Translate this blog to any language

ஞாயிறு, 18 ஜூன், 2023

தந்தையர் தினத்தில் ஒரு மகளின் கடிதம்!

என் தாயுமானவருக்கு!

இல்லையில்லை…என் யாதுமானவருக்கு (மாதா, பிதா,குரு,தெய்வமென அத்தனையுமான என் அப்பாவுக்கு) இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
அப்பா!! ❤❤❤

மகள்களுக்கு அப்பா என்பவர் எப்போதும் ஆதர்சமே! 😍
என் அப்பாவுக்கு நானே இளவரசி!! 😍
  
ஆண்கள் அற்புதமானவர்களே! அதிலும் அப்பாக்கள் அதி அற்புதமானவர்கள்!! 
😍😍😍😍
      
மகளுக்காக அப்பாக்கள் என்னவேணாலும் செய்யத் தயாரா இருப்பாங்க! என்னோட அப்பாவுக்கு நான் கடைக்குட்டி பொண்ணு, அதனால ரொம்ப ரொம்ப செல்லம்! அம்மாவே பொறாமையா பாக்குற அளவுக்கு அப்பாவுக்கு பாசம் என்மேல!! 😍😍😍

அம்மா பாசம் தான் உலகத்துல ரொம்ப பெருசு, ஆனா என்னோட அப்பாவோ, அம்மாவுக்கும் கொஞ்சம் மேலதான்!! ❤

எங்க அப்பா விவசாயி! அதனால இயற்கை மேல அம்புட்டு நேசம்! அப்பாவுக்கு, விவசாயத்துக்கு நிகரா அப்பா நேசிக்குற விசயம்னா அது நிச்சயமா நான் தான்!! 😍😍😍

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்பா சின்ன வயசுல ஆசைப்பட்டு வாங்கவே முடியாம போன புல்லட் அவங்க திருமணநாள் பரிசா வாங்கிக்குடுத்தேன்! 

அதப்பாத்து சின்னப் புள்ளை போல "அந்த கம்பீரமான கணபதி" கண்கள்ல சந்தோச கண்ணீர பார்த்த தருணம் அவ்வளவு நெகிழ்வு!! ❤
    
இன்னைக்கு நான் என்னவா இருக்கேனோ அது அத்தனையும் சாத்தியமானது கணபதிக்கு மகளா பிறந்த ஒற்றைக்காரணமே! 😍😍😍
 
சமீபத்துல ஒருபதிவு பாத்தேன்! சாகுற தருணத்துல யாரோட இருக்கனும்னு நினைப்பீங்கன்னு ஒரு கேள்வி! சத்தியமா எனக்கு அப்பாதான் வேணும், என்னோட இறுதி தருணங்களில்!! 🙏🙏

தமிழ் மேல காதல், கண்ணன் மேல பித்து,இயற்கை மீதான நேசம்னு அத்தனை நற்குணங்களும் அப்பாவிடமிருந்து வந்தவையே எனக்கு!

படிப்பு வேலைன்னு நான் வாழ்க்கையில எத்தனை உயரத்த தொட்டாலும் அப்பாவோட செல்ல பொண்ணுன்னு சொல்றதுல தான் கர்வமே எனக்கு!! 😍😍😍
   
நான் பார்த்த முதல் ஆண் அப்பாதான்! அதனாலயே ஆண்கள் மீதான என்னோட பார்வையும் எப்பவும் மரியாதையானதே!! 😍

உலகத்துல சிறந்த அப்பான்னா அது என்னோட அப்பாதான்! இந்தப் பிறவி மட்டுமில்லாம இன்னும் எத்தனை பிறவியெடுத்தாலும் உங்களுக்கே மகளா பிறக்கணும் அப்பா!! 🙏🙏

இனிய தந்தையர் தின வாழ்த்துகள், தந்தையர் அனைவருக்கும்!! 🌹🌹🌹🌹

Courtesy: 
By
நான் காணாமலே 
மகளாகி நின்ற...
மதுமிதா கணபதி from Twitter Circle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: