Translate this blog to any language

வெள்ளி, 3 மே, 2024

சூரியன் சுடாத வெண்ணிற ஆடை அணிவோமா?


கோடை காலத்தில் வெண்மை நிற ஆடைகள் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த காணொளி! 

மற்ற வண்ணங்களில் உள்ள பலூன்கள் வெப்பம் குவிக்கப்படும் பொழுது உடனே உடைந்து விடுகின்றன! 

ஆனால், வெண்மை நிறத்தில் உள்ள பலூன் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கிறது! 

அத்தோடு வெண்ணிற பலூனுக்குள் உள்ளே வைக்கப்பட்டுள்ள நீல நிற பலூன் மீது வெப்பம் குவிக்கும் பொழுது உடைபடுகிறது; ஆனால் அதன் வெளியே உள்ள வெண்ணிற பலூன் அப்படியே வெப்பம் தாங்குகிறது!

அதான் நம்ம ஆளுங்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க போல!

அரேபியர்கள், வெப்பம் மிகுந்த கொடிய பாலைவனங்களில் பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமும் இதுவாகத்தான் இருக்கும்! 

நாமும் கோடைகாலங்களில் முடிந்த அளவுக்கு வெண்ணிற ஆடைகளை உடுத்துவோம்!

(Video Courtesy: WhatsApp Friends)

Yozenbalki

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க சில எளிய வழிகள்!




கோடையை வரவேற்போம்!

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். 

பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும்.

இதனால்தான் இரவில் மின்விசிறியைப் போட்டதும் சூடான காற்று உள்ளே இறங்கி இயற்கையான ஹீட்டரைப் போல உங்களை வேகவைக்கும். ஆக, வெயில் சூட்டிலிருந்து உங்கள் மொட்டை மாடித் தரையைப் பாதுகாத்தால் அதன் வழியே உங்கள் வீட்டினுள்ளே சீலிங் வழியாக சூடான காற்று வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு என்ன செய்யலாம்?

01. மாடித் தரைக்கு வெள்ளை அடித்தல்:

இதை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், வெள்ளை நிற சுண்ணாம்பை மாடித் தரையில் திக் காக அடிப்பதன் மூலம், வெண்மை நிறம் வெயிலை பிரதிபலிக்கச் செய்து அதன் சூட்டினை தரைக்கு இறங்காமல் செய்கிறது. இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட மாடித் தரையில் நீங்கள் 45 டிகிரி வெயில் அடித்தாலும் வெறும் காலில் நிற்கலாம், குளிர்ச்சியாகவே இருக்கும்.

இதற்கு செலவு குறைவானது முதல் அதிகம் செலவு வைப்பது வரை பல முறைகள் இருக்கிறது.

செலவு அதிகம் பிடிக்கும் முறை:

வெப்பத்தடுப்புக்கென்றே பிரத்யோகமாக விற்கப்படும் சுண்ணாம்புக் கலவைகள். 5 லிட்டர் பக்கெட்டுகள் 2500 ரூபாய் முதல் துவங்குகின்றன. இதில் பல வகைகள், கம்பெனித் தயாரிப்புகள் இருக்கின்றன.

செலவு குறைவான முறை:

சாதாரண ஸ்னோசெம், சூர்யா செம் போன்ற சுண்ணாம்புப் பைகள் 10 கிலோ ரூபாய்.300 க்குள் பெயின்ட்/ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும், அவற்றுடன் 500 கிராம் பெவிகால் கலந்து நீர்விட்டுக் கரைத்து நன்றாக திக் காக மாடித் தரையில் அடிக்கவேண்டும். 750 சதுர அடிக்கு 10 கிலோ சுண்ணாம்பு, பெயின்ட் ப்ரஷ், பெவிகால் எல்லாம் சேர்த்து ரூ.700க்குள் முடிந்துவிடும். ஒரு பெயின்டருக்கு ரூ.700 அதிகபட்ச சம்பளம் கொடுத்தால் கூட காலை 6 மணிக்குத் துவங்கி 7.30க்குள் வேலையை முடித்துவிடலாம். அதிகபட்ச செலவு ரூ.1500.00 மட்டுமே.

சரி மேலே சொன்ன செலவு அதிகம் பிடிக்கும் பிரத்யேக ஹீட் ப்ரூப் பெயின்டிற்கும், கீழே சொல்லப்பட்ட செலவு குறைவான சுண்ணாம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பிரத்தியேக பூச்சுகள் தயாரிப்பவர்கள் தரும் அதிகபட்ச் உழைக்கும் கால அளவு 2முதல் 3 ஆண்டுகள் மட்டுமே. அதிலும் வெண்மை நிறம் மாறும்பொழுது சூட்டைக் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். போக 750 சதுர அடிக்கு ஆகும் செலவென்பது 7500 ரூபாய்க்கு மேல் போகலாம். 

ஆக, வருடத்திற்கு 3 மாதங்கள் வெயிலைச் சமாளிக்கச் சுண்ணாம்பு கொண்டு குறைந்த செலவில் ஒவ்வொரு வருடமும் அடித்துக்கொள்வது செலவு குறைவு என்பதோடு, நாமே களத்தில் இறங்கி இதைச் செய்யமுடியும்.
எனவே உங்கள் பொருளாதாரம் சார்ந்து இந்தச் சுண்ணாம்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

02.ஷேட் நெட்கள்:

பச்சை நிறத்தில் கட்டிடங்கள் கட்ட மறைப்பிற்காகப் பயன்படுத்தும் இந்த பச்சை நிற வலைகளை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பல செடிகள் விற்கும் கடைகளிலும் நிழலுக்காக இதை பந்தல் போலப் போட்டிருப்பார்கள்.

இது 10 அடி அகலம், 150 அடி நீள பண்டல்களாக விற்கப்படுகிறது. 50% நிழல் தருபவை, 75% நிழல் தருபவை, 90% நிழல் தருபவை, என்று உங்களுக்குத் தேவையான நிழல் அளவிற்கு ஏற்ப இவை விற்கப்படுகின்றன.

இவற்றை மொட்டைமாடியில் பந்தல் போல நான்குபக்கமும், சவுக்கு அல்லது மூங்கில் கொம்பு நட்டு அதில் கட்டிப் பயன்படுத்தலாம். இதனால் மாடித் தரையில் நேரடியாக வெயில் பட்டு அதனால் சூடேறுவது மட்டுப்படுவதால் சீலிங் வழியே சூடு வீட்டின் உள்ளே இறங்குவது தடுக்கப்படும்.

50% மட்டுமே கிடைத்தது என்றால் இரண்டாக மடித்தும் பந்தல் போலப் போட்டுப் பயன்படுத்தலாம். சென்னையில் ஒரு பண்டல் 3000 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை, தரம், நிழல் அளவுகள் சார்ந்து விற்பனை செய்யப்படுகிறது. குறைவான அளவுகளில் உங்கள் தேவைக்கு ஏற்பவும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். வெயில் காலம் முடிந்து முறையாக எடுத்துப் பாதுகாத்துப் பயன்படுத்தினால் குறைந்தது 5 வருடங்கள் கூட இந்த ஷேட் நெட்கள் உங்களுக்கு உழைக்கும்.

03. தார்பாலின்கள்:

தார்பாலின்கள் அல்லது உபயோகப்படுத்தப்பட்ட ப்ளக்ஸ்
பேனர்களை நீங்கள் பந்தல் போலப் போட்டால் இருக்கும் பிரச்சனை காற்றடித்தால் கிழிவது மற்றும் அதிக வெயில் பட அவை அதன் தன்மையை இழந்து கிழிந்து / நைந்துபோவது. காற்று உள்ளே வெளியே செல்ல வழியில்லாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் ஷேட் நெட் போன்ற குளிர்ச்சியை இவை தருவதில்லை.

04.தென்னை ஓலைகள் :

குடிசை போடப் பயன்படுத்தும் தென்னை ஓலைகளை மாடியில் பரவலாகப் போட்டு தரையை மூடுவதன் மூலமும் ஓரளவு சூடு இறங்காமல் தவிர்க்கப்படும். மாடியில் குடிசை போடலாம். 10000 ரூபாய்க்கு மேல் செலவாகும். தீப்பிடிக்கக் கூடிய வாய்புகள் இருப்பதால் அரசே சில கட்டுப்பாடுகள் வைத்திருப்பதாகக் கேள்வி, அதிகபட்சம் 4 வருடங்கள் வரும். மழைக்காலத்தில் ஒழுகாமல் இருக்க சில விசயங்கள் செய்யவேண்டும்.

05. ஆஸ்பெஸ்டாஸ் / மெட்டல் ரூஃபிங்:

ஆஸ்பெஸ்டாஸ் போன்றவற்றை உபயோகிப்பது கேன்சரை வரவழைக்கும், பல உடல் நலக்கேடுகள் வரும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுவோம். மேலும் அவற்றால் சூடு அதிகம் உள்ளிரங்கும்.
மெட்டல் ரூஃபிங் எனப்படும் தகடுகளால் மேற்கூரை இடுவதும் ஓரளவு சூட்டைத் தணிக்கும். 1 லட்சம் முதல் உங்கள் தரை அளவைப் பொருத்து செலவாகும்.

06.சான்ட்விச் பேனல்:

இருபக்கம் மெல்லிய தகடுகள் கொண்டு நடுவில் பைபர் போன்ற அதிக கனமில்லாத, கடினமான ஒரு வெப்பத்தடுப்புப் பொருளை வைத்து இந்த கூரையைச் செய்கிறார்கள். சப்தம், வெளிப்பக்க வெப்பம் அல்லது குளிர் உள்ளே வருவது தடுக்கப்படுவது, உள்ளே இருக்கும் குளிர் அல்லது வெப்பம் வெளியே செல்லாமல் தடுக்கப்படுவது போன்றவைகள் இந்த பேனல் மூலம் சாத்தியம். 

25 வருடம் உழைக்கும் என்று சொல்கிறார்கள், குறைந்த காலத்தில் இந்தப் பேனலை வைத்து அழகாக ஒரு வீட்டையே நீங்கள் கட்டிவிடலாம். தேவையில்லாதபோது பிரித்து எடுத்து வேறு இடத்தில் மீண்டும் வீடு கட்டிக்கொள்ளலாம். காங்கிரீட் வீடு கட்டுவதை விட செலவு குறைவுதான். இந்தப் பேனலைக் கொண்டு மேற்கூரை அமைப்பதன் மூலமும் வெயில் சூடு இறங்குவதைத் தடுக்கமுடியும். இதுவும் மெட்டல் ரூஃபிங்கை விட செலவு அதிகம் பிடிக்கும்.

07. சாக்குப் பைகள்:

கோணி எனப்படும் சணல் சாக்குப் பைகளை நன்றாக நீரில் நனைத்து மாடித் தரையில் போடுவதன் மூலமும் ஓரளவு வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். சாக்குப் பை காயக் காய நீர் ஊற்றி நனைக்கவேண்டும், எந்த அளவுக்கு இது சூட்டைக் குறைக்கிறது என்பதை நான் பரிசோதித்ததில்லை.

08. கொடிப் பந்தல்:

முல்லை, கொடி சம்பங்கி, பாஷன் ப்ரூட் மற்றும் பலவகை படர்ந்து வளரும் க்ரோட்டன்கள் போன்றவற்றை நீங்கள் ஒரு பெரிய தொட்டியில் வளர்த்தோ அல்லது தரையிலிருந்து மேலெழுப்பியோ மாடி முழுவதற்கும் படறச் செய்யலாம். இவை பசுமையாக நிழல் தந்து உங்கள் மாடித் தரையில் சூடேற்றாமல் காக்கும். வாசமுள்ள பூக்களையோ, மனதிற்கினிய பச்சை நிறத்தையோ உங்களுக்குத் தரும்.

பெரிய இலைகளை உடைய, அடர்தியாக வளரக்கூடிய வெயில் தாங்கும் எந்தச் செடிகளையும் நெருக்கமாக தொட்டிகளில் வைத்தும் மாடித் தரையை வெயில் சூட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்குவது , பூச்சிகள், தரை பாழாவது போன்றவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதை நீங்கள்தான் அறிந்துகொள்ளவேண்டும். smile emoticon
சரி, எளிமையான வழிகளை மீண்டும் பார்ப்போம்:

முதலில் சாதாரண வெள்ளைச் சுண்ணாம்புடன் தேவையான பெவிகால் கலந்து (இந்த பெவிகால் சுண்ணாம்பு காலில் ஒட்டாமல் இருக்கப் பயன்படுகிறது) நன்றாக நீர்க்க இல்லாமல் திக்காக மாடித்தரையில் அடித்துவிடவேண்டும். அது காய்ந்ததும், நான்கு பக்கம் கம்புகளைக் கட்டி பச்சை நிற ஷேட் நெட்டைக் கட்டிவிடவேண்டும். இரண்டடுக்கு வெப்பத் தடுப்பு முடிந்துவிட்டது. 

மூன்றாவதாக, தென்னங்கீற்று அல்லது வெட்டிய ஓலைகளை வாங்கி ஏற்கனவே வெள்ளையடிக்கப்பட்ட மாடித் தரையில் பரப்பிவிடவேண்டும். இந்த மூன்றடுக்கு வெப்பத்தடுப்பு நிச்சயம் அக்னிநட்சத்திர மதியத்திலும் உங்களுக்கு குளிர்ச்சியான அல்லது வெப்பமில்லாத காற்றையே வீட்டிற்குள் உங்களுக்குத் தரும். இரவில் பேன் போட்டாலும் சூடான காற்று மேலிருந்து இறங்காது. 

இரவில் குளிர்ச்சியான நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு நிம்மதியாக உறங்கலாம். ஏசி பயன்படுத்தினாலும் இந்த முறையில் விரைவில் உங்கள் அறை குளிரூட்டப்படும். மின்சார செலவு குறையும்.

மேலும் சில தகவல்கள்:

சென்னை போன்ற கடல் அருகில் இருக்கும் நகரங்களாக இருந்தாலும், டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற காற்றில் ஈரத் தன்மை குறைவான, கடலிலிருந்து அதிக தூரமிருக்கும் இடங்களுக்கும், வெயில் சூடு இறங்காமல் தவிர்க்க, மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் உதவும். 

நீங்கள் வசதிபடைத்தவராக அல்லது குளிர்ச்சிவேன்டும் என்று விரும்புவராக இருந்தால், சென்னை போன்ற கடல் அருகில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் (வெயில் காலத்தில் வியர்த்துக் கொட்டும்) ஊர்களில் ஏசி எனப்படும் ஏர்கன்டிஷனர்கள் மட்டுமே பயன்தரும்.

தயவு செய்து விலை குறைவு என்று ஏர்கூலர்களை வாங்காதீர்கள். கிலோ கணக்கில் ஐஸையும், குளிர் நீரையும் ஊற்றினாலும், குளிர்ச்சிக்குப் பதில் எரிச்சலையும் உடல் கேட்டையுமே அது தரும். 

அதிக ஈரப்பதமுள்ள இடங்களில் ஏர்கூலர்கள் பலனளிக்காது. பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் போன்ற வறண்ட பிரதேசங்களில் ஏர்கூலர்கள் அற்புதமாக வேலைசெய்து குளிர்ச்சியைத் தரும். (ஏசியும் பலனளிக்கும்.) ஏசி, ஃபேன் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் அறை குளிர்ச்சியாக அதிக நேரம் பிடிக்கும். மின்சார செலவு அதிகரிக்கும்.

ஃபால்ஸ் சீலிங் எனப்படும் உள் அலங்காரங்கள், தெர்மொகோல் பயன்படுத்துவது போன்ற வீட்டினுள்ளே செய்யப்படும் விஷயங்களை நான் இங்கே எழுதவில்லை. வெளிப்புற வெப்பத்தடுப்பு பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். அதைப்பற்றிய விவரம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்களேன்!

நன்றி!!

Courtesy:

-தோழர் திரு இன்பா (Inba) அவர்கள் 

இவர் என்னுடைய ட்விட்டர் நண்பர், 
Vitalist என்ற பெயரில் மிக அருமையான கட்டுரைகள் எழுதுபவர். சீரிய சிந்தனையாளர்!
💫💫🌟🌟💫💫
https://x.com/im_inba1?t=pvfld3fgKNIYn_4EQVdaAg&s=09


திங்கள், 29 ஏப்ரல், 2024

நான் படித்த பார்ப்பன பள்ளியில் அவாள் ஆதிக்க கதைகள்!!


"இட ஒதுக்கீடு ஏன் தேவை?" என்ற விழிப்புணர்வு வலைத்தளங்களில் பேசப்படும் இவ்வேளையில்,

நான் படித்த சென்னை (கே கே நகர்) பாப்பார குரூப் பத்மா சேஷாத்திரி பள்ளியில் எனக்கு நடந்த நிகழ்வை பகிர விரும்புகிறேன்.

ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் அனைத்து பள்ளி மாணவர்களும் காணும்படியாக “ஜெனரல் அசெம்பிளி" (பொதுக் கூடுதல்) நடத்துவார்கள். இதில் பல வகை போட்டிகள் நடத்தப்படும் - வினாடி வினா, பாட்டுப் போட்டி, கருவிகள் இசைக்கும் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள்.

விவாதப் பேச்சுப் போட்டி (debate) ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். என் வகுப்பில் , மற்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் என் அளவுக்கு பேசும் திறமை இல்லாததால், என் அளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆகையால் பங்கேற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்கேற்றுக் கொண்டேன்.

எட்டாவது படிக்கையில் முதல் முறை பங்கேற்றுச் சிறப்பாக பேசினேன். ஆனால், பரிசு ஏதும் கிடைக்கவில்லை. 

ஒன்பதாவது படிக்கையில் மீண்டும் பங்கேற்றுக் கொண்டேன். ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. 

ஆனால், நான் அப்போது கவனித்தது, பரிசு பெற்ற இரண்டு பாப்பார மாணவர்கள் பேச்சை வெகு சுருக்கமாக முடித்துக் கொண்டவர்கள். பெரிதாக புள்ளிகளோ, விடயங்களோ, அவர்கள் பேச்சில் இல்லை. 

சந்திரா சீனிவாசன் என்ற ஆசிரியை போட்டியின் ஒருங்கிணைப்பாளர். அவரை சந்தித்து, என்னிடம் உள்ள குறைகள் என்ன, திருத்திக்கொள்ள உதவுமே, என்று பல முறை கேட்டேன். 

கடைசி வரை அவள் சொல்லவே இல்லை.

பத்தாவது படிக்கையிலும் பங்கேற்றுக் கொண்டேன். தோல்வி தான். இந்த முறை வகுப்பில் எனக்கிருந்த ஓரிரு நண்பர்கள் அவர்களாகவே முன் வந்து என்னைப் பாராட்டினார்கள். 

ஆனால், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பரிசு கிடைக்காததால், அப்பொழுது எனக்கு,“ ஒரு வேளை நாம் அவ்வளவு நல்ல பேச்சாளர் இல்லை போலிருக்கு” என்று முதல் முறையாக தாழ்மனப்பான்மையோடு எண்ணத் தொடங்கினேன்.

என் திறமையில் எனது நம்பிக்கை அடி வாங்கியதால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் நான் என் பெயரைக் கூட கொடுக்க முயற்சிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் எந்த மேடையும் ஏறாமல் கழிந்தன. பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமே மறந்து போனது. 

இப்படியிருக்க, சென்னையில் அப்பொழுது அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் ஒதுக்கும் ஒரு சாதாரண கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கல்லூரி எப்பொழுதாவது, மாணவர்களுக்கு உரை ஆற்ற, சாதனையாளர்கள், துறை வல்லுநர்கள், மற்ற கல்லூரி ஆசிரியர்கள், என்று பெரியவர்களை அழைப்பார்கள்.

அப்படி ஒரு முறை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி என்பவரை பேச அழைத்திருந்தார்கள். அவருடைய அமெரிக்க வாழ்க்கை அனுபவம், அமெரிக்க கல்வி முறை, அமெரிக்கர்களின் உளவியல், என்று இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற அவ்வளவு கருத்துக்களை தமிழிலே அவ்வளவு அழகாக, தெளிவாக பேசினார்.

அந்த பேச்சில் திரு.எம்.எஸ் உதயமூர்த்தி கூறிய ஒரு வாக்கியம் என்னை தட்டி எழுப்பியது:

“உங்களால் ஒன்றை சாதிக்க முடியும்! முடியும், என்று மீண்டும் மீண்டும் தோன்றினால், அது உங்களால் முடியும்!". என்றார்.

அந்த அரங்கில், என் தலையில் அவர் ஒரு ஆயிரம் வாட்ஸ் விளக்கை போட்டுவிட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்தது. மெய் சிலிர்த்தது.

“ஓ !! நாம் நல்ல பேச்சாளர் என்ற நம்பிக்கை வந்து கொண்டே இருக்கிறதே. நான் மேடையில் பல சைகைகள் செய்து, பல புள்ளிகளை எடுத்துரைத்து, அமோக கைதட்டல் பெறுவது போல் காட்சிகள் உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றனவே. ஒரு வேளை, இவர் சொல்வது போல் நம்மால் சிறந்த பேச்சாளராக வெல்ல முடியும் என்பது உண்மையோ?!! அதனால் தான் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ?!!!” என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.

இரண்டே வாரங்கள் கழித்து, சென்னையில் ஒரு மிகவும் புகழ் பெற்ற பெண்கள் கல்லூரியில், ஒரு விவாதப்போட்டி இருப்பதாக அறிவிப்பு ஒட்டினார்கள். மூன்று ஆண்டுகள் மேடையே ஏறாத நான், துணிந்து என் பெயரை, என் கல்லூரியின் சார்பாகக் கொடுத்தேன்.

சென்னையின் பல கல்லூரிகளிலிருந்து, ஒரு 20 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள். லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ்..என்று பெரும் புகழ் பெற்ற கல்லூரிகளிலிருந்து போட்டியாளர்கள். போட்டி துவங்கும் முன் போட்டியாளர்கள் பலர் ஒருவருக்கொருவர் அறிந்த முகங்களாக இருந்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் பலரும் பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அனுபவமிக்கவர்கள். நான் தான் அதில் புதுமுகம். அனுபவம் இல்லாத எனக்கு, கல்லூரி அளவில் இது தான் எனக்கு முதல் பேச்சுப் போட்டியும் கூட.

ஒரு பதினைந்து பேர் பேசி முடித்த பிறகு எனது பெயர் அறிவிக்கப்பட்டது. கேட்பவர்கள் கவனத்தை ஈர்க்க ஒரு கவர்ச்சியான விதத்தில் வணக்கம் சொன்னேன். அரங்கமே எழுந்து கை தட்டியது !! அதற்குப் பிறகு தங்கு தடையின்றி ஆறு போல ஓடியது என் பேச்சு. இடை இடையே முக்கிய புள்ளிகள், சான்றோர்களின் கருத்துக்கள், நூல்களில் இருந்து மேற்கோள்கள், நகைச்சுவை, என்று பேச்சு செல்ல, ஆங்காங்கே நான் பேசுவதை நிறுத்த வேண்டிய அளவு கைதட்டல் வாங்கினேன் !!

பரிசுகள் அறிவிப்பு,

“மூன்றாம் பரிசு...”,

 “இரண்டாம் பரிசு...”

இரண்டிலும் என் பெயர் வரவில்லை.

முதல் பரிசு…..”காளி” !!!!!!!! 

அரங்கமே மகிழ்ச்சியில் கை தட்டியது. என் வாழ்வில் மறக்கவே முடியாத பொன் நாள். இன்றும் அந்த கணத்தை நினைக்கையில் என் உள்ளத்தில் அவ்வளவு பூரிப்பு. 

அன்றைய நாள் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மீதமிருந்த கல்லூரி வாழ்வில் கிட்டத்தட்ட 40 பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று, எத்தனையோ முதல் பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் என்று குவிந்தன. பிற்காலத்தில் இதில் வளர்ந்த என் ஆங்கில பேச்சுத் திறமையே என் வேலையிலும் தொழிலும் அவ்வளவு வெற்றிகளைத் தந்தது.

ஒரு வேளை திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்களின் உரையை நான் கேட்கவில்லை என்றால், எனக்கு அநீதி செய்த அந்த பாப்பார அயோக்கியர்களின் மதிப்பீட்டை உண்மையென நம்பி இந்த திறமை என் பள்ளிப்பருவத்திலேயே ஊக்கம் இல்லாமல் காய்ந்து கருகி காணாமல் போயிருக்கும்.

அந்த பாப்பார அயோக்கியர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து என் "முளைவிடும் திறமையில்" சத்தமே இல்லாமல் திராவகம் ஊற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இதில் திருட்டு, கொலை, குற்றம் எதுவுமில்லை. ஆனால், அவற்றை விடை கொடிய குற்றமாக, கல்வி கிடைக்கும் என்று நம்பி வந்த இடத்தில, அந்தக் கல்வியை ஒரு குழந்தைக்கு கிடைக்க விடாமல் செய்தார்கள், பாப்பார வஞ்சகர்கள்.

என் நீண்ட வாழ்வில் இன்று வரை மறக்க முடியாத, பொறுக்க முடியாத, பாப்பானின் அநீதிகள் இவை. ஒரு பேச்சுப் போட்டியிலேயே இவ்வளவு சூழ்ச்சி செய்கிறார்கள் என்றால், பாப்பான் அல்லாத பிள்ளையின் பாடப்படிப்பிலும், தேர்வுகளிலும், எவ்வளவு தடைகள் போடுவார்கள்? 

உங்கள் பிள்ளைகளை பாப்பான் ஆதிக்கம் இருக்கும் பள்ளிகளில் படிக்க வைத்திருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் அவர்களோடு அவர்கள் பள்ளி வாழ்வை பற்றி நிறைய பேசுங்கள். பள்ளியிலே நூல் படிப்பும் தேர்வும் மட்டும் பிள்ளையின் வாழ்வு இல்லை.

ஆசிரியர்கள், பாப்பான் அல்லாத பிள்ளைகளை மாண்புடன் நடத்துகிறார்களா? அடிக்கடி காரணம் இல்லாமல் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லி அவமானப்படுத்துகிறார்களா?, படிப்பு தவிர மற்ற நிகழ்வுகளில், போட்டிகளில், சரியான வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா?, பாடம் பாப்பாரப் பையனுக்கு ஒரு தரமாகவும், பாப்பான் அல்லாத பையனுக்கு மட்டமாகவும் சொல்லிக்கொடுக்கப்படுகிறதா ?, பிள்ளை கேட்கும் ஐயங்களுக்கு ஆசிரியர் 
பொறுமையாக விளக்குகிறாரா?, 

முக்கியமாக உங்கள் பிள்ளையுடன் மற்ற பிள்ளைகள் நல்லபடியாக பழகுகிறார்களா, இல்லை மறைமுகமாக ஒதுக்கப்படுகிறானா ….என்று உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் ஒரு பள்ளியின் பங்கு எவ்வளவோ இருக்கிறது... அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.

ஒவ்வொன்றிலும் பாப்பான், பிஞ்சுகள் உள்ளத்தில் இரக்கமே இல்லாமல், கண் இமைக்காமல், அமிலம் ஊற்றுவான். எச்சரிக்கையாக இருங்கள்.

சமூக நீதிக்கான போரை தந்தை பெரியார் விட்ட இடத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் கொண்டு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

ஓய மாட்டோம்!
களமாடுவோம்!
வெல்வோம்!!

Courtesy:

எனது twitter நண்பர் 
திரு. காளி அவர்கள் 

(அவர் மிகச் சிறந்த தமிழ் ஆங்கில எழுத்தாளர்; பேச்சாளர், சீரிய சிந்தனையாளர்! சமூகப் பற்று நிறைந்தவர்! சிறுக சிறுக இதை எழுதி ட்விட்டரில் போட்டு இருந்தார்... அவரிடம் கேட்டு வாங்கி, அவரது அனுபவம் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதனால் இங்கு பதித்து இருக்கிறேன்!)

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இதுக்கு பேசாம வெள்ளக்காரன் கிட்ட ....



I.T. கட்டிவிட்டேன்
GST கட்டிவிட்டேன்
VAT கட்டிவிட்டேன்
CST கட்டிவிட்டேன்
Service Tax கட்டிவிட்டேன்
Excise Duty கட்டிவிட்டேன்
Customs Duty கட்டிவிட்டேன்
Octroi கட்டிவிட்டேன்
TDS கட்டிவிட்டேன்
ESI கட்டிவிட்டேன்
Property Tax கட்டிவிட்டேன்
Stamp கட்டிவிட்டேன்
CGT கட்டிவிட்டேன்.....

Water Tax கட்டிவிட்டேன்
Professional Tax கட்டிவிட்டேன்
Corporate Tax கட்டிவிட்டேன்
Road Tax கட்டிவிட்டேன்
STT கட்டிவிட்டேன்
Education Cess கட்டிவிட்டேன்
Wealth Tax கட்டிவிட்டேன்
TOT கட்டிவிட்டேன்
Capital Gain Tax கட்டிவிட்டேன்
Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன்
TOLL GATE FEE கட்டிவிட்டேன்...

மாமூல் கட்டிவிட்டேன்...

அப்பா... மூச்சு வாங்குது...!! 😭😭

இதுக்கு பேசாம வெள்ளக்காரன் 
கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாமேடா... !!

அவன் கேட்டது வெறும் 3% Tax தானே?!?!?

Courtesy:

-ட்விட்டர் நண்பர்
திரு. இன்பா (Mr.Vitalist)