Translate this blog to any language

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவு: 1000 விமானங்கள் ரத்து



லண்டன்: கடும்பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பா முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பா மற்றும் ரஷ்யா முழுவதிலும் இப்போது கடும் குளிர்காலம் நிலவுகிறது. ஸ்கான்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்றவற்றில் மைனஸ் 25ஐத் தாண்டுகிறது வெப்பநிலை. இரண்டு அடி உயரத்துக்கு பனி குவிந்து கிடக்கிறது சாலைகளில். மக்கள் குளிருக்கும் பனிக்கும் பயந்து வெளியில் வரமுடியாத நிலை.

ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் மோசமான குளிர் நிலவுகிறது. பிராங்க்பர்ட் நகரில் 20 செமீ உயரத்துக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இங்கு பனி கடுமையாக கொட்டுகிறது. இதை தொடர்ந்து சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் அதிகமான சிறு சிறு விபத்துக்கள் இந்த பனிப் பொழிவு காரணமாக நடந்துள்ளன. இவற்றில் 3 பேர் பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று மாலை முதல் இரவு வரை மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையம் பனியால் மூடப்பட்டது. எனவே, அங்கு தரை இறங்க இருந்த 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிராங்பட் விமான நிலையத்திலும் ஆம்ஸ்டார் பாமின்சியோல் விமான நிலையத்திலும் இதே நிலை நீடித்தது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருந்தனர். பனியை அகற்றிய பின் விமானங்கள் அங்கு தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. 4 1/2 மணி நேர தாமதத்துக்கு பின் பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையமும் பனியால் சூழப்பட்டது. எனவே அங்கு 84 விமானங்களும், ஜெனீவாவில் 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை இங்கு விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இங்கிலாந்தில் பனிக் காற்று வீசியது. இதனால் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவியது. ரெயில்கள், பள்ளிகள் மூடப்பட்டன. சாலைப் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நேற்று காலை பெல்பாஸ்ட் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்பட்டது.

அண்டார்டிகாவுக்கு அடுத்து மிக அதிக குளிர் நிலவும் பகுதியாகக் கருதப்படும் சைபீரியப் பகுதிகளில் மைனஸ் 90 டிகிரி வரை குளிர் நிலவுகிறது. நவோஸிபிர்ஸ்க் நகரில் மைனஸ் 70 டிகிரி குளிர்! இந்தப் பகுதிகளில் எங்கும் பசுமையே காணாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

yozenbalki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: