Translate this blog to any language

செவ்வாய், 2 மார்ச், 2010

சாமியார்களுக்கு இது கெட்ட காலம்!

சாமியார்களுக்கு மட்டும் கலி காலம் துவங்கி இருக்கிறது என்று எண்ணுகிறேன். நேற்று (1.3.2010)ஆந்திராவில் சித்தூர் பகுதியில் உள்ள நம்ம ஊர் நேமம் கல்கி ஆசிரமம் சாமியார் பற்றி அந்த வூர் T9 TV-யில் கிழி கிழி என்று கிழித்து விட்டனர்.
இன்றோ (2.3.2010), சன் நியூஸ் டிவி-யில் நித்தியானந்த சுவாமிகள் என்னும் திருவண்ணா மலை இளம் வயது சாமியாரின் படுக்கை அறை கட்சிகளைப் போட்டு நாற அடித்து விட்டனர்.
எனது முந்தைய Blog-ல்
காலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் ! அதில் "சமீபத்தில் பிரபலம் அடைந்த ஒரு சிறு வயது சாமியார்" என்று எனது நண்பர் மனம் புண்பட வேண்டாம் என்று அதே சாமியாரின் பெயரை நான் பகிரங்கமாக குறிப்பிடவில்லை. ஆனால், நான் மனம் வெதும்பி எழுதி (21th Feb 2010) பத்து நாட்களுக்குள் மேற்படி சாமியார்/சாமியார்களின் வேஷங்கள் கலைந்து விட்டது ஆச்சர்யம் தான்.
உண்மைக்கும் என்னமோ கொஞ்சம் நல்ல காலம் இருப்பது போல் உள்ளது.
எனினும் மக்கள் இன்னும் தெளிய வேண்டி உள்ளது.

சாமியார்கள் தான் என்று இல்லை; இன்னும் அரசியல் தலைவர்கள் பற்றிய நமது மக்களின் பார்வையும் மாற வேண்டும். அவர்களையும் ஒரு குறு நில மன்னர்கள் போன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது, காலில் விழுவது, கடவுள் போல எண்ணுவது இவை எல்லம்கூட மாற வேண்டும்.

பார்க்கலாம்!
நடக்கும் இவையெல்லாம் என்றைக்காவது ஒரு நாள், என்று நம்புவோம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை!

-மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: