முதியவர்: என்ன தம்பி! உங்கப்பா ஒரு நல்ல தமிழ் பேச்சாளர். நீ போயி ஃபிரெஞ்சு பாட மொழி எடுத்திருக்கே!
மாணவன்: போங்க "அங்கிள்"! உங்களுக்கு விவரம் பத்தாது! தமிழ்ல என்னதான் நல்லா எழுதினாலும் இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு மார்க்கு போடவே மனசு வராது. அது என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி பாத்துப் பாத்துப் பிச்சை போடுவாங்க! அதுவே சான்ஸ்க்ரிட், பிரெஞ்சு, ஹிந்தி ஆசிரியர்கள் நல்லவர்கள், அவங்க மார்க்க அள்ளி விடுவாங்க! அதான் அங்கிள் நான் தமிழ எடுக்கல!
முதியவர்: என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழிய நாம மறக்கலாமா தம்பி?
மாணவன்: அங்கிள் 'டோடல் மார்க் குறைஞ்சா எனக்கு நல்ல காலேஜ்-நல்ல வேலை கெடைக்குமா அங்கிள்? அதுவும் பாக்கணும் இல்லியா? தமிழ் மட்டும் நல்லா இருந்து தமிழன் நல்லா இருக்கலன்னா அது பரவா இல்லியா உங்களுக்கு? தமிழன் இல்லாத இடத்தில் தமிழ் மட்டும் எப்படி வாழுமாம்?
முதியவர்: அது சரி! தமிழ்ல மாணவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்னை? ஏன் நல்ல மார்க் உங்களால...(Contd...)
எடுக்க முடியல்ல?
எடுக்க முடியல்ல?
மாணவன்: தமிழ்ல ஒன்னும் பிரச்னை இல்லை அங்கிள்! தமிழ்ன்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அது எங்க தாய் மொழி இல்லியா? தமிழ் ஆசிரியர்கள்தான் எங்களுக்கு பிரச்சினை. அவங்க எல்லாம் ஒண்ணாச் சேந்துகிட்டு ரொம்ப பழங்காலத் தமிழ் எல்லாம் கொடுத்துப் படிக்கனும்பாங்க. அதுல சின்ன 'ன' பெரிய 'ண', சின்ன 'ர' பெரிய 'ற', அப்புறம் ரெண்டு சொல் சேருகிற இடத்துல வர 'ப்' 'ம்' 'த்' மாதிரி புள்ளி எழுத்து...புரியாத தமிழ் இலக்கணம்...பிறமொழிச் சொற்கள் இதையெல்லாம் கண்ணுல வெளக்கெண்ணை விட்டுகிட்டு ஏதோ நக்கீரப் பரம்பரை மாதிரி பாப்பாங்க!
என்ன முட்டு முட்டுனாலும் எவனும் 80 மார்க்கு எடுக்க முடியாது! அதுவே மத்த லாங்குவேஜ் எடுத்துப் படிக்கிற பிள்ளைங்க ஈசியா நிறைய மார்க் ஸ்கோர் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பாங்க! அவங்களுக்கு இன்னும் கேட்டா தமிழ் மாதிரி கனமான புத்தகம், தொல்லையான இலக்கணம், இலக்கியம் எல்லாம் ஒண்ணுமே கிடையாது!
முதியவர்: ஏம்பா! நம்ம தமிழ நல்லாக் கத்துகிட்டா நமக்கு நல்லது தானே! அதுக்குப் போயி இப்பிடி கோபப் பட்டா எப்பிடி தம்பி?
மாணவன்: அட போங்க அங்கிள்! நாங்க என்ன தமிழ் ஆசிரியர் பயிற்சிக்கா படிக்கிறோம்? இல்லன்னா தமிழ்ப் புலவர் ஆகி அரசனைப் புகழ்ந்து, பாட்டு எழுதி பிச்சை எடுக்கவா போறோம்?
தந்தை பெரியார் சொன்ன மாதிரி மொழிங்கறது ஒரு மனுஷன் இன்னொரு மனுசனோட உறவாட உதவும் ஒரு கருவி. அடுத்தவனுக்கு அது புரியுதான்னுதான் பாக்கணுமே தவிர...அதுக்குள்ளார நொள்ளை...சொள்ளை...சொல்லிக்கிட்டு இருந்தா ஒரு மொழி எப்படி வளரும்?
புதுத் தண்ணி, (இயல்பான பெயர்ச்சொற்கள்) பாயாம ஏரி எப்படி நிரம்பும்? தினம் ஒரு புது சொல்லு கண்டுபிடிச்சி உலக சந்தையிலே வருகிற விசயங்களை எல்லாம் தமிழ்ப் படுத்தறோமுன்னுட்டு, சுத்தத் தமிழ் பேசிகிட்டு இப்பிடியே போனா நம்ம தமிழ்... இங்கொருத்தர் அங்கொருத்தருன்னு வெறும் பண்டிதர்கள் மட்டும் பேசும் 'சான்ஸ்கிரிட்' மாதிரி சீக்கிரமா 'புட்டுக்கும்' அங்கிள்!
முதியவர்: நீ சொல்றதும் நியாயமாத்தான் படுது தம்பி! போற போக்குல இந்த தமிழ் ஆசிரியர்களே நம்மோடத் தமிழை வெறுக்கடித்து தமிழை ஒழித்துவிடுவார்கள் போலிருக்கிறது!
தமிழ் வாழனோம்னா இந்தத் தமிழாசிரியர்களை கொஞ்சம் கண்டித்து வைக்கணும் போல...!
கடைசியிலே தமிழைக் கத்துக்க யாருமே வரலன்னா இவங்களுக்கும் பிழைப்பு ஓடாதே! இது புரியறவங்களுக்கு புரிஞ்சி நம்ம தமிழை வாழ வைப்பாங்களா தம்பி?
-YozenBalki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: