Translate this blog to any language

சனி, 3 ஆகஸ்ட், 2019

டெங்கு: தோலுரிக்கும் கட்டுரை !

இது வாட்சப்பில் வந்தது! மிக அருமையான பதிவு, அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அப்படியே இங்கு படியெடுத்து ஒட்டி உள்ளேன்! இதை எழுதிய ஹீலர்.இரா.மதிவாணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பலவும்!
-yozenbalki 
-----------------------------------------------------------


இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செறிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை  நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.