Translate this blog to any language

Money-tree லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Money-tree லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 நவம்பர், 2008

பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!




ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !

ஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும் 
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்
நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே!
ஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா!

விதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டமே  பன்மைப் பயனாம்!

-மோகன் பால்கி

Intra Day/Bonanza
T.Nagar
19.04.2007