUV காருன்னு செட்டில் ஆயிட்டேன்..

சரி தம்பி! 

இதுக்கிடையில் எங்க தம்பி திராவிடத்தால் வீழ்ந்திங்க..?

அது வந்து.. அது வந்து..

சொல்லுங்க தம்பி , எப்ப திராவிடத்தால் வீழ்ந்த..?

சார் மன்னிச்சிக்கங்க, இப்படி சொல்லியே பழக்கமாயிடுச்சி அதான்.. ஆனா, சார், எல்லா மாநிலத்திலேயும் தான் மக்கள் முன்னேறியிருக்காங்க.. இது என்ன பெரிய விஷயம்மா?

கரெக்ட்டான கேள்வி தம்பி... 

நாளைக்கு உன்னோட ஆபீசுக்கு போன உடனே, உன் கூட வேலை செய்யுற மற்ற மாநில ஆட்களை பாரு, குறிப்பா வட மாநில ஆட்கள, அவுங்க பேர்ல இருக்க 'சர் நேம்ம' கூகிள்ல தேடு.. அதுல 80% ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவ சேர்ந்தவங்களா இருப்பாங்க, அதுவும் சிட்டியில படிச்சி வளந்தவுங்களா இருப்பாங்க.. 

ஆனா, ஐடி போன்ற கார்பரேட்கள்ள வேலை செய்யுற தமிழ்நாட்ட சேந்தவுங்கள பாத்தா, எல்லா தரப்பையும், பிரிவுகளையும் சேர்ந்தவுங்க கட்டயமா இருப்பாங்க.. ஏன்னா, இங்கிருப்பது, அனைவருக்கும் பலனளிக்கும் ஒருங்கிணைத்த வளர்ச்சி, இன்குளுசிவ் க்ரோத்.. மற்ற இடங்கள்ள அப்படி இல்ல..  

அப்படிங்களா சார்...  
 
ஆமா, போன்ல நெட் இருக்குல்ல, அதுல தேடி, தமிழ் நாடு எப்படி இந்தியாவுல எல்லா சமூக சுகாதார பொருளாதார குறியீடுகள்ள (Social economical indicators) தொடர்ச்சியா முதலிரண்டு இடங்கள்ள இருக்கு, GDPல இரெண்டாம் இடத்துல இருக்கு.. இதையெல்லாம் படிச்சி தெரிஞ்சிக்குங்க.. 

வெறும் வாட்ச்சப்ல யாரோ பார்வர்ட் செய்வத அப்படியே நம்பாதிங்க.. விஷங்களை தேடி, படிச்சி உண்மைய தெரிஞ்சிகிங்க...  

ரொம்ப நன்றி சார்.. கண்டிப்பா படிக்கிறேன் சார்...

👋👋👋👋 The truth
Courtesy:

ட்விட்டரில் என்னுடைய நண்பர் சண்முகம் சின்னராஜ் எழுதியது
@shanmugamchin10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: