Translate this blog to any language

புதன், 27 ஆகஸ்ட், 2025

விநாயகர் வழிபாடு எப்போது வந்தது?

எனக்கு தெரிந்து விநாயகர் வழிபாடு பிள்ளையார் வழிபாடு என்பது பவுத்த சமண சமயங்கள் தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்த காலத்தில் அதை தடுக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.


அப்போது ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயத்தினர் மற்றும் வைணவ சமயத்தினர் (அறுசமய வழிபாடு: சைவம், வைணவம், சௌரம், கௌமாரம், சாக்தம், காணாபத்யம்)
ஒன்று கூடி இந்த அறுவரும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக வைத்து திணிக்கப்பட்ட வழிபாடாகவே அது தெரிகிறது! 

காரணங்கள் நான் சொல்கிறேன்: 

1. கோயில்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் விநாயகருக்கு எனறு முருகர் போன்று தொன்மையான தனிப்பட்ட பெரிய கோயில் எதுவும் கிடையாது.

2. பிள்ளையாரை "ஓம்" எனும் பிரணவத்தின் வெளிமுக குறியீடாகவே இன்றும் சொல்வதை நாம் கருத்தில் கொள்ள முடியும். 

3.  பிள்ளையார் ஓம் போலவே அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.
 பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பிற்கால ஓலைச்சுவடிகள் அதிகம் உண்டு. 

4.  அனைத்து அறுசமய கோவில்களிலும் பிற்காலத்தில் பிள்ளையார் சிலைகளை வலிந்து திணித்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். அது மட்டும் புதிதாக செங்கற்களால் சில காலத்துக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கும். 

5. அது போதாது என்று தெருத்தெருவுக்கு ஊர் ஊராக ஆலமரம் அரசமரம் குளக்கரையில் திடீர் பிள்ளையார்கள் சைவம் தழைத்து ஓங்கிய தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது. 

6. அதுவும் போதாமல் தெருக்களில் நேர் குத்து வருகின்ற இடங்களில் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய பிள்ளையாரை கண் திருஷ்டி பிள்ளையார் என்றும் வைக்கத் தொடங்கினார்கள்.

7. சமண சமயம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய போது அதைத் தடுக்கும் விதமாக அவர்களை வஞ்சகமாக வாதத்திற்கு அழைத்து ஏதோ ஒரு வகையில் தோற்கடித்து 8000 சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றவன் திருஞானசம்பந்தன் என்ற ஆரிய சைவன் ஆவான். 

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென் றழிக்கத் திருவுள்ளமே…”
”அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெயத்திரு வுள்ளமே…”
”வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெயத்
திருவுள்ளமே"! இதெல்லாம் அவனுக்கு சமணர்கள் மீது இருந்த வெறுப்பை தெளிவிக்கும் பாடல்கள்! 

8. நரசிம்மவர்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி (சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர்) வாதாபியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஒரு வித்தியாசமான கணபதி சிலையை எடுத்து வந்து தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்தார். 
முதலாம் நரசிம்ம பல்லவனின் ஆட்சிக் காலம் (கி.பி. 630-668) ஆகும்.
அதுவே வாதாபி கணபதி என்று இன்றும் இந்தச் சிலை திருவாரூர்த் கோயிலில் உள்ளதாக ஒரு சாராரும், திருச்சங்காட்டங்குடியில் உள்ளதாக வேறு ஒரு சாராரும் கருதுகின்றனர். இது பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது.

9. ஆக கி.பி‌. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லை, விநாயகருக்கு (காணாபத்தியம்) என்று பெரிய கோயில்களும் இல்லை என்றே நம்மால் உணர முடிகிறது.

ஆக என்னுடைய துணிந்த கருத்து என்பது பௌத்த சமண மத சமயங்கள் தென்னிந்தியாவில் காலூன்றக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்கும் விதமாக ஐந்து அல்லது ஆறு சமயத்தினர் கூடி உருவாக்கிய அல்லது திணித்த ஒரு பொது இறை வழிபாடு விநாயகர் வழிபாடு என்கிற பிள்ளையார் வழிபாடு எனலாம்!

Yozen Balki 



செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

An Open Letter on Twitter Decency


A valuable social media platform like Twitter-X carries a huge responsibility that should never be ignored.



People from different countries and languages express their thoughts here. Twitter has a reporting feature for obscene or violent content, but in my experience, it fails 95% of the time.

Why?

1. Complaints are translated word-for-word into English.


2. Obscene words in ancient languages like Tamil (and many others) are culturally recognized, but word-for-word translation often misses their real meaning.


3. In Tamil society, for instance, most decent people avoid using such words in public — but Twitter fails to catch them.


A Possible Solution:

Twitter-X can appoint small monitoring groups (10 members each) from political parties and opposition parties in every country.

These groups can judge posts in the context of their language, culture, and customs.

This will make it clearer which posts are truly obscene and which are acceptable.


If not, Twitter risks turning into a platform dominated by indecent voices, driving away civilized users.

I sincerely request Twitter-X to make such arrangements, so that it remains a decent platform for future generations.

Thanks,
Yozenbalki
Senior Psychologist
Chennai, South India

ஞாயிறு, 25 மே, 2025

கீழடி நாகரிகமும் ஆரிய டகால்டி வேலையும்!


🔹கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான கீழடியின் தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!

🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!

🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!

தமிழர் வரலாறு - பண்பாட்டின் மீதான தனது வெறுப்பை மீண்டும் ஒரு முறை ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.
2,600 ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மை வாய்ந்த கீழடி நகர நாகரிகம் அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எழும் காழ்ப்பும், கோபமும் கொஞ்சநஞ்சமல்ல; ஆரியத்துக்கு மூத்த திராவிட நாகரிகத்தின் அறிவியல் சார்ந்த நிரூபணம் அவர்களுக்குத் தரும் அளப்பரிய ஆற்றாமையும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.

🔹கீழடி ஆய்வை நிறுத்திட ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகள்!

2014-2015 ஆம் ஆண்டில் (முதல் ஆண்டு) கீழடியில், இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தொன்மைக்கான சான்றுகள் வெளிப்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஆய்வுகள் (2015-2016) நடைபெற்ற பின், கீழடியின் காலம் குறித்தும், தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வாழ்விடப் பகுதி கிடைத்த நிலையிலும், கீழடி ஆய்வை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியது ஒன்றிய அரசு.

மூன்றாம் ஆண்டு ஆய்வு நிறுத்தப்பட்டது. அதற்கும் வழக்கு தொடர்ந்து, ஆய்வு தொடரப்பட வேண்டும் என்று போராட வேண்டியிருந்தது! ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்பட்டார். அவரிடமிருந்து அகழாய்வுப் பணி பறிக்கப்பட்டு சிறீராம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமேல் கீழடியில் எதுவும் இல்லை என்று கூறினார். அதன்பின், தமிழ்நாட்டில் எழுந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்போது பத்தாவது ஆண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.

🔹கோயில்களை ஆய்வதிலேயே கவனம்!

1939 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் வைகை நாகரிகமும், பொருநை நாகரிகமும் சிந்துவெளிக்கு இணையான தொன்மை படைத்தவையாக இருக்கக்கூடும் என்று அந்நாளைய இந்தியத் தொல்லியல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் என்பவர் முன்னறிவித்திருந்தும், அது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. தமிழ்நாட்டில் கோயில்களை ஆராய்வதிலேயே தொல்லியல் துறை அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திராவிடப் பண்பாட்டின் தொன்மையை நிறுவும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் முடக்கி வைக்கப்பட்டே இருந்தன. இந்நிலையில் கீழடி ஆய்வுகள் தான் மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் மூலம், இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கமே தமிழ்நாட்டிலிருந்து தான் என்னும் அளவுக்கு தொன்மைத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியது எத்தனை உண்மை என்பது தொடர்ந்து நிறுவப்பட்டுவருகிறது.

🔹புராணமும், வரலாறும் ஒன்றா?

காலம் காலமாக இந்திய வரலாற்றின் தொடக்கமே வேத கால நாகரிகம் தான் என்றும், புராணங்களும், இதிகாசங்களுமே இந்திய வரலாறு என்றும் அளந்துவிட்டுக் கொண்டிருந்தவர்களின் புளுகுகள் எல்லாம் சிந்துவெளி ஆய்வுகள் மூலம் அம்பலப்படத் தொடங்கின. தெற்கின் வரலாறு கீழடி ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியதும், மொத்தமாக அவர்களின் பொய்மூட்டைகள் அடியற்றுப் போயின. சிந்துவெளி ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்க முயல்கிறார்கள். கிருஷ்ணனுக்கு ஆதாரம் துவாரகைக் கடலுக்குள் தேடுகிறோம் என்கிறார்கள். ஆனால், கிடைத்த ஆதாரங்களை அழிக்கவும், மொத்தமாக இழுத்துமூடவும் முயல்கிறார்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கிடப்பில் போட, ‘ஆதாம் பாலம்’, ‘இராமர் பாலம்’ என்ற ‘புரூடா!’ வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. ஆதாரம் தரவில்லை!

இந்நிலையில் பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 982 பக்க ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அதை வெளியிடாமல் இருப்பதைக் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராய்வதற்கான கூட்டம் வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், கீழடி அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொரு சதிச் செயலில் இறங்கியுள்ளது.

-ஆசிரியர் திரு. கி. வீரமணி

X பதிவில் இருந்து 
இன்று...(Twitter)

🌿🌿🎊🎊

திங்கள், 19 மே, 2025

பக்தி - உழைப்பு எது தேவை?


கடவுள் நம்பிக்கை பற்றி கொஞ்சம் பேசலாம்! 

அது இருக்கிறதா இல்லையா என்ற நாத்திக - ஆத்திக கருத்து பற்றி இங்கு பேசவில்லை! 

கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திக வாழ்வில் கடும் முயற்சி பக்தி என்ற இரண்டு கூறுகளை பற்றி நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்! 

ஒரு கடவுள் நம்பிக்கை சுமாராகக் கொண்ட ஆத்திகன்! 

ஆனால் 99% தனது 

முயற்சி 
கடும் உழைப்பு 
அறிவுத்திறன் 

இந்த மூன்றைக் கொண்டு ஒரு ஏக்கர் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடுகிறான்! 
நேரம் கிடைக்கும் போது கோயிலுக்கு போகிறான் மனதுக்குள் வணங்குகிறான் அதன் அளவு 1% -10% மட்டுமே!

இன்னொருவன் கடும் பக்தன்
அவனும் அதே போல விவசாயி ஒரு ஏக்கர் நிலம்! 
ஆனால்,
கிட்டத்தட்ட 90% -99% இறைவன் மீது நம்பிக்கை வைத்து எப்போதும் கோயில் குளம் ஆன்மீக புத்தகங்கள் உபன்யாசங்கள் சங்கீதம் தியானம் என்று தன்னுடைய வாழ்வில் விழித்திருக்கும் நேரத்தில் 90% இறை வழிபாட்டிலும் 1%-10% மட்டுமே தன்னுடைய விவசாயத்தின் மீதும் கருத்து செலுத்துகிறான்! 

அறுவடை காலம் வரும் பொழுது இந்த இருவரில் யாருடைய நிலத்தில் அதிக விளைச்சல் இருக்கும்; உலகப் பயன் இருக்கும்? 

யாருடைய குடும்பம், ஊர், நாடு மேன்மையாக இருக்கும்? யாருடைய நிலத்திலிருந்து வரி வசூல் அதிகம் கிடைத்து கோயிலை பராமரிக்கும், ஆன்மீகத்தை வளர்க்கும், சமூகத்திற்கான நற்செயல்கள் யாவும் நிகழும்? 

முன்னவர் உழைப்பால் கோயில்களும் ஆன்மீகமும் கூட சேர்ந்தே வளர்கிறதே! 

பின்னவரின் அதீத ஆன்மீகத்தால் சமூகத்துக்கு பயன் தராத கற்பனை வாழ்க்கையால் கோயில்களுக்கும் ஆன்மீகப் பெரியோர்களுக்கும் கூட பெரிதாக தான தர்மம் செய்ய முடியாத அளவுக்கு அவனது வாழ்க்கை சுருங்கிப் போகிறதே!

சோற்றுக்கு உப்பு அவசியம்; உப்பே சோறு அல்ல!

வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியம்! ஆனால் ஆன்மீகமே வாழ்க்கை அல்ல! 

ஆன்மீக வாழ்க்கை, அதையே பிறருக்கு நடத்தித் தருகின்ற லௌகீக வாழ்க்கை இரண்டையும் ஒப்பிடும் பொழுது மேற்கண்ட இரு விவசாயிகளின் பயனுள்ள வாழ்க்கை முறையை உற்று நோக்குங்கால் கடும் உழைப்பு, தொடர் முயற்சி, அறிவுத்திறம் எவ்வளவு அவசியம் என்று நமக்கு விளங்கும்! 

கர்ம யோகமே நனி சிறந்ததல்லவா?
பக்தி/ஞான யோகிகளுக்கும் எது சத்தாகத் திகழ்கிறதாம்?


அதனால்தான் 

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!"

என்றார் திருவள்ளுவர்!

இறை நம்பிக்கை இருப்பவர்களுக்கும் லவ்கீக வாழ்க்கையில் இருக்கிற குடும்பஸ்தர்கள் தான் உலகம் முழுதும் இருக்கும் கோயில்களை கட்டி இன்றும் அதை தங்கள் உழைப்பினால் அது தந்த பொருளினால் காப்பாற்றி வருகிறார்கள் என்றுணர வேண்டும்!

பெரிய பெரிய ஞானிகள் என்று தன்னை கருதிக் கொண்ட அல்லது மக்கள் நம்பிய பலருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தந்தது, அவர்களுக்கு தேவையான புகழைத் தந்தது மேற்படி 99% மக்களின் உழைப்பே, போற்றுதலே ஆகும் என்று உணர்க!

ஆதலால், ஆன்மீகம் வளர வேண்டும் என்றாலும் கூட
மேற்படி சொல்லப்பட்ட இரண்டாம் நிலை 
விவசாய-ஆன்மீகவாதிகளுக்கும் முதலில் தேவைப்படுவது,

1. முயற்சி 
2. கடும் உழைப்பு 
3. அறிவுத்திறன் 

என்றுணர்தல் உலக 
நலம் பயக்கும்!

-யோஜென் பால்கி

Yozen Balki 
Senior Psychologist 


சனி, 5 ஏப்ரல், 2025

உங்கள் நிலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் நிலத்தை மீட்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள்

உங்கள் நிலத்தின் எல்லை FMB (Field Measurement Book) பதிவு, பட்டா, பத்திரம், வருவாய் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும், பக்கத்து நில உரிமையாளர் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்தால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
---
👉 முதலில் சமரச முயற்சி செய்யவும்
👉 கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தாசில்தார் அலுவலகத்தை (Taluk Office) தொடர்பு கொள்ளவும்.
VAO-வை அழைத்து, நில எல்லை கணக்கீடு (Survey) மீண்டும் செய்ய சொல்லலாம்.
தலையிடாமல் தப்பிக்க முடியாது என்பதற்காக வருவாய் அதிகாரிகளிடம் எழுத்துப் புகார் அளிக்கவும்.
👉 கிராம சபை மற்றும் ஊராட்சி தலைவர் முன் பிரச்சினையை முன்வைக்கவும்.
சில சமயங்களில், சமூக நடவடிக்கைகள் வழியாக சமரசம் செய்யலாம்.
---
👉 நில அளவை (Survey) முறையாக நடத்த சொல்வது
👉 தாசில்தார் அலுவலகத்தில் (Revenue Department) "Re-Survey Petition" மனு அளிக்கலாம்.
👉 FMB வரைபடத்தை (Field Measurement Book) பார்த்து, Survey Number மற்றும் எல்லை மதிப்பீடு செய்து கொடுக்க வேண்டும்.
👉 நில அளவைக்காக Taluk Surveyor-ஐ கொண்டு வர சொல்லலாம்.

 நில அளவைக் கண்காணிக்கும் அதிகாரிகள்:
VAO (Village Administrative Officer)
Taluk Surveyor
Revenue Inspector (RI)

முக்கியம்:
நில அளவை முடித்த பிறகு, "Survey Sketch" மற்றும் "Surveyor Report" ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
---
👉 ஆக்கிரமிப்பை அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்கவும்
👉 அரசு அதிகாரிகளிடம் எழுத்து புகார் கொடுக்கவும்
👉 தாலுகா அலுவலகம் (Taluk Office)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (District Collectorate)
👉 "Encroachment Complaint" மனு எழுதி பதிவு செய்யலாம்.
தகுந்த ஆதாரங்களுடன், பக்கத்து நில உரிமையாளர் தவறாக ஆக்கிரமித்துள்ளதாக எழுத்துப் புகார் கொடுக்க வேண்டும்.
👉 காவல்துறையில் புகார் அளிக்கலாம்
உங்கள் நிலத்தில் பலவந்தமாக ஆக்கிரமிப்பு செய்தால், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் (FIR) புகார் செய்யலாம்.
👉"Criminal Trespassing" (அனுமதி இல்லாமல் நுழைதல்) பிரிவு 441, 447 உட்பட தொடர்புடைய சட்ட பிரிவுகளில் வழக்கு தொடரலாம்.
---
👉 நீதிமன்ற வழக்கு தொடரலாம்
👉 சமரசம் நடக்கவில்லை என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.
👉 "Civil Suit for Declaration and Injunction" (உங்கள் உரிமையை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்பை தடுக்கும் மனு).
👉"Eviction Suit" (ஆக்கிரமிப்பாளரை வெளியேற்ற வேண்டிய வழக்கு).
👉 வழக்கு தொடரும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்கள்:
Sub Court / District Court (சில மாவட்டங்களில் Munsif Court-லும் பரிசீலிக்கலாம்).

 வழக்கு தொடரும் போது தேவையான முக்கிய ஆவணங்கள்:
1. உங்கள் நிலத்தின் பத்திரம் (Sale Deed, Gift Deed, Partition Deed, etc.)
2. FMB Sketch (நில வரைபடம்)
3. Patta / Chitta / Adangal (Revenue Records)
4. Surveyor Report (நில அளவியல் சான்று)
5. அதிகாரப்பூர்வ புகார் மனுக்களின் நகல்கள் (Complaint Copy, Acknowledgment, etc.)
---
👉 லஞ்சம், அதிகார தவறுகளை எதிர்கொள்வது
👉 அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புகார் செய்யலாம்
மாவட்ட ஆட்சியர் (District Collectorate)
தொழில் மற்றும் வருவாய் துறை (Revenue Department)
மக்கள் குறை தீர்ப்பு அமைப்பு (CM Cell Complaint, Online Grievance Redressal Portal)
👉 மக்கள் குறை தீர்ப்பு மையங்களில் புகார் செய்யலாம்
தமிழ்நாடு அரசின் CM Helpline (1100) / cmhelpline.tn.gov.in
மாவட்ட குடிமை குறை தீர்ப்பு மையம் (District Grievance Redressal Cell)
---
👉 தீர்வுக்கான முக்கிய சட்ட வழிமுறைகள்
👉 தகவல் அறியும் உரிமை (RTI) மனு மூலம் நில அளவைக் கோரலாம்.
👉 நில உரிமை உறுதி செய்ய சிவில் வழக்கு (Civil Suit) தொடுக்கலாம்.
👉 அரசு அதிகாரிகள் செயல்படவில்லை என்றால், CM Cell-ல் புகார் செய்யலாம்.
👉 போலீசில் புகார் கொடுத்து, சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
👉 நீதி மன்ற உத்தரவை பெறலாம் (Stay Order or Eviction Order).
---
 முக்கிய கட்டுப்பாடு & தீர்வு
👉 தகுந்த உரிமை ஆவணங்களுடன், அரசு அதிகாரிகளிடம் முறையான புகார் அளிக்க வேண்டும்.
👉 சமரசம் இல்லாவிட்டால், நில அளவைக் கணக்கிடச் சொல்லி, சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
👉 அதிகாரிகள் உதவவில்லை என்றால், RTI & CM Cell புகார் அளிக்கலாம்.
👉 சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
👉 உங்கள் நில உரிமை சட்டப்படி உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
👉 பகிரங்க புகார் மனுவின் மூலம் நீதிமன்ற வழக்கு தொடரலாம்.

#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்

🌿🌿💞💞

Courtesy: Twitter X 
@jkvoffl

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

திருச்சி சிவா அவர்களின் மனம் உருக்கும் அஞ்சலி கடிதம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. திருச்சி சிவா அவர்கள் தனது ஆருயிர் மனைவியின் மரணத்துக்கு பிறகு அவருக்காக எழுதிய அஞ்சலி கடிதம்; அது நம்மை எல்லாம் உருக்கும்!

அவரது அன்பு ததும்பும் பேச்சைக் கேட்கும்போது எனது கண்களில் கண்ணீர் நிரம்புகிறது! 

நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜிக்கின்ற அவரது இனிய உள்ளத்தில் தன் மனைவி மீதான இத்தனை காதல் மறைந்து இருந்திருக்கிறது! 

அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு அதிகம் என்றாலும் இன்னும் மதிப்பு கூடுகிறது!

அந்த கடிதத்தின் வாயிலாக அவர் பிறருக்கு அதாவது ஆண்களுக்கு/ கணவர்களுக்கு சொல்ல வருவது இதுதான், நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்கின்ற காலத்தில் அவளோடு மனம் விட்டு பேசுங்கள்! நேரமே இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்! 

அடுத்த மாதம் நமக்கு நேரம் கிடைக்கும் அடுத்த வருடம் நமக்கு நேரம் கிடைக்கும் என்று இருக்கிற காலத்தை வீணடித்து விட்டு ஒருவேளை அவள் போய் சேர்ந்து விட்டால் பிறகு வருந்தாதீர்கள்! 

உங்கள் அன்பை வார்த்தைகளாகவும் பரிசு பொருள்களாகவும் அவ்வப்போது தெரிவித்து உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்! 

தோழர்கள் இந்த இடுகையை
 உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்!


-YozenBalki 




வியாழன், 9 ஜனவரி, 2025

சீமானிய ரசிகர்களை யாராலும் காப்பாற்ற முடியாது!

தந்தை பெரியாரை பற்றி மட்டுமல்ல, மேதகு பிரபாகரன், பொட்டம்மான் உள்ளிட்ட பல தமிழின தலைவர்களை தரக்குறைவாக பேசியவர்தான் சீமான்.

2009க்கு முன் திமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தார். 2009க்கு பின் அதிமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு திமுகவை விமர்சித்தார். பாஜகவிடம் நிதிபெற்று பெரியாரை விமர்சித்தார். பின்னர் திமுகவிற்காக விஜயகாந்தை விமர்சித்தார். பாமகவிற்காக வேல்முருகனை விமர்சித்தார். அதிமுகவிற்காக அய்யா.பழ.நெடுமாறனை விமர்சித்தார். 

ஓ.பி.எஸ்சுக்காக சசிகலாவை விமர்சித்தார். பின்னர் சசிகலாவிற்காக எடப்பாடியை விமர்சித்தார். அதன்பின் எடப்பாடிக்காக ஓ.பி.எஸ்சை விமர்சித்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்தியபோது எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என்றார். தன் மீது வழக்கு நெருக்கடி வந்தபோது ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றார். ஆளுனரை ஆதரிக்க திமுக ஆட்சியை விமர்சித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையை விமர்சித்தார்.

அண்ணாமலையை காப்பாற்ற திமுகவை விமர்சித்தார். 
மீத்தேன் திட்டத்திற்காக நம்மாழ்வாரை தெலுங்கர் என்றார். தமிழ்நாடு விடுதலைக்கு படை கட்டிய தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு ஆசைப்பட்டவர் என இழிவு செய்தார். காவிரி டெல்டாவை காக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சிறைசென்ற பேரா.ஜெயராமனுக்கு கட்சி மூலமாக கொலைமிரட்டல் விடுத்தார். 

அணு உலையை ஆதரித்த வைகுண்டராஜனுக்காக உதயக்குமாரை விமர்சித்தார். 2009ல் இலங்கைக்கு ஆயுதம் ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை அடித்துநொறுக்கி சிறைசென்ற கோவை இராமகிருட்டிணனை தமிழரல்ல என்று இழிவுசெய்தார். ஸ்டெர்லைட்டை ஆதரித்த ரஜனியிடம் நட்பு பாராட்டினார். ஈழத்தை ஆதரிக்காத கமலஹாசனுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். மேதகு பிரபாகரனை கொச்சைப்படுத்திய பாரிவேந்தருக்கு பெருந்தமிழர் பட்டம் கொடுத்தார். மேதகுபிரபாகரனை தூக்கிலேற்ற வேண்டுமென்ற காளிமுத்துவிற்கு விழா எடுத்தார். ஈழப்போராளிகளை கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த பாலச்சந்தருக்கு புகழ்வணக்கம் செலுத்தினார். 

விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ம.பொ.சியை கொண்டாடி கூட்டம் நடத்தினார். வி.புலிகளை விசாரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தினார். 
மதுரை மக்கள் எதிர்த்த பி.ஆர்.பி கிரானைட் முதலாளியை தமிழ் தொழிலதிபர் என பட்டமளித்து ஆதரித்தார். ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பிய தந்திதொலைக்காட்சியை ஆதரித்தார். பாஜகவிற்காக மும்பையில் பிரச்சாரம் செய்தார். மோடி ஆட்சி நல்லாட்சி என்று தேர்தலில் பேசினார். தமக்கு ஓட்டுபோடாத முஸ்லீம்களை கொச்சைபடுத்தினார். 
.. இப்படியாக சீமானின் சாதனை பட்டியல் மிகமிக...நீளமானது.

தமிழர் நலனுக்காக உழைத்த பலரை இழிவு செய்த சீமான், தமிழின விரோதிகளான சாவர்க்கர், ஹெட்கேவர், ராமகோபாலன், சோ ராமசாமி முதல் இன்றய மோகன்பகவத், சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்களை சிறிதும் விமர்சனம் செய்யாததில்லை என்பது சீமானின் தனிச்சிறப்பு. இந்துத்துவ கும்பல் திருவள்ளுவரையும், தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் இழிவுசெய்தபோது கண்டிக்காமல் நட்பு பாராட்டிய தூய செந்தமிழர் சீமான் மட்டுமே.

சங்கி என்றால் நண்பன் என்று புது அர்த்தத்தை சொன்ன சங்கப்புலவர் சீமான். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்த, ஆளுனருக்கு ஆதரவாக தோள்களை உயர்த்தும் மாவீரன் சீமான். எத்தனைபேர் செத்தாலும் நீட் தேர்வுண்டு எனும் அண்ணாமலையை நெஞ்சார தழுவும் இந்துத்துவ போர்படை தளபதி சீமான். இப்படி பலமுகங்கள் அவருக்குண்டு. 

இவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றம் என்ன? என்பதைவிட, தமிழர்களால் இவருக்கு கிடைத்த முன்னேற்றம் என்ன? என நீங்கள் சிந்தித்தால் சீமானின் உண்மை முகத்தை உணர வாய்ப்புண்டு.

முட்டாளாய் இருப்பதுவும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான். இருவரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

🌿🌿💤💤🌿🌿

Courtesy by: திருமுருகன் காந்தி 
மே 17 இயக்கம்

From X (Twitter)

9th Jan 2025
.....

பெரியார் ஒருபோதும் கூறாத ஒன்றை ஆரிய பார்ப்பனர்கள் இட்டுக்கட்டி காலகாலமாக கூறி வருகிறார்கள்! 

அதையே இந்தத் தற்குறி சைமன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூற பல்வேறு தலைவர்களும் அவனை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்!

அதற்கு எதிர்வினையாக 
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட ட்வீட் மேற்கண்டது ஆகும்!
.......