Translate this blog to any language

செவ்வாய், 16 ஜூலை, 2024

பென்ஷன் தராத நாட்டில் நாட்டுப் பற்று எப்படி வரும்?


முகநூலில் ஒருவர் ஒரு வயதான தந்தையை பார்த்துக் கொள்ளாத ஒரு ஏழை மகனைப் பற்றி எழுதி இருந்தார்! 
அந்த ஏழை மகனை எல்லோரும் திட்டி திட்டி எழுதி இருந்தார்கள்!

ஒரு முக்கியமான கூறு நாம் கவனிக்க தவறுகின்றோம்! ஓரளவுக்கு வாய்ப்புள்ள யாரும் தனது தந்தையை தாயை அப்படி விட்டு விட மாட்டார்கள்; அது இயற்கை குணம் அல்ல! அது எல்லாமே இல்லாத கொடுமையில் விளைகின்ற காட்சிகள்!

வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை நாம் யூட்யூபில் பார்க்க முடியும்! காரணம் அங்கு லஞ்சம் என்பது 95% கிடையாது! மேற்படி அங்கு ஆளும் அரசுகள் வயதானவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பென்ஷன் வழங்குகின்றன! அது அங்கு போதுமான அளவுக்கும் அதிகமாகவே இருக்கிறது!

ஒரு நல்ல அரசாங்கம் ஒழுங்காக இருந்தால், இங்கும் அப்படி 60, 65 வயதுக்கு பிறகு ஒரு குறைந்த தொகையை அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தரலாம்! 

ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசு தருகின்ற பணத்தைக் கொண்டு மிச்சம் பிடித்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருகின்ற பற்பல மனிதர்கள் எனக்குத் தெரியும்! 

(எந்தெந்த நாட்டு அரசுகள் அப்படி தங்கள் மக்களுக்கு பென்ஷன் தொகை தந்து நாட்டுப்பற்றை வளர்க்கிறது என்று ஒரு 10 நாடுகளை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்!)

இத்தனைக்கும் அந்த நாடுகள் இந்தியாவைப் போன்று அப்படி ஒன்றும் வளமான, மற்றும் எல்லாம் விளைகின்ற, அனைத்து மக்களும் கடுமையாக உழைக்கக்கூடிய நாடுகள் அல்ல! பாதி நேரம் பனி மூடிக்கொள்ளும், அப்புறம் எங்கே உழைப்பது?

ஒரே ஒரு விஷயம் அங்குள்ள அரசியல்வாதிகள்/அதிகாரிகள் இங்கு போல் மெகா கொள்ளை அடிப்பதில்லை! அது ஒன்றுதான் இந்த நாட்டின் சாபக்கேடு! அதனால்தான் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்ற வறுமை!

உலகின் பற்பல நாடுகளில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்பதும் மனிதர்களை வாட்டி வதைக்கின்ற அளவிற்கு தொட்டதற்கெல்லாம் வரி போடும் வழக்கம் என்பதும் இங்கு போல் கிடையாது! இருந்தாலும் அவன் பென்ஷன் தந்து விடுகிறான்!

ஆனால், இந்த நாட்டில் ஊர் பெயர் தெரியாதவன் எல்லாம் இங்கு சிலநூறு கோடிகள் நமது உழைப்பை கொள்ளை அடித்து வைத்திருக்கிறான்! 

அட பாடுபடும் மக்களின் உழைப்பு இல்லாமல் இந்த நாட்டில் அப்படி ஒரு சில பணக்காரர்கள் ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில நடிகர்கள் ஒரு சில அதிகாரிகள் மட்டும் பல்லாயிரம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி சாத்தியம்? 

ஆனால், அப்படி கஜானாவை நிரப்புகின்ற பொதுமக்கள் தருகின்ற வரிப்பணத்தில் இருந்து வயதானவர்களைப் பராமரிக்க ஒரு பென்ஷன் தொகை தருவதற்கு இங்கு வக்கு இல்லை! காலமெல்லாம் வரி கட்டி கட்டி கோவணத்தைக் கூட இழந்தவன் மீது இந்த அரசுகள் மீண்டும் குறை கூறுகின்றன! 

அந்த காலத்தில் மதவாதிகள் இதெல்லாம் உன்னுடைய தலைவிதி என்று சொன்னது போல, இந்த காலத்து அரசாங்கங்கள் நீங்கள் இன்னும் நன்றாக உழைக்க வேண்டும் என்று பம்மாத்து வேலை செய்கின்றன!

சரி! ஏதோ மாநில அரசு ஒன்றிய அரசுக்கு கப்பம் கட்டி விட்டு, கல்வி வேலைவாய்ப்பு உள் கட்டமைப்பு வசதி, அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் போன்றவற்றை தந்து விட்டு மீதமுள்ள பணத்தில் தானாக முன்வந்து ஒரு ஆயிரம் ரூபாய் "உரிமைத்தொகை" தந்தால் அதற்கு ஆமைக்கறி சாப்பிடுபவர்கள் அவசரமாக ஓடி வந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்!!

மாநில அரசோ மத்திய அரசோ மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள் தானே! அவர்கள் இந்த நாட்டு வயதானவர்களின் பொருளாதாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு ஆளுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தரக்கூடாதா?

அப்போதுதான் அதற்குப் பெயர் நாடு!

மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி விட்டு அவர்களை அம்போ என்று விட்டுவிடுவது என்ன நியாயம்? அப்புறம் பிள்ளைகள் சோறு போடவில்லை என்று கதறுவது என்னடா நியாயம்? 

ஒரு பேச்சுக்கு ஒரு வயதான பெரியவர் 90 வயது வரைக்கும் இருந்தால் அவருடைய மகன் 60 வயதில் இருப்பான்! அவனையே இந்த நாடு, ஏற்கனவே கொள்ளை அடித்து வறுமையில் வைத்து இருக்கிறதே! அவன் தன் தந்தைக்கு என்ன செய்வான்?


அவனே ஒரு கூலித் தொழிலாளி என்றால், அவனது பெற்றோர்களை அவன் எப்படி கவனித்துக் கொள்ள முடியும்? அப்படியும் இந்த நாட்டில் 95 சதவீத முதியவர்கள் தங்கள் முதிய பெற்றோர்களை பார்த்துக் கொள்கிறார்கள்; கைவிட்டு விடவில்லை! 

விதிவிலக்குகள் ஒரு சில இருந்தால் அது விதி ஆகாது!

ஆக, இங்கு அரசாங்கம் தான் தனது மக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது! 

இது புரியாத வரை நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்போம்! ஆளும் அரசுகள் பழியில் இருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளும்!

கேட்டால் அது சின்ன நாடு நமது பெரிய நாடு என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்! சின்ன மரத்தில் சின்ன மாங்காய் பெரிய மரத்தில் பெரிய மாங்காய் என்றா காய்க்கிறது?

பெரிய நாடு என்பதால் நீங்கள் சிறிய வரி வாங்குகிறீர்களா? பெரிய நாடு என்பதால் இங்குள்ள அதிகாரிகள் சிறிய சம்பளம் வாங்குகிறீர்களா? உங்களுக்கு மட்டும் எல்லாம் சரியாகத்தானே நடக்கிறது? 

ஒரு பேச்சுக்கு நமக்கு ஈடான மக்கள் தொகை உள்ள சீனாவில் நிலைமை எப்படி இருக்கிறது என்று யூடியூபில் சென்று பாருங்கள் புரியும்! அவர்கள் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறார்கள்! அங்கு சில லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை தான்! அதனால்தான் அந்த நாடு அமெரிக்காவுக்கு ஈடாக இருக்கிறது! 

சின்ன நாடு பெரிய நாடு என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது அறியாமை ஆகும்!

முதலில் முதியோர்களுக்கு பென்ஷன் ஏற்பாடு செய்யுங்கள்; நாட்டுப்பற்றும் நன்றாக வளரும்!

-YozenBalki 

💫💫

Here are the top 10 countries with the 
highest pension benefits for elderly citizens, based on various sources such as the OECD and World Bank:

1. *Netherlands*: 100% of average earnings
2. *Denmark*: 92% of average earnings
3. *Switzerland*: 85% of average earnings
4. *Sweden*: 83% of average earnings
5. *Spain*: 82% of average earnings
6. *Portugal*: 80% of average earnings
7. *Austria*: 78% of average earnings
8. *Finland*: 75% of average earnings
9. *Germany*: 73% of average earnings
10. *Iceland*: 72% of average earnings

Please note that these figures are approximate and may vary depending on individual circumstances and changes in pension systems.

Let me know if you need more information!

Yozenbalki
💫💫💫💫