அன்றொருநாள் நந்திக் கடலருகில்
முள்ளிவாய்க்கால் முன்றலில்
கொன்றொழித்த அந்நியர்கள்
நின்று விடவில்லை தினந் தோறும்
திரை மறைவில் தின்ற படி
குறை யின்றி சிரித்த படி
கூடிக் குலாவி 'குடுமி' வழிப்போந்து
குல மழிக்க குடை சேர்ந்தார்
இது சமயம் எனக் கொண்டார் !
தக்க தொரு ஆட்சி வந்ததென்றே
கள்ளரவர் கரும்புத்தி குறையாது
உள்ளிருந்து எவ்விடமும் பதறாது
மெல்லவே தமிழ்மாய்க்க நகருகிறார்!
மோதி நேர்வழியில் சாய்க் காது
மோதி சூத்திரர்கள் வாய்ப் பாலே
இன்றுவரை சாத்தியங்கள் தேடுகிறார்
உலகம் வாய்பிளந்த அதிசயத்தை
எம்மிளைஞர் ஏற்றிவைத்த தீபத்தை
திரள்மக்கள் பண்பாட்டு குழுமத்தை
அறவலிமை கொண்டார்த்த ஈகியரை
வேறுவழுபூசி பொட்டழித்த பேடியரை
யார் நுழைத்தார் ஈங்கென்று அறியோமா ?
தமிழர்கடல் அரங்கேறும் 'கள்ளிவாய்'க்கால்
மூலவர்கள் அறிவோம் நாம்!
மூலம்வரை வேரறுப்போம்
தெளிந்து பகைமுடிப்போம் !
-யோஜென் பால்கி