செர்பியாவில் இருந்து பிரிந்த கொசோவாவில் நேற்றைய தினம், 12.12.2010 முதலாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஈழ விடுதலை பற்றி பேசும் போது சிலர், கொசோவாவை அடிக்கடி ஒப்பிடுவது எனக்கு உடன்பாடில்லை. காரணம், அங்கு நடைபெற்றது ஒரு கிருத்துவ-முஸ்லிம் போராட்டமாக எனக்குப் படுகிறது. அதாவது பத்து சதவிகித செர்பிய தீவிர (orthodox)கிருத்துவர்களுக்கும் தொண்ணூறு சதவிகித அல்பேனிய சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற போர் அது ! தொண்ணூறு சதவிகிதம்-பத்து சதவிகிதத்தை ஜெயித்துவிட்டது!!
20 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட கொசோவோவில் இன்று 1,20,000 கிருத்துவ சேர்பியர்களே வசிக்கின்றனர்! (அதனால்தான் கொசோவா முஸ்லிம்களுக்கு இன்னும் ஐ-நாவில் உறுப்புரிமை தர மேற்குலக மன்றத்தில் மனமின்றி உள்ளனர்)
இன்னும் யூத (கிறித்துவர்கள் உதவுகிறார்கள்) இஸ்ரேல், மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களின் பாலஸ்தீனிய போராட்டமும் அப்படியே! அது ஒரு சமயப் போராட்டம் எனலாம் !
அது போகட்டும்! ஈழப் போருக்கு வருவோம்!
ஈழப் போராட்ட பின்புலம், உலகின் பிற போராட்டங்களைப் போன்று பெரும்பான்மை மக்கள் ஒன்றுசேர்ந்த சமயத் தன்மை அல்லது "ஒரு-சமய-சாயம்" கொண்டிருக்கவில்லை. வெறும் மொழி, புவியியல் ஈர்ப்பு இதை மட்டுமே கொண்டு வலிமையான ஒற்றுமையை எப்படி தமிழர்களிடம் உண்டாக்க இயலும்? நியாய தர்மங்களை பற்றி பிறகு பேசுவோம்! மொழி என்று எடுத்துக் கொண்டால், ஈழப் போருக்கு உதவ வேண்டிய ஆறு கோடித் தமிழகத் தமிழர்களுக்கு தமிழ் மொழிப் பற்று அறவே கிடையாது! தலைவர்களுக்கு அடிமைப் பட்ட அரசியல் பற்று மட்டும் உண்டு !
தமிழ், என்பது இங்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு ஒட்டு வாங்கும் கருவி! மெத்தப் படித்த பிராமணர்களுக்கும் தாம் ஒரு தமிழர் என்பதை விட 'சமஸ்கிருத -தாய்-பெற்ற ஆரியர்' என்றே நினைப்பு இருக்கிறது. அதனால்தான் இன்றுவரை ஒரு சோவும், இந்து ராம், சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட, பார்ப்பனத் தலைவர்கள் ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு தீவிரவாதக் குழுவாகக் காட்டும் முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்!
தமிழ், என்பது இங்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு ஒட்டு வாங்கும் கருவி! மெத்தப் படித்த பிராமணர்களுக்கும் தாம் ஒரு தமிழர் என்பதை விட 'சமஸ்கிருத -தாய்-பெற்ற ஆரியர்' என்றே நினைப்பு இருக்கிறது. அதனால்தான் இன்றுவரை ஒரு சோவும், இந்து ராம், சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட, பார்ப்பனத் தலைவர்கள் ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு தீவிரவாதக் குழுவாகக் காட்டும் முயற்சியில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்!
நமது மத உணர்ச்சியும் அவ்வாறே! எண்பது வருட திராவிட இயக்கங்களின் தாக்கம், ஒரு போலி "இறை-மறுப்பு-சமய மறுப்புக்' கொள்கையை மக்களிடம் புகுத்தி விட்டன! இதற்கிடையில், எந்த அடிப்படையில் தமிழ் மக்களை ஒற்றுமைப் படுத்தி ஒரு மிகப் பெரும் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது?
விடுதலை பெற்ற எந்த ஒரு சிறு நாட்டுக்கும், வேறொரு நாட்டில் வாழும் அதே சமயம், மொழி சார்ந்த மக்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பது என் வாதம்!
இன்று மொழிப் பற்று என்பதும் வளர்க்கக் கூடிய விடயமாகப் படவில்லை. ஆங்கில மொழியின் ஏக போக நாட்டாண்மையை நிறுத்துவது/குறைப்பது என்ற சாத்தியமன்னியில்,
உலகின் பிற மொழிகள் மெல்ல அழிந்து வருவதும் கண்கூடு!
உலகின் பிற மொழிகள் மெல்ல அழிந்து வருவதும் கண்கூடு!
சரி! ஸ்ரீ லங்காவை எடுத்துக் கொண்டால், அங்குள்ள சிங்கள பவுத்தர்களுக்கு, இன்று சீன பவுத்தர்கள் உதவிக் கொண்டு இருக்கின்றனர்! அந்த வரிசையில் சிங்கள- இட்லர்-ராஜ பக்ஷேவுக்கு உதவத் தயாராய் இருக்கும் பிற பவுத்த நாடுகளின் வரிசை இதோ:
ஈழத் தமிழர்களுக்கு அது போல் ஏதோ ஒரு ஆழமான அடிப்படை மீது அமைந்த உணர்வோடு, அதாவது மதம் அல்லது மொழியின் அடிப்படையில் உதவக் கூடிய நாடு(கள்) இங்கு எங்கே இருக்கின்றன?
இதைத் தயை கூர்ந்து கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவும்!
புரிதல்! முதல் படி! அது - ஏதேனும் நல்லதொரு தீர்வுக்கு வழிகோலக் கூடும்!