ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !
ஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும்
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே!
ஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா!
விதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டமே பன்மைப் பயனாம்!
-மோகன் பால்கி
Intra Day/Bonanza
T.Nagar
19.04.2007