தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க!
குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!
தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள் பற்றியும் ....(Contd..)