Translate this blog to any language

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”



இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்! 

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன!


பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்