இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
திங்கள், 13 ஜூலை, 2009
எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்
எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.
முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!
மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
வெள்ளி, 12 ஜூன், 2009
நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!
நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!
எனது இளைய மகள் ம.பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.
அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)
அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.
இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )
(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)
Also click here to visit the URLs:http://www.dinamalar.com/ Arasiyalnewsdetail.asp?News_ id=11498
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)
என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.

Also click here to visit the URLs:http://www.dinamalar.com/
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)
என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.
I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews.
Mail: yozenbalki@gmail.com
Mobile: +919840042904
My site: www.yozenmind.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)