தமிழ் நாட்டில் கடும் வெள்ளம்!
(ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக்
கெஞ்சுவதை நிறுத்த மாட்டோம்....)
இந்தத் தண்ணீரை சேர்த்து வைக்க எந்த திட்டங்களும் இங்கு எங்களிடம் இல்லை!
ஏரிகள் உடைந்து...ஏரி ஷட்டர்கள் உடைந்து...தூர்க்கடிக்கப் பட்ட கால்வாய்களை விட்டு விட்டு
தெருக்கள் சாலைகளை துண்டித்துக் கொண்டு எங்கள் வீடுகளில் நுழைந்து நாங்கள் அழிந்து அந்தத் தண்ணீர் கடலில் கலந்து வீணானாலும் சரி! நாங்கள் கடல் தண்ணீரைக்
குடிநீராக்குவதை நிறுத்த மாட்டோம்! பிளாஸ்டிக் பைகளில் காசுக்குத் தண்ணீர் விற்பதையும் தவிர்க்க மாட்டோம்!
இதுதான் எங்க பயக்க வயக்கமுங்கோ!
வருஷா வருஷம் நாங்க அப்படித்தானுங்கோ!!!
yozenbalki
No comments:
Post a Comment
You can give here your comments: