Translate this blog to any language

America-perishing No-hardwork No-food Mexico Freebies Free-community லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
America-perishing No-hardwork No-food Mexico Freebies Free-community லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஏப்ரல், 2010

"இலவசங்களுக்கு" பழகும் இனம் அழிந்துதானே போகும்?


உழைப்பின் மீது நம்பிக்கையற்று,
ஒரே நாளில் பணக்காரனாகி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும்
என்பது அமெரிக்காவில் குடியிருக்கும்  (இங்கு அமெரிக்கர்கள் என்று எப்படி நாம் சொல்ல முடியும் - அமரிக்கா ஒரு  சென்னை மாதிரி! அது பூர்வ குடிகள் என்றில்லாமல் வெறும், "குடியேறும் மக்கள் - பெரும்பான்மை விகிதம்" கொண்டது) மக்களின் கொள்கை!

அதன் விளைவு! நீங்களே பாருங்களேன், அமெரிக்க பொருட்களா இந்தியாவில் விற்கப் படுகின்றன? Suzhuki, Hyundai, Honda, kawasaki, Yamaha கார்களும், பைக்குகளும் யாருடையவை? Hero பேனா, இப்போது இந்தியச் சந்தையில் விற்கப்படும் Finland என்னும் சிறிய நாட்டைச் சேர்ந்த Nokia Mobiles, ஜப்பான் நாட்டு Sony, தென் கொரியாவின் SamSung, சீன, கொரிய பிற மொபைல் போன்கள், சீன பொம்மைகள் இத்யாதி இத்யாதி! எனக்குத் தெரிந்து Ford கார் அமெரிக்க தயாரிப்பு, அது கூட இங்கு நன்றாக சந்தையைப் பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் Motorola மொபைல் போன்கள் கதி இந்தியாவில் -அதோ கதி தான்!

சரி, இது தவிர உலகத்துக்கு அமெரிக்க தொழிலாளர்களின் பங்களிப்பு என்ன?

அணு ஆயுதங்கள் விற்பது ,ரொட்டி சுடுவது போல் copy-paste செய்யும் விதமான Micro Soft தயாரிப்புகள், இது தவிர என்ன பெரிய உழைப்பு அவர்களிடம் உள்ளது?
அதனால் இன்று அமெரிக்க வெள்ளையர்கள் / நீக்ரோக்கள் பாடு திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

உழைக்கத் தயாரில்லாத இனம் அழிந்துதானே போகும்?

இங்கே பாருங்கள் அதே கருத்தை ஒரு அமெரிக்கத் தலைவர் சொல்வதை:

"மக்களுடைய சோம்பேறித்தனத்தால் வெளிநாட்டவர்கள்   வருகிறார்கள்'
First Published : 25 Apr 2010 12:00:00 AM IST


ஸ்பார்டன்பர்க்,ஏப்.24: உழைப்பதற்குத் தயாரில்லாமல் உள்ளூர் மக்கள் அரசு தரும் இலவசங்களை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், வேலை செய்வதற்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது என்று கேட்கிறார் தெற்கு கரோலினா மாநிலத்தின் துணை கவர்னர் ஆந்திரே பாயர்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் சமீபகாலமாக மெக்ஸிகோ உள்ளிட்ட தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது அதிகரித்து வருவதால் அமெரிக்க மாநிலங்கள் அனைத்துமே கலவரப்பட்டு நிற்கின்றன. இது இப்படியே போனால் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும் உள்நாட்டவர் சிறுபான்மையினராகவும் மாறிவிடுவார்களே என்று அஞ்சுகின்றனர். இந்த நிலையில் அரிசோனா மாநிலத்தில், வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்குக் கடும் நிபந்தனைகளை விதித்து சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதைப் போல தெற்கு கரோலினாவிலும் சட்டம் வருமா என்று கேட்டபோதுதான் ஆந்திரே பாயர் கொட்டித் தீர்த்துவிட்டார் தன்னுடைய மனக்குமுறல்களை. 

வேளைக்கு இலவச சாப்பாடு, உடல் நலத்தைப் பேண இலவச சிகிச்சை, படிப்பு இலவசம், பொழுதுபோக்கும் இலவசம் என்றால் எந்த பைத்தியம் வேலைக்குப் போய் கஷ்டப்படும் என்று சற்று கோபமாகவே கேட்டார் ஆந்திரே பாயர். நல்வாழ்வு அரசு என்று பெயரெடுத்திருப்பதால் இலவசங்களைக் கொடுப்பதே அரசுக்கு அழகு என்று யாரிடமும் கடுமையாக வேலை வாங்காமல் சும்மா விடுவதால் சோம்பேறித்தனம் அதிகமாகி எல்லோரும் வீட்டிலேயே ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

 நாளை சட்டவிரோத குடியேற்றங்களால் நாட்டின் தன்மையே மாறி, பெரிய உள்நாட்டுக் கலவரம் வெடித்தால், இப்போது சோம்பேறியாக சுற்றித் திரிகிறவர்கள்தான் முதலில் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். கடந்த முறை கவர்னர் பதவி வேட்பாளராக குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோதும் மக்களை நேரடியாகவே ஆந்திரே பாயர் திட்டினார். கோயில் மாடுகளைப் போல வீதிகளில் வெட்டியாகத் திரிந்து கொண்டு அரசு தரும் இலவச உதவி என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால் உருப்படுவது எப்போது என்று கேட்டார் ஆந்திரே பாயர். (நம் நாட்டிலும் இலவசம் தந்து மக்களை சோம்பேறிகளாக்கி வரும் நமது தலைவர்கள், ஆந்த்ரே பாயரின் பேச்சை கவனிக்க வேண்டும். கட்டிடம், மற்றும் மேம்பாலப் பணிகளில் பீகார், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா போன்ற பிற மாநில தொழிலாளர்கள் ரயில் பிடித்து பல்லாயிரக்கணக்கில் சென்னை-தமிழகம் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். வட சென்னை அந்த விஷயத்தில் வட-மாநில சென்னை ஆகி வருகிறது. பெரம்பூர் வியாசர்பாடியில் இப்போது வாடகைக்கு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக  பீகாரிகள் வந்து சேர்ந்து வேலை பார்க்கின்றனர். ஏற்கனவே சௌக்கார் பேட்டை, ராஜஸ் தானிகளுக்கு எழுதப்படாத சொத்தாகிவிட்டது! தமிழர்கள் கதி இனி அதோ கதிதான் போலும்! )

இதனால் மக்களுக்குக் கடும் கோபம் வந்தது. (கோபம்தான் வந்ததே தவிர ரோஷம் வரவில்லை). இப்போதும் அப்படியே தொடர்ந்து பேசி வருகிறார் ஆந்திரே பாயர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:http://www.dinamani.com