Translate this blog to any language

சனி, 10 ஜூன், 2023

திமுகவில் நுழைய முயலும் சில பார்ப்பனர்கள்!!

தமிழக அரசியலில், குறிப்பாக திமுகவில் பார்ப்பனர்கள் நுழைய இருக்கிறார்கள்!

அது ஏன், எப்படி?

ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜகவில் இப்போது உள்ள மோடி-அமித்ஷா கூட்டணி பார்ப்பனர்களை நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்! 

அதனால்தான் அவர்கள் சுப்பிரமணியசாமியை கிட்டவே சேர்க்கவில்லை! "அவரும் தலையால தண்ணி குடிச்சி பார்த்துட்டர்...!!"

தமிழகத்திலும் பார்ப்பனர் அல்லாத பாஜக தலைமைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

மேலும் காஞ்சி சங்கர மடம் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை விட்டு வட இந்திய பனியா ஆகிய அதானி கையில் செல்ல இருக்கிறது என்று நக்கீரன் செய்தி போட்டு இருக்கிறது!

எனவே தமிழக பார்ப்பனர்கள் ஒன்று கூடி பாஜகவை கை கழுவ வேண்டும்; பிறகு ஒரு வளமான கட்சியில் சேர்ந்து கொண்டு தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்!

அதனால் தான் ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்ந்தால் அதில் இரண்டு வித இலாபம் கிடைக்கும் என்று எஸ்வி சேகரை விட்டு புகழ்ந்து அப்படி ஒரு ஐஸ் வைக்கிறார்கள்!

கூடிய விரைவில் பாஜகவில் இருந்து பார்ப்பனர்கள் வெளியேறி ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அதன் வழியாக "திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம்!" என்று வருவார்கள்!

அது ஒரு குயுக்தி, சதித் திட்டமாகக் கூட இருக்கலாம்! அதாவது நாக்பூர் பார்ப்பனர்கள் கொடுத்த தற்காலிக அசைன்மென்ட் ஆக இருக்கலாம்!

அதாவது ஆரிய பார்ப்பனர்கள் இருக்கிற கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது ஆர்எஸ்எஸ் க்கு தெரிந்து விட்டது! 

எனவே தற்காலிகமாக பார்ப்பனர்களை பாஜகவில் இருந்து பிரித்து வெளியே எடுத்து, தமிழக பாஜக ஏதோ ஒரு பார்ப்பனர் அல்லாத கட்சி போல ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்!

அதில் பாஜகவுக்கும் பார்ப்பனர்களுக்கும் தற்காலிக இலாபமும் உண்டு!

1. அதாவது பாஜகவுக்கு அது பார்ப்பனக் கட்சி என்ற பிம்பத்தை உடைத்து ஒரு ரெண்டு சதவீத ஓட்டு அதிகம் கிடைக்கும் வாய்ப்பு!

2. அதுபோல பார்ப்பனர்களுக்கோ தற்காலிகமாக திமுகவில் சேர்ந்து அங்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ள முடிகிற வாய்ப்பு!

3. திமுகவை ஆதரிக்கும் முற்போக்கு சக்திகள் பார்ப்பன சங்கத்தையோ அல்லது பாஜகவையோ எதை ஆதரித்தாலும், திமுகவை விட்டு விலகி நிற்பார்கள்! அது திமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்கும்; பாதிக்க வேண்டும் என்பது மறைமுக திட்டம்!

4. அனேகமாக பாஜகவுடன் சேரப்போகும் கட்சிகள் அதிமுக, பாமக, சாதிக்கட்சிகள் சில, (நாம் தமிழர் எதிலும் சேராமல் திராவிட கருத்தியலை திமுகவை மட்டும் எதிர்க்கும்)

5. அமித்ஷா வந்து விட்டு போன கையோடு மறைமுகமாக பல விஷயங்கள் நடந்து முடிந்திருக்கும்! அது முக்கியமாக "திராவிட சிந்தனை எதிர்ப்பு"! அதை நோக்கியே எல்லா காய்களும் ஆரியத்தால் இனி நகர்த்தப்படும்!

மற்றபடி எலக்சன் முடிந்தவுடன் ஆரிய பார்ப்பனர்கள் எப்பொழுதும் போல ஆர்எஸ்எஸ் புத்தியோடு ஸனாதன அதர்மங்களை, பற்பல கட்சிகளில் புகுந்து கொண்டு பின்பற்றுவார்கள்! 
திராவிடர் இயக்கங்களை ஒழிக்க வேண்டிய எல்லா சதி திட்டங்களையும் தொடர்ந்து செய்வார்கள்!

அதாவது, நேரடியாக தமிழர்களை வீழ்த்துவது அல்லது பின்புற கதவு வழியாக வந்து உள்ளே நுழைந்து அணைத்து, அரவணைத்து ஒழிப்பது என்ற இரண்டு வழிகளிலும் ஆரிய சாம்ராஜ்யம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

ஆரியத்தை அரவணைத்த அம்பேத்கர் இயக்க மாயாவதியின் சாம்ராஜ்யம் மாயமானது ஏன் என்று நினைவு கூர வேண்டுகிறேன்! 

பெரியார் என்ற பெருந் தத்துவம், அவர் தந்து விட்டுப் போன திராவிடர் இயக்க கொள்கைகள் இல்லாத இடத்தில் சனாதன அதர்மம் என்ற வர்ணாசிரம ஜாதீய நச்சுக் காற்று பரவி பல உயிர்களை பலி வாங்கிவிடும்!

எனவே திராவிடர் இயக்கங்கள், முற்போக்கு தலைமைகள், மக்கள் நல சிந்தனையாளர்கள் இந்த முறைதான் 
முழு விழிப்பாக இருக்க வேண்டும்; முக்கியமாக இப்பொழுது ஆளுங்கட்சியாக விளங்கும் திமுக!


கவனம்! 
கவனம்!! 
கவனம்!!!

-YozenBalki 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: