மலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்! அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள்.
இவன் மட்டும் வழிமாறி எப்படியோ கல்லுடைக்கும் பணிக்கு வந்து சேர்ந்து விட்டான். கல்லுடைக்கும் பகல் நேரம் போக அவன், மலைகாடுகளில் இரவெல்லாம் அலைந்து திரிந்து அரியவகை மூலிகைகள், உலோக தாதுக்களை கொணர்ந்து வித விதமான நுட்பக் கருவிகள் செய்து வைத்துக் கொள்வான். அதைக் கொண்டு நினைத்த வண்ணம் அதிசயம் செய்வான். அதாவது கற்களைக் கவிதை பாடச் செய்யும் கலை! எந்த மலையானாலும் ஒரு சிறு குத்துக் கோட்டில் இரு கூறுகளாக்குவது, பல கூறானவற்றை மீண்டும் வடுக்களின்றி சேர்ப்பது, கிடைத்த கற்களில் உயிரோட்டமான அழகிய தெய்வச்சிலைகளை மிகசொற்ப நேரத்தில் உருவாக்குவது இன்ன பிற சாகசங்கள். இப்படியாக பல்லாயிரம் அழகிய உயிர்ச் சிலைகள் வடித்தவன் அவன்!
அதனால், அவனைத் தேடி வரும் எவரும் வெறும் கல்லுடைக்கும் வேலை போக, அவர்களுக்கு ஆதாயமான சிற்பங்களை, உருவங்களை செதுக்கித் தரும்படி கேட்டு அவ்வாறே சிலமணித் துளிகளில் வேலை முடித்து கொண்டு புறப்பட்டு விடுவர். பிறகு, சில மாதம் சில வருடம் கழித்து தனக்கு ஆதாயம் தரும் அல்லது தன் இரத்த பந்தம் உடைய பிறரை இவ்வாறே அழைத்து வந்து அவர்களுக்கும் குறைந்த கூலியில் ......( Contd...)