நீள அகல உயரம்
முப்பரிமாணம்;
அறிவில் காண்பது; உலகமாவது
அளவைக்குட்பட்டது!
காலமற்ற காலம்
நான்காம் பரிணாமம்;
அன்பில் உணர்வது; தியானமாவது
அளவு கடந்தது!
- யோஜென் பால்கி
🌸☘️🌹
குறை காணும் கண்கள்
(இந்த கவிதை எப்படியோ கைபட்டு போய்விட்டது! நினைவில் இருந்து மீண்டும் எழுதுகிறேன்)
ஓயாமல் நம்மை ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறோம்!
உனது கண்ணில் நானும் எனது கண்ணில் நீயுமாய் தென்படும் குறைகள்!
அட! குறை என்பது தான் என்ன?
நீ என்னிடம் காணும் குறைகள் பிறர் பார்வையில் நிறைகளாய் உணரப்படும்; உனதும் அவ்வாறே!
உண்மையில், எனது குறைகள் என்பன ஒரு பார்வைக் கோண மாறுபாட்டில் உட்குவிந்த நிறைகளே எனலாமே!
YozenBalki