இன்று புத்தாண்டு துவங்கியது!
எப்போதும் போல இதுபோன்ற நாட்களில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கட்டாயம் உண்டு! அதில் நியாயமும் உண்டு!
ஆனால், திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நவீன வியாபாரிகள் சிலரைப் பார்க்கும் போது புத்தாண்டு கொண்டாட்டமே கசப்பாய் போய்விடுகிறது! மேலும், அந்தக் கொள்ளையை தடுக்க வேண்டியவர்களே கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி நினைக்கும் போது ஆத்திரம் தான் வருகிறது!
New Year,
Independance Day, Republic Day, Pongal, Dasara, Christmas, Valentines Day, Diwali என்று எந்த ஒரு நல்ல நாளும்
இங்கே வந்துவிடக் கூடாது. உடனே SMS குறுந்தகவல் அனுப்ப ஒரு செய்திக்கு ஒரு ரூபாய் ஒன்னரை ரூபாய்
என்று கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுகின்றன!
இதில் எந்த கம்பனி யோக்கியம்
அல்லது பரவாயில்லை என்று எனக்குத் தெரியாது! அதை ஆராய்ச்சி செய்வதும் என் வேலை
அல்ல! ஆனால், நான் பயன்படுத்தும் Airtel / Idea இரண்டிலும் இன்று ஒரு
செய்திக்கு ஒரு ரூபாய் என்று எடுத்துக் கொண்டனர். நூற்றுக் கணக்கில் எனக்கு பண
நஷ்டம்! மனக் கஷ்டம்!!
(ஒரு கொசுறுச் செய்தி: Airtel Super singer- போன்ற நிகழ்ச்சிகளில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" போன்ற போட்டிகளில் பங்கு பெற குறைந்தது ஆளுக்கு இரண்டு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டி வரும். அப்படி பொருத்தி வைத்துக் கொள்வார்கள். பிறகென்ன? ஒவ்வொன்றும் ஐந்தைந்து, பத்து ரூபாய் செலவு நமக்கு! உலகம் முழுதும் இருந்து 10 கோடி தமிழர்களில் குறைந்தது ஒரு பத்து லட்சம் பேர் எஸ் எம் எஸ் அனுப்பினால் கூட ஒரு கோடி ரூபாய் அவர்களுக்கு வசூல் ஆகிவிடும்! நம் பையில் இருந்து எடுத்து நமக்கே பரிசாகத் திருப்பித் தந்து விடலாம்- பிறகு, விளம்பரம் மூலம் வரும் வருவாய் தொலைக் காட்சிகளுக்கு அப்படியே இலாபம்தான்! என்ன புரிகிறதா...சூட்சுமம்!)

என் கேள்வி நான்கு பிரிவினருக்கானது:
கேள்விகள்:
1. குறும் தகவலுக்கு இது போல நினைத்தபடி ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய், சில போட்டிகளுக்கு ஐந்து ரூபாய் என்று மக்களிடம் தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளையடிப்பது இந்திய சட்டப் படியும் தர்மப் படியும் நியாயம்தானா?
2. தேசிய பற்று, மக்கள் ஒற்றுமை இவற்றை வளர்க்கும் ஒரு August 15th- Independance day, New Year
போன்ற நல்ல விஷயங்களில் கூட எவனாவது பிசினஸ் பண்ணி ஒன்றுக்குப் பத்தாக பணம் கறக்க எண்ணுவானா? (அந்த
நாட்களில் எங்க ஊர் ஏழை நாடார் கடைகளில் கூட காசு இல்லாமல் மனமுவந்து தேசியக்
கொடியும், கற்கண்டும் தருகிறார்கள். சிறிய பெரிய கடைகளில் பத்து முதல்
நாற்பது சதவிகிதம் தள்ளுபடி கூட தருகிறார்களே! அந்த பெருந்தன்மை இந்தப் பெரிய நிறுவனங்களிடம் துளியும் காணோமே!)1. குறும் தகவலுக்கு இது போல நினைத்தபடி ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய், சில போட்டிகளுக்கு ஐந்து ரூபாய் என்று மக்களிடம் தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளையடிப்பது இந்திய சட்டப் படியும் தர்மப் படியும் நியாயம்தானா?
பெரிய நிறுவனங்கள் செய்தால் அது பெருமாள் செய்த மாதிரியா என்ன?
பெட்டிக் கடைக்கு ஒரு நீதி பெரிய நிறுவனங்களுக்கு மற்றொரு நீதியா?
இதையெல்லாம் நியாய மனம் உள்ளவர்களும், நம் இந்தியா உருப்பட வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப் படும் நல்லவர்களும், ஆற அமர சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன்! நம் நாடு நன்றாக இருந்தால் தான் நமக்குப் பின் வரும் நம் சந்ததிகளும் இங்கு அமைதியான நல் வாழ்வு வாழ முடியும்!
இப்போதே அதை "கொள்ளை அடிக்கும் மனம்" கொண்டு சின்னா பின்னம் செய்து விட்டால், பிறகு இந்த நாடு நல்லவர்கள் வாழவே லாயக்கற்றதாக போய்விடும்!
ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: